Thursday, October 2, 2014

குளிர்கால தொண்டை புண் (Winter Sore Throat)

பொதுவாக குளிர்காலங்களில் நோய் கிருமிகளின் தாக்குதல் அதிகமாவே இருக்கும். இவற்றால் நம் தொண்டையின் பாதிப்பு அதிகமே!!! தொண்டையில் புண் (Sore throat) வரும். பின் நமக்கு பிரச்சனையே. அதற்காக அடிக்கடி ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் மேலும் பல பிரச்சனைகள் வரும். ஆகையால் இதற்காக கவலைப்படாதீர்கள். உடனடி நிவாரணம் இதோ தயார்!!!!
நிவாரண மருந்து செய்யும் முறை:
———————————-
தேவையான பொருட்கள்:
1), இரண்டு எலுமிச்சை பழங்கள் (Lemon)
2), இரண்டு விரல்கள் அளவு இஞ்சி (Ginger)- (ஆள்க்கட்டி விரல்,நடுவிரல் போன்று)
3), ஒரு கப் அளவு சுத்தமான தேன் (ஒரு கப் என்பது 225ml, அதிக தேன் இருந்தாலும் பிரச்சனை இல்லை)
4), 300ml கொள்ளலவு அளவு உள்ள காலி ஒரு ஜார் ( 300ml capacity Jar)
செய்முறை:
————-
1), முதலில் எலுமிச்சை பழத்தையும், இஞ்சியையும் நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.
2), பிறகு இஞ்சியை Coin போல் சிறிதாக வெட்டவேண்டும்.
3), எலுமிச்சை பழத்தையும் மெல்லிய Slice ஆக வெட்டவேண்டும்
4), பின்னர் 300ml கொள்ளலவு அளவு உள்ள காலி ஜாரில் ( 300ml capacity Jar) வெட்டப்பட்ட எலுமிச்சை, இஞ்சி எடுத்துக்கொள்ளுங்கள்,
5), பின்னர் எலுமிச்சை, இஞ்சி இவற்றின் மீது தேனை நன்றாக ஊற்றுங்கள்.
6), மேலும் தேனால் எலுமிச்சை பழமும், இஞ்சியும் நன்றாக ஊற வேண்டும், இடைவெளி இல்லாமலும், அவற்றை தேன் முழுவதும் மூடி இருக்கும் அளவு தேன் இருக்கவேண்டும்.
7), பின்னர் ஜாரை(JAR) மூடி பிரிஜில் (fridge) வையுங்கள்.
8), Jelly போன்று ஆகிவிட்ட பின் பயன்படுத்தலாம்.
9), இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
———————-
பிரிஜில்(Fridge) வைக்கப்பட்ட Jellyபோன்று இருக்கும் மருந்திலிருந்து ஒரு ஸ்பூன் (Spoon) மருந்தை எடுத்து தம்ளரில் வையுங்கள், பின்னர் நன்றாக கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். பிறகு அதை நன்றாக கலக்குங்கள். இப்போது குடியுங்கள். உங்கள் “தொண்டைப்புண்”சரியாகி விடும். நன்றாக பேசுங்கள்.
(குறிப்பு: சுடு தண்ணீரில் தேன் கலந்து குடித்தால், உடல் பருமன் குறையும்- Note this beauty tips)
நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/

No comments:

Post a Comment