Thursday, October 16, 2014

நமது சமூக பாரம்பரிய மருந்துகள்

குழந்தைப் பேறுகால சமயத்தில், தாயும், சேயும் நலமுடன் இருக்க நமது பெண்டிர்கள் காலம், காலமாக உபயோகித்து வரும் “பேறுகால லேகியம்” செய்யும் முறையை கீழே கொடுத்துள்ளோம்.
1. குழந்தை பேறுகால மருந்துகள்
1. பேறுகால லேஹியம்
தேவையானவைகள் :-
தமிழ் பெயர்
ENGLISH NAME(if available)
அளவு கிராமில்
1. தேசாவரக்குச்சி
THESAVARAKKUCHI
20
2. அக்கரா
AKKARA
20
3. ஓமம்.
BISHOP’S WEED
50
4. ஆனைத்திப்பிலி
AANAITHIPPILY
20
5. அரிசித்திப்பிலி
ARISITHIPPILY
20
6. பரங்கிபட்டை
PARANGIPATTAI
20
7. நாட்டுபெருங்காயம்
ASAFOETIDA
10
8. மிளகு
BLACK PEPPER
20
9. வால்மிளகு
CUBEBS
20
10. வெள்ளைமிளகு
WHITE PEPPER
20
11. விரலிமஞ்சள்
DRIED TURMERIC
20
12. சுக்கு
DRIED GINGER
25
13. ஏலம்
CARDAMOM
10
14. சாரணை
SAARANAI
50
15. கடுகு
MUSTARD SEED
10
16. சித்தரத்தை
CHITTHARATHAI
20
17. கிராம்பு
CLOVES
10
18. கருப்பட்டி
PALM JAGGERY
750
19. தேன்
HONEY
300
20. நெய்
GHEE
300
21. இஞ்சி
GINGER
60
குறிப்பு:-
மேலே உள்ள (1 – 18) பொருட்கள் நமது ஊர்களில் உள்ள நாட்டுமருந்து
கடைகளில் கிடைக்கும்.
செய்முறை:-
மேலே உள்ள பொருட்களை (1 – 17 மட்டும்) நல்ல வெயிலில் காய வைக்கவும்.பின்பு அவைகளை அம்மியிலோ அல்லது ஆட்டுஉரலிலோ சிறிது இடித்துவிட்டு,மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த பொடியை மூன்று முறை நன்கு சலிக்கவும். முக்கால் லிட்டர் அளவு இந்த பொடி கிடைக்கும். பொடியை காற்றுப்புகாத பாட்டிலில் வைக்கவும். இந்த பொடி மூன்று மாதங்களுக்கு தேவையான லேஹியம் செய்ய போதுமானது. இந்த பொடியை மூன்றாக பிரித்து, மாதம் ஒரு முறை கிண்டினால், லேஹியம் சுவையாக இருக்கும்.
ஒருமுறை லேஹியம் கிண்டுவதற்கு வேண்டிய பொருட்கள் :-
1. 250 மில்லி மருந்து பொடி
2. இஞ்சிச்சாறு – 250 மில்லி
3. தேன் – 250 மில்லி
4. நெய் - 200 மில்லி
5. கருப்பட்டி தூள் – 250 கிராம்
செய்முறை :-
ஒரு வாணலியில் 500 மில்லி தண்ணீர் விட்டு, கருப்பட்டி தூளை போட்டு கொதிக்கவிடவும். நன்கு கரைந்தவுடன், வடிகட்டவும். அத்துடன் இஞ்சிசாறு மற்றும் மருந்து பொடியையும் சேர்த்து நன்றாக கிண்டவும். அடுப்பை மிதமாக எரிய விடவும். பின்பு, பாதியளவு நெய்யும், தேனும் விட்டு நன்கு கிண்டவும். இந்த கலவை கெட்டியாகும் போது, மீதி நெய்யையும், தேனையும் விட்டு நன்கு வேகும்வரை கிண்டவும். வாணலியில் ஒட்டாமல் லேஹியம்சுருண்டு வரும் பொழுது, வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும். நன்கு ஆறியபின், காற்றுப்புகாதபாட்டிலில் வைக்கவும்.
குழந்தை பிரசவம் இயல்பாக இருந்தால், இந்த லேஹியத்தை, 16ம் நாளில் இருந்து கொடுக்கலாம். அறுவைசிகிச்சை பிரசவமாக இருந்தால், இந்த லேஹியத்தை 30ம் நாளில் இருந்து கொடுக்கவும்.
இரவு உணவிற்கு பின் 2 மணி நேரம் கழித்து, ஒன்றரை தேக்கரண்டி அளவு லேஹியம் கொடுக்கவும். லேஹியம் சாப்பிட்டு 2 மணிநேரத்திற்கு, தண்ணீரோ/பாலோ குடிக்கக்கூடாது. வெற்றிலை போட்டால் நல்லது.
நன்றி :- http://mudaliartm.org/

No comments:

Post a Comment