Tuesday, October 28, 2014

காயகற்பம் - ஒரு விளக்கம்!!!!!

பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.
வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும். இரண்டாவதாக இரசவாதம் மூலமாக முப்பு என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடம் 500 வருடம் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.
உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.
மனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள். அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் லம்பிகா யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடியதே காயகற்பக் கலையாகும்.
------------------------------------------------------------------------------
வேம்பு கற்பம் (காயகற்பம்).
புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
ஆமாப்ப பட்டையைத்தான் வெட்டிவந்து
அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
கொண்டிடவே யனுபான வகையைக்கேளு
மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே
நந்தீசர் சகலகலை ஞானம் -1000
நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார்
தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை தேடி அதன் பட்டையை வெட்டிவந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும் இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு ,கொத்தமல்லி இலையை இடித்த சாறு இரண்டும் சமமாகக்கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும் இதை வெயிலில் வைத்து காயவிடவும் இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக்கலந்து வெயிலில் காயவிடவும்
இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று பெயர் இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர் இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு டீ ஸ்பூன் அளவு)எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை -மாலை)என நாற்பது நாள் உண்ணவும்
இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும், தசைகள் இறுகும், தலைமுடி நரை மாறும் ,பார்வைத்திறன் அதிகரிக்கும், உடல் இளவயது தோற்றம் பெரும், மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்து திடப்படும், உடல் உறவில் அதிகநேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்வோருக்கு பேரின்பசித்தி கிட்டும் மற்றும் ஞானத்தின் ஆறு நிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த "வேம்பு கற்பம்" உண்டவனைக் கண்டு காலன் என்ற எமன் அஞ்சுவான் என குறிப்பிடுகின்றார்
இப்படி மகத்துவம் வாய்ந்த "வேம்பு கற்ப சூரணம்"செய்து உண்டு அனைவரும் பெரும் பயனடையலாமே.

No comments:

Post a Comment