Tuesday, October 14, 2014

குழந்தை வளர்ப்பு – சித்த மருத்துவர் அருண் சின்னையாவின் ஆலோசனை- இறுதி பகுதி

சில நேரங்களில் இட்லியும், தோசையையும் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதே நாம்தான் என்று சொல்லலாம். தரமான உணவுகளை நிறைய கொடுத்து பழக்கலாம். பழங்கள் கலந்த உணவுகளை நிறைய கொடுத்து பழக்கலாம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி உணவாக Lays, Kurkure போன்றவற்றை தராமல் இருப்பது மிகவும் நல்லது. அதற்குப் பதிலாக பழங்களை நறுக்கி சிற்றுண்டி நேரங்களில் கொடுத்து பழக்கலாம். பள்ளி நிர்வாகமும் அதை ஊக்கிவிக்கலாம். அதுமாதிரி செய்யும் பொழுது வரக்கூடிய இளையதலைமுறைகளை, நல்ல ஆரோக்கியமான தலைமுறையாக நாம் கண்டிப்பாக மாற்ற முடியும். மூலிகைகளைக் கொடுத்து சளி, இருமல் போன்றவற்றை விரட்டுவதற்கான வேலைகளைச் செய்யலாம்.
kuzhandhai valarppu1-6Tonsilsபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். TonsilOperation அந்த வயதில் தேவையா?, 6 வயதில் 7 வயதில் TonsilOperation செய்தால் கூட மறுபடியும் ஐஸ்கிரீம் சாப்பிடும்பொழுது, கூல்டிரிங்ஸ் சாப்பிடும் பொழுது மறுபடியும் Tonsil வரக்கூடிய வாய்ப்பு உள்ளது, அது Primary Complex ஆக மாறலாம். Primary Complex என்றால் சிறுவர்களுக்கு உண்டாகக்கூடிய மூச்சு ஒவ்வாமை நோய். இதனால் நிறைய குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். ஒரு சில பெற்றோர்கள் தன்னுடைய தகுதியை விட்டுக்கொடுக்காமல் மருத்துவர்கள் என்னசொல்கிறார்களோ அதற்கு ஏற்றார்போல் நல்ல வகையாக தலையாட்டக்கூடிய பெற்றோர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். தங்களுடைய தகுதிக்காகவே தன்னுடைய குழந்தைகளை பெரிய பெரிய மருத்துவமனையில் சேர்த்து அங்கு பார்த்து தன்னுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய பெற்றோர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். எனவே நம் முன்னோர்கள் பயன்படுத்திய மிக எளிமையானது நான் சொன்னது. துளசி, தூதுவலையைப் பயன்படுத்தலாம். கற்பூரவல்லி என்பது சாதாரணமாக வீட்டிலேயே தொட்டியிலேயே வளர்க்கலாம். கற்பூரவல்லி இலையில் மூன்று இலையை எடுத்து நன்றாக பிழிந்து சாறெடுத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள் எப்பேற்பட்ட சளியாக இருந்தாலும் கண்டிப்பாக முழுமையாக சரியாகிவிடும்.
அதேபோல் சுக்கு, சாதாரணமாக கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்கு, மற்றும்சித்தரத்தை, அதிமதுரம் இம்மூன்றையும் சமஅளவிற்கு 50 கிராம் அளவிற்கு வாங்கி அதை ஒன்றிரண்டாக தட்டிவைத்துக்கொண்டு அதில் சிறிது எடுத்து தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பனவெல்லம் சேர்த்து அதை வடிகட்டி குழந்தைகளுக்குக் கொடுத்துப்பாருங்கள், பழக்கப்படுத்திப்பாருங்கள் கண்டிப்பாக இருமல், சளி அனைத்துமே முழுமையாக சரியாகிவிடும். இதெல்லாம் நாமதான் செய்ய வேண்டும். முதலில் இதை பிடிக்கவில்லை என்ற சூழல் இருக்கும், இதைக்குடித்தால் சரியாகும் என்று எடுத்துக்கூறும்பொழுது கண்டிப்பாக கேட்பார்கள். குழந்தைகளுக்கு தெளிவான பேச்சு வரவேண்டும் என்றால் சுத்தமான தேன் கொடுத்து பழக்கவேண்டும். நிறைய குழந்தைகளுக்கு தேன்கூட கொடுப்பது கிடையாது. ஜாம் வேண்டுமென்றால் நாம் குப்பி குப்பியாக வாங்கிக் கொடுப்போம் ஆனால் தேன் தரமாட்டோம். சுத்தமான தேனை வாங்கி நாக்கில் தடவிவிடுவது ஒரு அற்புதமான முறை.
3Tonsil யைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம். கரிசிலாங்கன்னி கீரையின் பொடியையும், அதிமதுரத்தையும் சமஅளவு கலந்து வைத்துக்கொண்டு இதை அரை தேக்கரண்டி அளவு தேனில் கலது காலை, இரவு என்று இரண்டு வேளை குழந்தைகளுக்குக் கொடுத்துக்கொண்டே வந்தோம் என்றால் Tonsil முழுமையாக சரியாகிவிடும், முழுமையாக குணமாகும். Primary Complex என்று சொல்லக்கூடிய மூச்சு ஒவ்வாமை நோய்க்கு குழந்தைகளுக்கு தூதுவலை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, அதிமதுரம், சித்தரத்தை இந்தப் பொருட்களை சமஅளவு கலந்து தூள் செய்து வைத்துக்கொண்டு ஒரு மூலிகைக் கூட்டுப்பொடியாக இதை வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் அரைத்தேக்கரண்டி, இரவு அரைதேக்கரண்டி தேனில் கொடுத்துக்கொண்டே வந்தீர்கள் என்றால் கண்டிப்பாக Tonsil சரியாகிவிடும்.
இல்லையென்றால் சித்தமருத்துவக்கடைகளில் கிடைக்கக்கூடியது திப்பிலி ரசாயனம். திப்பிலி ரசாயனம் என்பது அதே சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், கரஞ்சீரகம், காட்டுச்சீரகம், வெள்ளை மிளவு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, மாசிக்காய் இதெல்லாம் சேர்த்து செய்யக்கூடிய ஒரு அற்புதமான லேகியம். நல்ல காரமாக இருக்கும், இந்த லேகியத்தை ஒரு குழந்தைக்கு தொடர்ந்து கொடுத்தீர்கள் என்றால் மூச்சுத்திணறல் (Wheezing) சரியாகும். அம்மா, அப்பாவிற்குத்தான் தன்னுடைய குழந்தை Wheezing வரும்பொழுதுதான் என்னாச்சோ, ஏதாச்சோ என்ற பதறல், பயம் எல்லாமே பெற்றோருக்கு வரத்தான் செய்யும். எனவே வரும் முன் காப்பதற்குத்தான் மூலிகை. வரும்முன் காப்பதற்குத்தான் சித்தமருத்துவம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து வருவதற்கு முன்பே கொடுக்க வேண்டும். எப்பொழுதுமே வளரக்கூடிய குழந்தைக்கு என்னவேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று சொல்லி கண்டதைக்கொடுத்து உடம்பைக் கெடுப்பதை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது.
அதே போல் குழந்தைகள் நலமேம்பாடைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கக்கூடிய foodssuppliments ஐ தயவுசெய்து தராதீர்கள். foodssuppliments ஐ நாமே பண்ணலாம். நவதானியங்கள் எள், கொள்ளு, பச்சைப்பயிறு, காராமணி, சுண்டல், வரகு, தினை, குதிரைவாலி, பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூப்ட் இதெல்லாமே சேர்த்து ஒரு நவதானிய சத்து மாவுமாதிரி, சிறுதானிய சத்துமாவு மாதிரி நீங்கள் தயார் செய்து அதை உங்களுடைய குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தலாம். நீங்கள் கவர்ச்சி கரமான புட்டிகளில் வரக்கூடியவற்றை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதில் செயற்கையாக சில இராசாயனபொருட்கள், செயற்கையாக இருக்கக்கூடிய சில வைட்டமின்கள் எல்லாவற்றையும் கலந்து கொடுக்கும் பொழுது ஒவ்வாமை என்பது மிக எளிதாக உருவாகும். அதில் காபி சுவை, வெண்ணிலா சுவை இருக்கிறதால் மற்றும் இன்னும் சில சுவைகள் எல்லாம் சேர்ப்பதனால் குழந்தைகள் லயமாக சாப்பிடும், அப்படியே சாப்பிடுவேன் என்று சாப்பிட்டு அப்படியே வயிறு உபாதை உண்டாகி வயிறு கழிச்சலுக்கு உள்ளான குழந்தைகளின் எண்ணிக்கையை நான் அறிவேன். அந்தமாதிரி எல்லாம் இருக்கக்கூடாது. இந்த மாதிரி நவதானிய சத்துமாவு, சிறுதானிய சத்துமாவு தயார்செய்து அதை குழந்தைகளுக்கு இனிப்பு உருண்டையாக பணவெல்லம் சேர்த்து தொடர்ந்து செய்து கொடுக்கலாம். அந்த மாதிரி செய்து கொடுக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். சூடான பாலில் இந்த மாவை சேர்த்து நன்றாக காய்ச்சி, மறுபடியும் காய்ச்சி கஞ்சி மாதிரி கொடுத்து பழக்கலாம். ஆரோக்கியம் சார்ந்த முறைக்கு நல்ல active ஆன நல்லசத்து தரக்கூடிய ஊட்டமான உணவுகளைக் கொடுக்கும் பொழுது குழந்தையின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும், எந்தத் தடங்கலும் இல்லாமலும் இருக்கும்.
10 வயது வரைக்கும் ஒரு குழந்தையை வளர்ப்பதற்குத்தான் நாம் சிரமப்படவேண்டும். 10 வயதிற்குப்பிறகு அந்தக் குழந்தைக்கு endocrinology சிறிது சிறிதாக அபிவிருத்தியாக ஆரம்பித்துவிடும். அதாவது ஒரு குழந்தை மழலைக்குரலில் கீச்சுக்குரலில் அம்மா,அப்பா என்று ஒரு பெண் பேசுவது போல பேசிய ஒரு பையன் திடீரென்று குரல் உடையக்கூடிய சூழல் 10 வயதிற்குப்பிறகு. பார்த்தோம் என்றால் அந்த மழலைக்குரல் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து முகத்தில் லேசாக மீசை அரும்புவது இந்த மாதிரி முடியெல்லாம் வளர ஆரம்பிக்கும் பொழுது நாளமில்லா சுரப்பு மண்டலம் தூண்டப்படுகிறது. அந்த மாதிரி நாளமில்லா சுரப்பி தூண்டும்பொழுது அவனுக்கென்று தனியாக ஒரு ஆளுமை வரும் வரைக்கும் ஒரு குழந்தையை குழந்தையாக வளர்ப்பது, குழந்தைக்கான ஆரோக்கியத்திற்கு நல்ல உணவுகளையும், நல்ல மூலிகைகளையும் மருந்தாக மாற்றிக்கொடுப்பது எல்லாமே பெற்றோர்கள் செய்யக்கூடிய கடமை. கண்ட கண்ட மருந்துகளைக் கொடுப்பது, அடிக்கடி குழந்தைக்கு காய்ச்சல் வருகிறது என்பதற்காக நிறைய ஊசிகள் போடுவது இதெல்லாம் தேவையில்லாத ஒரு செயல். எப்பொழுதுமே ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வருவது, தலைவலி வருவது, வாந்தி-பேதியாவது இயல்பாக வரக்கூடிய ஒன்று. இது எல்லாமே வருகிறது என்றால் அந்தக் குழந்தைக்கு ஏதோ ஒரு ஒவ்வாமை இருக்கிறது என்றுதான் அர்த்தம். அந்த ஒவ்வாமை என்பது உணவு ரீதியாகத்தான் வருகிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் முழுமையாக தெளிவாக உணர்ந்துகொண்டு அவர்களுக்குத் தரவேண்டிய உணவுகளை முறையாக பட்டியலிடவேண்டும்.
ஒரு குழந்தைக்குத் தரக்கூடிய உணவில் கண்டிப்பாக கீரை அவசியம் இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய உணவில் உலர்பருப்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்குத் தரக்கூடிய உணவுகளில் கோதுமை சார்ந்த உணவுகள் நிறைய வரவேண்டும், சிறுதானியம் சார்ந்த உணவுகள் நிறைய வரவேண்டும். இட்லி ஓரளவிற்கு வரலாம். இடியாப்பம் வரலாம், அதீதமாக தரக்கூடிய தோசையின் அளவை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. மிக எளிமையாக வேலை முடியவேண்டும் என்பதற்காக வாரத்திற்கு ஒரு நாள் தோசைக்கு மாவை ஆட்டி அதை ஒரு வாரம் பயன்படுத்தக்கூடிய தாய்க்குலங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உண்டு. எப்பவுமே காலை என்றாலே இரண்டு தோசை. இரண்டு கரண்டி மாவை லேசாக எண்ணெய் போட்டு தடவிக் கொடுத்தால் அதற்குப் பெயர் தோசை என்று கொடுத்தோம் என்றால் கண்டிப்பாக அதில் சத்து வராது.
பள்ளிக்குக் கொடுக்கக்கூடிய சிற்றுண்டிகள், புளித்த மாவில் செய்த தோசை, மதியம் கொண்டு சென்ற தயிர்சாதம் எல்லாமே சேர்ந்து கபத்தை அதிகப்படுத்தும். கபம் அதிகமாகும் பொழுது கண்டிப்பாக குழந்தைகள் தடுமாறுவார்கள், திணறுவார்கள், செறிவு (concentration)மாறும், எனவே நிறைய சிக்கல்கள் வரக்கூடிய ஒரு சூழல் உண்டு. ஆக நான் சொன்ன உணவுப் பொருட்களையும், மருந்துப்பொருட்களையும் பெற்றோர்கள் பழக்கப்படுத்துங்கள். பத்து வயது வரையும் அவர்கள் குழந்தைகள் தான். அந்த மழலை அமுதத்தை ஒழுங்காக முறையாக பாவித்து ஆரோக்கியமான ஒரு வாழக்கைக்கு அடித்தளம் செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் பருவத்துக்கு போகும் பொழுது நல்ல தெளிவான மனநிலையோடு ஆரோக்கியமான சூழலோடு அவர்களுக்கான எதிர்காலத்தை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய சூழல் கண்டிப்பாக உண்டாகும். எனவே குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்கள் நினைத்தால் கண்டிப்பாக சாத்தியமாகும். நிறைய மருந்துகள் சொல்லியிருக்கிறேன், தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

No comments:

Post a Comment