Tuesday, October 13, 2015

புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் / புற்று நோய் (prostate glands)

இது பொதுவாக வயதான மனிதர்களுக்கு வரும் தொல்லை. இதை சதையடைப்பு அல்லது நீரடைப்பு என்பர். விந்துப் பை மற்றும் சிறுநீர் பையிலிருந்து வெளியேற்றும் குழாய்கள் சேரும் இடத்தருகே உள்ளது. இது விந்தையும் சிறுநீரையும் முறையாக வெளியாக்க உதவுகிறது. சிறுநீர் பையின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக சிறுநீர் பாதையை சூழ்ந்து காணப்படும் பரஸ்தகோளம் என்னும் புராஸ்டேட் கோளத்தின் வீக்கமே முதுமையில் தோன்றும் சிறுநீர் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது.புராஸ்டேட் திரவத்தை தாங்கி, விந்து திரவத்துடன் இணைந்து, உறவின் போது சீராக வெளிப்படுவதற்கு உதவியாக இருக்கும் இந்த கோளங்கள் முதுமையின் காரணமாக சற்று பெருக்கின்றன. அத்துடன் இதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து, கடினமாகி வீக்கமடைந்து, ஆண்களின் சிறுநீர் வெளியேறும் பாதையை இறுக்கி பிடிக்கின்றன.
இதனால், சிறுநீர் பையில் நிறையும் சிறுநீரானது வெளியேற இயலாமல் சிறுநீர் பையின் உள்ளேயும், சிறுநீர் பாதையை நோக்கியும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துவதால் முதியவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால், புராஸ்டேட் வீக்கத்தினால் சிறுநீர் பாதை சுருங்கி சிறுநீர் பையில் முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் தங்கி விடுவதால், சில மணி நேரங்களில் பல முறை எழுகின்றனர். இதனால், அவர்கள் தூக்கம் கெடுவதுடன் சுற்றியுள்ளவர்களும் தொல்லையாகி அவர்களும் எரிச்சலடையும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த தொல்லைகள் மக்களால் கல்லடைப்பு, சதையடைப்பு (prostate glands) என்று கூறப்படுகின்றது. இதற்க்கு எத்தனையோ எளிய மூலிகை மருந்துகள் உள்ளன. சிறு பீளை, மற்றும் சிறு நெருஞ்சில் செடிகளை வேருடன் பிடுங்கி நிழலில் காயவைத்துப் பொடியாக்கிக் கொள்க. இரண்டும் சேர்ந்த 100கிராம பொடிக்கு 10 கிராம் மிளகும், 10 கிராம் சீரகமும் பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். காலை, மாலை உணவுக்கு முன் 5கிராம் பொடியை 2 குவளை நீரிலிட்டு அரைக்குவளையாக காய்ச்சி வடித்துக் குடிக்க புரஸ்த கோளங்களின் வீக்கம், புண், புற்று நீங்கி சுகமடைவார்கள். மேலும், அனைத்து சிறு நீரக கோளாறுகளையும் இந்த மூலிகைகளை கொண்டு தீர்க்க முடியும்
http://siddhahealer.blogspot.in/2011/04/blog-post_23.html

No comments:

Post a Comment