Sunday, October 18, 2015

மலை வேம்பு - மருத்துவப் பயன்கள் !!!

கருப்பைக் கோளாறுகள்
மலை வேம்பு இலைக் கசாயம் 
தினமும் காலை என
மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே போதும்
அனைத்து கருப்பைக் குன்றங்களும் கோளாறுகளும் நீங்கி
நலம் அடைவர்
தாய்மைப் பெரும் அடைவர்
கசாயம் செய்யும் முறை
நூறு மில்லி கொதிக்கும்
நீரில் ஐந்து கிராம் மலை வேப்ப மரத்து (மலை வேம்பு) இலைகள் போட்டு
நன்கு கொதிக்க வைத்து
இருபது மில்லியாகச் சுருக்கி
இறக்கி வடிகட்டி
காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்
இது அனுபவ வைத்தியமாகும்
பயன்படுத்திப் பலன் அடையுங்கள்
பெரும்பாடு
மலை வேம்பு மரப் பட்டை --- ஐந்து கிராம்
நாட்டுப் பசும்பால் ------ நூறு மில்லி
மலை வேம்பு மரத்துப் பட்டையை
நாட்டுப் பசும்பாலில் போட்டு காய்ச்சி
இறக்கி வடிகட்டி
பத்து நாட்களுக்கு ஒருமுறை என
மாதம் மூன்று முறை மட்டும்
இரண்டு மாதங்கள் மட்டும்
குடித்துவர
பெண்களின் பெரும்பாடு என்னும் அதி உதிரப் போக்கு
வயிற்று வலியுடன் கூடிய மாதவிலக்கு நோய்கள்
பரி பூரணமாகக் குணமடையும்
பொடுகு
பலருக்கு தொல்லை தரும் பொடுகு நோய்க்கு மிகச் சிறந்த மருந்து
பயன் படுத்திப் பலன் அடையுங்கள்
சிகைக்காய் ---பத்து கிராம்
மலை வேம்பு இலைகள் --பதினைந்து கிராம்
இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து
வெந்நீரில் முதலில் தலையைக் கழுவி
பின் பின் இந்த விழுதை தலை முழுவதும் வேர்க்கால்களில் நன்கு படும்படி தேய்த்து
ஐந்து நிமிடங்களால் ஊறிய பின்
வெந்நீரில் தலைக்குக் குளித்து வர பொடுகு நீங்கும்

குறிப்பு
முருங்கை மரம் ஆண்களுக்கு எப்படி நன்மை செய்யுமோ
அதே போல
மலை வேம்பு மரம் பெண்களுக்கு மிகுந்த நன்மை செய்யும் மரம் ஆகும்
மலை வேம்பு மரம் என்பது நம் ஊர்களில் இருக்கும் நாட்டு வேப்ப மரத்திநின்று
வேறு பட்ட ஒன்றாகும்
தற்போது எல்லா ஊர்களிலும் வளர்க்கிறார்கள்
இதன் கன்றுகள் ஈஷா வில் கிடைக்கிறது
தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ் அவர்கள்

No comments:

Post a Comment