Monday, November 23, 2015

நல்லதை பகிரந்துக் கொள்வோம்.!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஈரோடு மில்க்கி மிஸ்ட் பன்னீர் கம்பெனியில்
வேலையில் இருக்கும் போது.ஒருமுறை மாடிப்படி ஏறும் போது கால் வழுக்கி விழுந்துவிட்டேன்.
அப்போது தோள் பட்டையின் பின்புறம் 
தசை பிடிப்பு ஏற்பட்டு சில நாட்கள் அவதிப்பட்டு வந்தேன்.
எனக்கு ஆங்கில மாத்திரை மருந்தகள் என்றாலே மிகவும் கவனமுடன் முடியாதபோது மட்டும் எடுத்துக் கொள்வேன்.
ஹோமியோ,சித்தா,ஆயுர்வேதா,அல்லோபதி என கண்டமேனிக்கு வாசிப்பு அனுபவமும் உடையவன்.
எனவே மாறறுமுறை மருதஃதுவம் மூலமே தீர்வுகாண்பேன்.
ப்ரூபன்,டைக்லோபெனக்,பைராக்ஸிகேம்,கெட்டோரோலேக்,மெத்தோகார்பமால்,அசிக்லோபெனக்.,இண்டோமெத்தாசின்,நிமுசூலைட் என பல பெயின் கில்லர்களும்.அதன் செயல்பாடும்,பக்கவிளைவுகளும் நன்குத் தெரியும்.
எனவே அல்லோபதியைத் தவிர்த்து
குணமாக்கிக் கொள்ள விரும்பினேன்.
அச்சமயம் ஜெயமோகன் ப்ளாக்கை தொடர்வாசிப்பு செய்துக் கொண்டிருந்தேன்.
அதில் இதுப்போன்ற வலிகளுக்கு
கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை
"கொட்டம் சுக்காதி தைலம்"
என்று ஒருதைலம் நல்லகுணம் அளிப்பதாகவும்.
அதில் அவர் சுயஅனுபவத்தையும் பதிவிட்டிருந்தார்.
ஒரு நண்பர் மூலம் கோட்டக்கல்லில் இருந்து.,அந்த தைலத்தை வரவழைத்து பயன்படுத்தி குணம் அடைந்தேன்.
தற்போது விவசாயத்தில் ஆள் பற்றாக்குறையால் நானும் இன்னொருவரும் சேர்ந்து 30மூட்டை வரகை தைத்து(80Kg) சுமந்து.,வண்டியில் ஏற்றிவிட்டேன்.
அப்போதுதான் தெரிந்தது மனசுக்கு வயசாகமல் இருபெபதும்,உடலுக்கு வயசானதும்.
என்ன பழயபடி முதுகில் சதைப்பிடிப்பு.
நேற்று திருவண்ணாமலை சென்றிருந்தேன்.அங்குள்ள ஆயுர்வேத பார்மஸியில் "கொட்டம் சுக்காதி தைலம்"வாங்கி வந்தேன்.இரவில் நன்கு தேய்த்து விட்டேன்.
காலையில் இயல்பான செயல் செய்யும் அளவுக்கு வலிபோய் விட்டது. நன்றி ஜெ.மோ.
குறிப்பு.
******
மூட்டு வீக்கம்,தசைபிடிப்பு,நரம்பு வலி,கழுத்துவலி நன்கு வேலை செய்கிறது.
============================================================
நண்பர் திரு.தங்கராஜ் பகிர்ந்தது.கொட்டம் சுக்காதி தைலம் எல்லா ஊர்களிலும் உள்ள ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கிறது.உபயோகித்து பலன் அடையுங்கள்

Saturday, November 21, 2015

திருநீற்று பச்சிலை (திருநீருபத்ரி)

நீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடந்து, விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மூலிகை இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகளவு வளர்கிறது. இந்த இலையை கசக்கி முகர்ந்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும். வாந்திகளுக்கு இது கைகண்ட மருந்து. குறிப்பாக, ரத்தவாந்திக்கு மிகவும் பயன்தரக்கூடியது. இதற்கு, உருத்திரசடை, பச்சை சப்ஜா என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.
பருக்கள் பட்டுப்போகும்
புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இது பயன்படுகிறது. அஜீரணத்தைப் போக்கும் குணமுடையது. படர்தாமரை உள்ளிட்ட சரும நோய்களை குணமாக்கும். இதன் தைலத்தை தனியாகவோ, எண்ணெயில் சேர்த்தோ தலைக்கு வைத்து குளித்தால் பேன், பொடுகு பறந்து போகும்.
பருவ வயதுடையவர்களின் முக்கிய பிரச்னை முகப்பரு. குறிப்பாக இளம் பெண்கள் பருக்களை ஒழிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட அழகுசாதன முகப்பூச்சுகளை வாங்கித் தடவுகிறார்கள். சிலர் பருக்கள் உடனே போக வேண்டுமே என்பதற்காக, அளவுக்கு அதிகமாக முகப்பூச்சுகளை தடவுகிறார்கள். இதனால் பரு இருந்த இடம் சூட்டினால் வெந்து, கருப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது. பணத்தை கொடுத்து, பாதிப்பை ஏன் வாங்க வேண்டும்.
மனிதகுலம் வளமாக வாழத் தேவையான அனைத்தையும் படைத்த இயற்கை, இதற்கொரு தீர்வு வைத்திருக்காதா.. என்ன? அப்படிப்பட்ட தீர்வுதான் திருநீற்றுப் பச்சிலை. வீடுகளில், தொட்டிகளிலோ, புறக்கடையிலோ ஒரே ஒரு செடி இருந்தால் போதும், உங்கள் முகப்பரு பிரச்னை இட்ஸ் கான்... என ஆனந்த கூச்சல் இடுவீர்கள்.
தேவையற்ற நீரை வெளியேற்றும்
இதன் இலையை கசக்கி, சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். சாதாரண பருக்கள் மட்டுமல்ல.. புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும். அதேபோல கண்கட்டி உள்ளிட்ட சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதன் சாறு அருமையான நிவாரணி. இதன் விதைகள் குளிர்பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுகின்றன.
இதன் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
ஆண்டி ஆக்ஸிடெண்ட்
பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.
இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது. இன்னும் பல நோய்களுக்கும் திருநீற்றுப் பச்சிலையில் தீர்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
http://naattumarunthu.blogspot.in/

Wednesday, November 11, 2015

நெருஞ்சி !!!

வரப்பு ஓரத்தில் வளர்ந்து, முதிர்ந்து, தலைசாய்ந்து நிற்கும் நெல் கதிரைப் பார்த்தபடி, வெறுங்கால்களுடன் நடக்கும் வாய்ப்பு, நகர்ப்புறத்துக் குழந்தைகளுக்கு இல்லை. அப்படி வெற்றுக்கால்களில் நடக்கையில், ‘சுருக்’ எனக் குத்தி ரணப்படுத்தும் நெருஞ்சி முள்தான் இந்த வார நாட்டு மருந்துக் கடை நாயகன்.
மூலிகை என்றதும் நம்மில் பலர், மூன்று கடல், மூன்று மலை தாண்டிப் போனால், அங்கு உள்ள ஜடாமுடிச் சித்தர் காட்டும் ஏதோ ஒரு செடி எனக் கற்பனை செய்கிறோம். உண்மையில் வரப்பு ஓரங்களிலும், வேலி ஓரப் புதர்களிலும் மிகச் சாதாரணமாய்த் தென்படும் நோய் தீர்க்கும் மூலிகைகளுள் ஒன்று நெருஞ்சி.
‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்’ எனப் பெண்ணின் பாத மென்மைக்கு அலாதியாய் ஓர் உவமையைச் சொன்ன வள்ளுவன் காலம் தொட்டு நம் தமிழர் வாழ்வில் இடம் பெற்ற மருத்துவ மூலிகை நெருஞ்சி. “மேகவெட்டை, நீர்ச்சுருக்கு வீறுதிரி தோடப்புண், வேகாசுரம் தாகம் வெப்பம் விட்டொழியும்” என அகத்தியர் குணவாகடத்தில் அடுக்கடுக்காய் பல நோய்களை அகற்றும் என அறுதியிட்டுச் சொன்ன நெருஞ்சி கோடை காலத்து ஸ்பெஷலிஸ்ட்.
சாதாரணமாய்க் கோடையில் வரும் நீர்ச்சுருக்குக்கு, நெருஞ்சி முள்ளை ஒன்றிரண்டாய் இடித்து, தேநீர் வைப்பது போல் கஷாயமிட்டு, காலை மாலை என ஐந்து நாட்கள் குடித்துவந்தால் நீர்ச்சுருக்கு குணமாகும். சிறுநீர்ப் பாதைத் தொற்று என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் அவஸ்தை தரும் பிரச்னை.
ஆன்டிபயாடிக் சிகிச்சை எடுத்தால், இரண்டு வாரங்கள் அமைதியாய் இருக்கும் இந்தக் கிருமிகள், மீண்டும் அவதாரம் எடுத்து ஆட்டிப்படைக்கும். சில நேரத்தில் பிறப்புறுப்பில் வரும் அரிப்பு பாக்டீரியாவாலா, பூஞ்சையாலா எனக் குழப்பத்தில் இருக்கும் நோயாளிகளும் உண்டு. அவர்களுக்கு எல்லாம் நெருஞ்சி மூலிகை ஒரு வரப்பிரசாதம்.
நெருஞ்சியுடன் கொத்துமல்லி விதை (தனியா) சம அளவு சேர்த்து, ஒன்றிரண்டாக உடைத்துக் கஷாயமிட்டு, தினம் இரு வேளை 60 மி.லி தந்தால் ஆண்களுக்கு வரும் புராஸ்டேட் கோள வீக்கத்துக்கும் அதனைத் தொடரும் கிருமித்தொற்றுக்கும் பயனளிக்கும்.
மேகச்சூட்டினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு, நெருஞ்சி முள் மற்றும் அதன் வேரைப் பச்சரிசியுடன் சேர்த்து, வேகவைத்து வடித்து, கஞ்சியாகக் கொடுக்கலாம். வெள்ளைப்படுதலுடன், சூதகபாதையில் (Salphynx) ஏற்படும் அழற்சிக்கும், நெருஞ்சி கசாயம் பயனளிக்கும்.
சிறுநீரகக் கற்களுக்கு நெருஞ்சி முள் மிகச் சிறந்த மருந்து. நெருஞ்சி, நீர்முள்ளிச் செடி, மாவிலங்கப்பட்டை, சிறுகண்பீளைச் செடி இந்த நான்கையும் சமபங்கு எடுத்து 400 மி.லி நீர் ஊற்றி, 60 மி.லியாகக் குறுக்கிக் காய்ச்சி வடித்து, காலை மாலை என இருவேளை 45 நாட்கள் கொடுத்துவந்தால், 5-10 மி.மீ உள்ள கற்கள் உடைந்து நீங்கும்.
நீண்ட நேர பேருந்துப் பயணத்துக்குப் பிறகு ஏற்படும் கால் வீக்கம் சிலருக்கு வாடிக்கையாக வரும் தொல்லை. இந்த வீக்கத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பின் தொடக்க நிலைகூடக் காரணமாக இருக்கலாம். அந்த சமயத்தில், பிற மருந்துகளுடன், நெருஞ்சி உதவிடும். சிறுநீரைப் பெருக்கி, வீக்கத்தைப் போக்கிடும் மருத்துவ குணமும் நெருஞ்சிக்கு உண்டு.
நவீன வேளாண்மையில், ரசாயன களைக் கொல்லிகளால் விரட்டி, வதைத்து எறியப்படும் ஏராளமான மூலிகையில் நெருஞ்சி மிக முக்கியமானது. அதுவும் மானாவாரி, தேரி நிலமான தூத்துக்குடி மாவட்டத்து நெருஞ்சிமருத்துவச் சத்துக்களைக் கூடுதலாய்க் கொண்டது என்பது, தென் தமிழகத்து மக்களுக்கு இனிக்கும் செய்தி.
-
வம்ச விருத்திக்கு நெருஞ்சி!
ஸ்டாஃபிலோகாக்கஸ் ஏரெஸ் (Staphylococcus aureus) பாசிலஸ் சப்டீலிஸ் (Bacillus subtilis), இ-கோலி (E coli), டிப்தீரியா என அத்தனை வகை பாக்டீரியாவையும் கேன்டிடா அல்பிகன்ஸ் (Candida albicans) எனும் பூஞ்சையையும் தனி ஆளாய் நின்று எதிர்க்கும் ஆற்றல் நெருஞ்சிக்கு உண்டு என சமீபத்திய ஆய்வுகள் சான்று அளித்துள்ளன.
நெருஞ்சியின் மிக முக்கியப் பயன், ஆண், பெண் இருபாலருக்கும், ஹார்மோன்கள் குறைவால் ஏற்படும் குழந்தைப்பேறின்மையைச் சரிசெய்வது. டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனை நெருஞ்சி உயர்த்தும் என்பதும், ஆண் விதைப்பையில் உள்ள விந்துவின் தாய் செல்களான செர்டோலி செல்களை ஊக்குவித்து, விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதையும் நவீன அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கு.சிவராமன்
சித்த மருத்துவர்

Monday, November 2, 2015

நாட்டு மருந்துக் கடை!!!

திப்பிலி! திரிகடுகு எனும் மூலிகை மும்மூர்த்திகளில் மூன்றாமவர். சுக்கையும் மிளகையும் அறிந்த அளவுக்கு, இந்தத் தலைமுறை திப்பிலியை அறிந்திருக்கவில்லை. மிளகைப் போன்றே மிக முக்கிய மருத்துவக் குணம் உடையது இது. “கட்டி எதிர்நின்ற கடும் நோயெல்லாம் பணியும்” என தேரன் சித்தர் சிலாகித்துப் பாடிய இந்த திப்பிலி, சாதாரண சளி, இருமல் முதல் இளைப்புநோய் வரை குணப்படுத்தும். இளைப்புநோய் என்பது குழந்தைகளை எடை குன்றச்செய்து, காயச்சலும் சளியுமாய் இருக்கச்செய்யும் இளங்காசம் எனும் பிரைமரி காம்ப்ளக்ஸ் தான்.
‘‘மாமனுக்கு மாமனென மற்றவனுக்கு மற்றவனாக காமனெனுந் திப்பிலிக்குக் கை” என தேரன்சித்தன் பாடியதை விரித்தால், விளங்கும் விஷயம் அலாதி. பாரதத்தில் சகுனி மாமனால் வந்த பிரச்னையை, கிருஷ்ண மாமான் தீர்த்துவைத்ததுபோல், ஆஸ்துமா நோய் மாமன் போல் மரபாய் வந்திருந்தாலும், மற்றவனாய் சொல்லப்பட்ட கோழையை விரட்டி, ஆஸ்துமாவை விரட்டும் என்பதுதான் அப்பாடலின் பொருள். திப்பிலிக்கு சித்த மருத்துவத்தில் காமன் என்று இன்னொரு பெயர் உண்டு. பித்தம் தாழ்ந்து இருக்கும் ஆஸ்துமாவில், பித்தத்தை உயர்த்திச் சீராக்கும் தன்மையும் இருக்கிறது என்பதுதான் பொருள். கூடவே திப்பிலி பித்தத்தினை உயர்த்தி, விந்தணுக்களையும் உயர்த்தும் தன்மை கொண்டது.
ஆஸ்துமா நீக்கும் திப்பிலி
ஆஸ்துமாவைக் கட்டுக்குள்வைக்க இன்று நவீன மருத்துவம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் சில மாதங்கள் இரவில் மட்டும் ஆன்டி லியூகோட்ரைன்ஸ் (Anti Leucotrines) கொடுப்பது வழக்கம். இந்த மருந்து செய்வதைத் திப்பிலியும் செய்யும். ஆஸ்துமாவுக்கு மூச்சுஇறுக்கத்தை (Tightness of chest) குறைக்க வேண்டும். மூச்சுக் குழலை விரிவடையச் (Broncho dilation) செய்ய வேண்டும். வெளியே வர மறுக்கும் வெந்த சவ்வரிசி போன்ற சளியை, மூச்சுக்குழல் நுரையீரல் பாதையில் இருந்து பிரித்தெடுத்து வெளியேற்ற (Mucolytic) வேண்டும். இத்தனையையும் திப்பிலி செய்யும். காற்று மாசுக்களால் ஹிஸ்டமினும், லியூகோட்ரைனும் தூண்டப்பட்டு, மூச்சுக்குழலை இறுகவைப்பதைத் திப்பிலி தடுப்பதுடன், திடீர் கோழைப்பெருக்கம் நடப்பதையும் நிறுத்தும் என்பதைப் பல சர்வதேச மருத்துவ ஆய்வேடுகள் உறுதிபடுத்தியுள்ளன.
சித்த மருத்துவ மருந்தான திப்பிலி ரசாயனம், ஆஸ்துமா நோய்க்கென கொடுக்கப்படும் மிகச் சிறந்த தடுப்பு மருந்து. திப்பிலையைப் பிரதானமாகவும், இன்னும் பல சளி நீக்கும் உலர் மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த மருந்து, சித்த மருந்துகளில் ஆஸ்துமாவுக்கான மருந்துப் பட்டியலில் தலையானது.
பல நோய் போக்கும் திப்பிலிமிளகைவிட அதிகக் காரமும் வெப்பத்தன்மையும்கொண்ட இந்தத் திப்பிலியை கைப்பக்குவ மருந்தாக வீட்டில் பல வகையில் பயன்படுத்த இயலும். இளவறுப்பாய் வறுத்துப் பொடித்த திப்பிலிப் பொடியை, 3 சிட்டிகை அளவு எடுத்துக்கொண்டு, வெற்றிலைச்சாறும் தேனும் சேர்த்துக்கொடுக்க, நுரையீரலிலிலிருந்து வெளியேற மறுக்கும் கோழையை வெளியேற்றி இருமலைப் போக்கும்.
கபம் நெஞ்சில் கட்டிக்கொண்ட, மலச்சிக்கலும் உள்ள குழந்தைகள் அல்லது முதியோருக்கு, மலத்தை இளக்கி வெளியேற்றி கபத்தைக் குறைப்பதுதான் ஆஸ்துமா நோய்கான தீர்வைத்தரும். இதற்கு, திப்பிலி பொடியையும், கடுக்காய் பொடியையும் சம அளவு எடுத்து, தேன் சேர்த்து உருட்டி இரவில் கொடுக்கலாம்.
உடலெங்கும் பரவி, போக மறுக்கும் சாதாரணப் பூஞ்சையை நிரந்தரமாகப் போக்க, மேலுக்கு சீமையகத்திச் சாறு போடுவது, நலுங்கு மாவு போட்டுக் குளிப்பதைத் தாண்டி, தினம் ஒரு வேளை திப்பிலி பொடியை 2 சிட்டிகை அளவு சாப்பிடுவது நல்லது என்கிறது சித்த மருத்துவம்.
திப்பிலி செடியின் வேரும்கூட பெரும் மருத்துவப் பயன்கொண்டது. இதற்குத் திப்பிலி மூலம் என்று பெயர். திப்பிலி போலவே சளி நீக்கும் குணம் கொண்ட இந்த மூலிகை வேரை, பாலில் விட்டு அரைத்து, காய்ச்சிய் பாலில் கலந்துகொடுக்க இடுப்பு, முதுகுப் பகுதியில் வரும் வலிகளான ஸ்பான்டிலோசிஸ், லும்பாகோ (Spondylosis, lumbago) போன்றவை குணமாகும்.
பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கும் வெள்ளைப்படுதலும் இருந்தால், திப்பிலி 30 கிராம், தேற்றான் கொட்டை 30 கிராம் அரைத்துப் பொடித்து, காலை வேளையில் மூன்று சிட்டிகை சாப்பிட்டுவர நீங்கும் என்கிறது, சித்த மருத்துவ குணபாட நூல்.
நாட்டுமருந்துக் கடையில் அரிசித்திப்பிலி, யானைத்திப்பிலி என இரண்டு வகை கிடைக்கும். அரிசித்திப்பிலி, எனும் சன்னமாக சிறிதாக இருக்கும் திப்பிலிதான் மருத்துவத்துக்கு மிகவும் சிறப்பானது. உதிராது, உலர்ந்து முழுமையாய் இருக்கும் இதனை வாங்கி, இளவறுப்பாக வறுத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது, இது விளையும் சீசனில் வாங்கிப் பத்திரப்படுத்தி ஃப்ரெஷாகப் பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.
திப்பிலி ரசாயனம் எப்படி செய்வது?
திப்பிலி 100 கிராம், மிளகு, சுக்கு ஏலம், சீரகம், திப்பிலி வேர், வாய்விடங்கம், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒவ்வொன்றும் 25 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் இள வறுப்பாய் வறுத்து, நன்கு மையாகப் பொடித்துகொள்ள வேண்டும். பனை வெல்லத்தைப் பாகு காய்ச்சி, அந்தப் பாகின் மேல் சொன்ன பொடியை அளவாகப் போட்டு, லேகியமாய் வேகவைத்து, ஆறிய பின்னர், சிறிது தேன் சேர்த்துவைத்துக்கொள்ள வேண்டும். சளி, இருமல், கோழை ஆஸ்துமா உள்ள வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய கைமருந்து இது. இந்த லேகியத்தைச் சிறு சுண்டைக்காய் அளவு குழந்தைகள் முதல் பெரியவர் வரை மாலைப்பொழுதில் சாப்பிட, இரைப்பு நோய் எனும் ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்க முடியும். ஆஸ்துமா இழுப்புக்குப் பக்கவாத்தியம் செய்யும், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் ஆகியவற்றையும் இந்த மருந்து போக்கும் என்பது கூடுதல் செய்தி.
நன்றி-டாக்டர்விகடன்
-Powenraj @ http://www.eegarai.net/t118750-topic

Saturday, October 31, 2015

நோய் ஒன்றே, வழியும் ஒன்றே !!!

இன்றைய உலகில் மனிதனுக்கு ஏறத்தாழ ஐந்தாயிரம் நோய்கள் இருப்பதாக, மருத்துவ உலகம் பட்டியலிட்டு உள்ளது. நாளுக்கு நாள் உலகில் மருத்துவ முறைகள் அதிகரித்தும், மருந்துகள் அதிகரித்தும், மருத்துவர்கள் அதிகரித்தும், மருத்துவமனைகள் அதிகரித்தும், நோய்களின் பட்டியல் மட்டும் குறைவில்லை. மாறாக, நோய்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. எடுத்துக்காட்டாக, முன்பெல்லாம் காய்ச்சல் என்று ஒரே ஒரு காய்ச்சல் நோய்தான் இருந்தது. இன்றைய நாளில், டைபாடு காய்ச்சல், மூளைக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், எபோலோ காய்ச்சல் என காய்ச்சல்களின் பட்டியல் நீள்கிறது.
ஆனால் இயற்கையில் நோய் ஒன்றுதான். அதற்கான தீர்வும் ஒன்றுதான். நோய் பலப் பல அல்ல. தீர்வும் பலப் பல அல்ல. மருத்துவ உலகம் தான் நோய் பற்பல, அதன் தீர்வுயும் பற்பல என இயற்கைக்கு மாறாகக் கூறி, மனிதரைத் திசைத் திருப்புகிறது. மனிதரும் திசை மாறிய பறவை மாதிரி, திண்டாடுகின்றனர்.. உதாரணமாக, ஒரு பலவீனமான இருசக்கர மிதிவண்டி டியூபில் காற்றடித்தால், அந்த டியூபின் எந்தப்பக்கம் பலவீனமாக உள்ளதோ, அந்தப் பக்கம் புடைக்கும். ஆனால் டியூபில் பஞ்சர் இல்லை, காற்றும் வெளியேறவில்லை. இதுபோல், உலக மனிதர் அனைவரும் தானியத்தைத் தான் சமைத்துப் பிரதான உணவாக உண்டு வருகின்றனர். அரிசி, கோதுமை, கம்பு, ராகி மற்றும் இதர சிறுதானிய உணவுடன், துணை உணவாகக் காய்கறி, கீரை, மற்றும் மீன், கோழி, இறைச்சி, முட்டை, பால், பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலியவற்றையும் மசாலாப் பொருட்கள் சேர்த்து சமைத்து உண்டு வருகின்றனர். இத்தகைய உணவுகள் எல்லாம் கழிவு உணவுகள். தூய்மை இல்லாது, அழுக்கு நிறைந்தவை. எனவே இத்தகைய உணவில் உள்ள கழிவுகள், ஒருவருக்கு எலும்பு, நரம்பு பலவீனமாக இருந்தால், எலும்பு நரம்புகளில் படிந்து எலும்பு நரம்பு நோய் என மருத்துவ உலகம் நோயைப் பிரிக்கின்றது. இதுபோல் இதயம் பலவீனமாக இருந்தால் இதயத்தில் படிந்து இதயநோய், நுரையீரல் பலவீனமாக இருந்தால் நுரையீரலில் படிந்து நுரையீரல் நோய், மூளை நோய், கல்லீரல் நோய், கணைய நோய், இரைப்பை நோய், கண் நோய், பல் நோய், காது நோய், விதை வீக்கம் நோய், எனப் பல்வேறு நோய்களுக்கும் ஒவ்வொரு நோய்க்காக மருந்துகள், மருத்துவம், அறுவைச் சிகிச்சை எனப் பல்வேறு சிகிச்சைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.
கழிவுகளின் தேக்கமே நோய், கழிவுகளை வெளியேற்றுவதே மருத்துவம்
நாம் உண்ணும் உணவு, அருந்தும் பானம் இவைகளில் உள்ள கழிவுகளின் வழிகளில் தேக்கம் தான் நோய்; கழிவுகளை இயற்கை வெளியேற்றுவது தான் மருத்துவம். பின் வருமுன் காப்போம் எனும் உடலியக்க விதிப்படி, கழிவுகள் இல்லாத உணவையும், பானத்தையும் படிப்படியாகவோ, அல்லது விரைவாகவோ அவரவரது மன உறுதிக்கேற்ப மாற்றி உண்டு, அருந்தி வாழ்வது தான், கழிவுகள் தேங்க வாய்ப்பில்லாது, நிரந்தரமாக நோயின்றி வாழும் வழியாகும்.
கழிவுகள் இல்லாத, கழிவுகள் தேங்க வாய்ப்பில்லாத உணவு, இயற்கை உணவுகள் தான்; பானம், இயற்கை பானங்கள் தான். இவ்வாறு உடலில் கழிவுகள் தேங்க வைக்கும் அனைத்து சமைத்த செயற்கை உணவுகளையும், செயற்கை பானங்களையும் உண்ண, அருந்த மறுத்து, கழிவுகள் தேங்க வைக்காத இயற்கை உணவுகளை நன்கு பசித்த போது, நன்கு மென்று உண்டு, இயற்கை பானங்களை அருந்தி வாழ முயலுவதுதான் நோயின்றி வாழும் முயற்சிகள், வழிமுறைகளாகும். இதற்கு மருத்துவம் தேவையில்லை; மருந்துகள் தேவையில்லை. மருத்துவர்கள் தேவையில்லை.
இவ்வாறாகத்தான் உயர்திணை உயிரினமாகிய மனிதரைத் தவிர, மனிதரை விடக் கீழான ஐந்தறிவு, நாலறிவு, மூன்றறிவு, இரண்டறிவு, ஓரறிவு உள்ள அனைத்து அஃறிணை உயிரினங்களும் தத்தமக்குரிய இயற்கையுணவை உண்டு, இயற்கை பானம் அருந்தி, இயற்கையோடு இயைந்த வாழ்வு, தனது உயிரினம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை வாழ்ந்து வருகின்றன. நமக்கு வழிகாட்டிகளாக வாழ்கின்றன. அவைகட்கு மழையில் நனைந்தால் ஜலதோஷமில்லை. வெயிலில் அலைகையில் தலை வலி இல்லை. உடல் வலியில்லை. உடலில் எந்தவித நோயுமில்லாமல் எவ்வித மருந்தையோ, மருத்துவரையோ மருத்துவத்தையோ மருத்துவமனையையோ நாடாது, நோய்க்கு நிரந்தரமாகவே இடம் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றன. குளிர் தாங்க இயலாது ஆடையோ, கம்பளியோ இன்றி, குளிர்காலத்தில் உதகமண்டலத்திலும், கொடைக்கானலிலும் மற்றும் இதர மலைப் பிரதேசங்களிலும், கட்டிடமே இல்லாது குளிர் தாங்கி, மனிதரைவிட அனைத்து வகைகளிலும் உடல், உயிர் ஆற்றலோடு வாழ்ந்து வருகின்றன.
ஆறறிவு படைத்த மனிதராகிய நாமோ, மழையில் நனைந்தால் ஜலதோஷம் (உடலில், தோஷமுள்ள சமைத்த உணவை உண்டு, தோஷத்தை வைத்துக் கொண்டு, தோஷமில்லாத ஜலத்தில் தோஷம் எனக் கூறிவருகிறோம்), எனக் கூறுகிறோம். கழிவுகள் நிறைந்த சமையலுணவில் உலக மாந்தர்கள் எல்லாம் உயிர் வாழ்வதால், வெயிலில் அலையும் போது, உடலிலுள்ள கழிவுகள் தலைவலி (பிரசவ வலி போல்) எனும் ரூபத்தில் வெளியேறுகின்றன. உடல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்கிறது. (Body heals itself) எனும் இயற்கை உயிரியல் படி, தண்ணீர் உடலிலுள்ள சளி எனும் தோஷத்தையும், சூரிய ஒளி (வெயில்) உடலிலுள்ள கழிவுகளை தலைவலி எனும் உபாதை மூலம் வெளியேற்றும் நல் நிகழ்வுகளை, நோய் எனக் கருதி மருந்தை நாடி, அக்கழிவுகள் வெளியேறா வண்ணம், மருந்து மூலம் உடலுக்குள் அமுக்கித் தேங்க வைத்து, பின் நாட்களில் அதன் விளைவாக கடுமையான நோய்களுக்கு ஆளாகிறோம்.
மனிதருக்குரிய இயற்கையுணவு, உயரமான, வலுவான மரங்களிலிருந்து கிடைக்கும் தேங்காயும் (தெங்கன்பழம்), அனைத்துப் பழ வகைகளுமேயாகும். இயற்கை பானம், பச்சைத் தண்ணீரேயாகும். கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரல்ல. குளோரின் போட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரல்ல.
எனவே ஆருயிர் உலக மானிட உடன் பிறப்புக்களே, நோயின்றி வாழவும், எத்தகைய நோயையும் மருத்துவமின்றி, பக்க விளைவுகள் இன்றி அறுவை சிகிச்சை இன்றி, மருத்துவப் பரிசோதனை இன்றி, இயன்ற வரையில் முற்றிலும் அல்லது பெரும்பாலும் நமக்குரிய இயற்கை உணவாகிய தேங்காய், பழ வகைகள் ஆன உணவை உண்டு, இயற்கையோடியைந்து இயற்கை வாழ்வு வாழ்ந்து, இன்னலின்றி, துயர் இன்றி ஆரோக்கிய ஆனந்த வாழ்வு நிரந்தரமாக வாழ முயலுவோம். மரணமில்லாப் பெருவாழ்வு இலக்கை அடையும் வழியும் இதுதான். விதியை மதியால் வெல்லும் மதியும் இதுதான்.
உலகை நல் உலகாக உண்டாக்க எத்தனையோ புரட்சிகள் (வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, அமைதிப் புரட்சி மற்றும் பிற ) தோன்றியது போல் இயற்கை உணவைப்புரட்சி இயற்கை வாழ்வுப் புரட்சி மலர்ந்து, நம்மையும் பிற உயிரினங்களையும் இப்பிரபஞ்சத்தையும் அமைதியாகக் காக்க முயலுவோம்! ஒன்றுபடுவோம். அணி திரள்வோம்.
By டாக்டர் அப்பன்
தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986

மனிதனுடைய மரணத்துக்குக் காரணம்?

தமிழகத்தில் வாழ்ந்த, சித்த வேதத்தைத் தோற்றுவித்த ‘காகபுஜண்டர்’ எனும் சித்தர், மனிதருக்கு மரணம், நெஞ்சுச் சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி ஆகியவற்றால்தான் ஏற்படுகின்றது என்றும், இச்சளிகள் மனிதனது உடலில் இல்லையென்றால், மரணமில்லை என்றும் கூறியுள்ளார். அவ்வாறாயின், மனிதருக்கு மட்டும் நெஞ்சுச்சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி ஏன் வருகின்றது?
பால், பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய உணவுகளும், அனைத்து அசைவ உணவுகளும், சமைத்த தானிய உணவுகளும், உப்பும் நாம் தினமும் சாப்பிடுவதால்தான் நமது உடலில் நெஞ்சுச் சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி உண்டாகிறது. இவை எல்லாம் வெளியேறாது அங்கேயே தங்கி, நாள்பட்டு மிகுதியாகி மனிதருக்கு இறப்பை ஏற்படுத்துகின்றது. உப்பு சேர்க்காமல் சமைத்த காய்கறிகள், கீரைகள் உண்பதால் உடலில் சளி உண்டாகாது. மேலும் படிப்படியாக அல்லது எடுத்த எடுப்பிலேயே அனைத்து சமையல் உணவுகளையும் தவிர்த்து, சமைக்காத இயற்கை உணவுகளான தேங்காயும், பழவகைகளையும் உணவாக எடுத்துக்கொண்டு வாழ ஆரம்பிக்கும்போது, உடலில் உள்ள அனைத்து சளிகளும் படிப்படியாக உடலிலிருந்து வெளியேறிவிடும். அதன்பின், சளி இல்லாத வலி இல்லாத நோயில்லாத, இறப்புக்கு வாய்ப்பில்லாத உறுதியான உடலாக அந்த உடல் மாறிவிடும்.
உணவுப் பழக்கத்தைத் தவிர உடலை மேலும் உறுதியுடன் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுபவை யோகாசனம், பிராணயாமம், தியானம். தினந்தோறும் இவற்றைச் செய்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வப்போது விரத நாட்களில், அல்லது வாய்ப்பு ஏற்படும் நாட்களில், நீர் உண்ணா நோன்பு அல்லது சாறு உண்ணா நோன்பு மேற்கொள்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய முயற்சி செய்யலாம்.
நீர் உண்ணா நோன்பு என்றால், பசித்தபோதெல்லாம், அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல், தூய்மையான குடி தண்ணீர் மட்டும் தேவையான அளவு அருந்துதல் வேண்டும். இப்படி எத்தனை நாட்கள் தொடர்ந்து வெறும் பச்சைத் தண்ணீரைக் குடித்து வாழ முடியுமோ அதுவரை வாழ்வதாகும்.
சாறு உண்ணா நோன்பு என்றால், பசித்தபோதெல்லாம் அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல், இளநீர், எலுமிச்சம் பழச்சாறு + பச்சைத் தண்ணீர் + தேன் கலந்து, திராட்சைப் பழச்சாறு, ஆரஞ்சு சாறு, தேங்காய்ப் பால், பேரீச்சைப் பழச்சாறு, மாதுளம் பழச் சாறு மற்றும் இதர பழச்சாறுகளில் ஏதேனும் ஒன்றை ஒருவேளைக்கு அருந்தி, மற்ற வேளைகளில் மற்ற பழச்சாறு என அருந்தி இயன்ற நாட்கள் வரை வாழலாம்.
இவ்வாறு உண்ணா நோன்பு மேற்கொள்வதன் மூலம், உடலில் தேங்கியுள்ள சளிகள், கழிவுகள், நச்சுகள் உடலிலிருந்து வெளியேறும். உண்ணா நோன்பு முடியும்பொழுது, நன்கு பழுத்த பழ வகைகள் சாப்பிட்டபின் தேங்காயும், பழ வகைகளும் உணவாக உண்டு, தூய பச்சைத் தண்ணீர், அல்லது இளநீர், அல்லது பழச்சாறு மட்டும் உடலுக்குத் தேவைப்படும்போது அருந்தி வாழ்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முயலலாம். காபி, தேயிலை, பால், மோர், மற்றும் பிற பானங்கள் முழுவதையும் அருந்துவதை முற்றிலும் தவிர்த்தலும் மரணமில்லாப் பெருவாழ்வுக்கு இன்றியமையாததாகும்.
மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வள்ளலார் சுவாமிகள் கூறும் வழிமுறைகளைப் பற்றியும் சிந்திப்போம். மனிதரது உடல் அழிய நான்கு காரணங்கள் உள்ளன. அவை 1. உணவு, 2. உறக்கம், 3. உழைப்பு, 4. மைதுனம் எனக் கூறுகிறார்.
இயற்கைக்கு மாறாக சமைத்து உண்பதன் மூலம் மனிதருக்கு நோய் ஏற்பட்டு, உடலும் உயிரும் அழிகிறது. சமைத்துண்ணும் பழக்கத்தினால், மனிதன் மட்டும் கும்பகர்ணன் போன்று குறட்டைவிட்டு, ஆழ்ந்த உறக்கம் கொள்கிறோம். இவ்வாறு உறங்குவதால், உடல் அழிகிறது. பிற உயிரினங்களான விலங்குகள், பறவைகள், மற்றும் இதர உயிரினங்கள் சமைத்து உண்பதில்லை. இயற்கையாக உண்கின்றன; இயற்கையாக வாழ்கின்றன. எனவே, அவையெல்லாம் தூங்காமல் தூங்கி சுகம்பெற்று வாழ்கின்றன. நாம் மட்டும் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் எனப் புலம்பித் திரிகின்றோம். சமைத்து உண்பதால், நாம் மட்டும் இரவு, பகலாகக் கடின உழைப்பு செய்து பணம் சம்பாதிக்கிறோம். இவ்வாறு, கடின உழைப்புக்குப் பின்னர் நமது உடலும் உயிரும் அழிகிறது. சமைத்து உண்பதால், நாம் மட்டும் மிகுதியான மைதுனம் (உடலுறவு) கொள்கிறோம். அதனாலும்கூட நமது உடலும் உயிரும் அழிகிறது.
மேலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த மகாகவி பாரதியாரும்,
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
என, வெந்த உணவாகிய சோறு தினம் தின்று, கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் – இறக்கும் பல வேடிக்கை மனிதர் என நெருப்பில் வெந்த உணவைத் தின்பதால் மனிதருக்கு மரணம் ஏற்படுகின்றது எனத் தீர்க்க தரிசனமாகக் கூறியுள்ளார்.
அடுத்து ‘அலெக்ஸ் கேரல்’ எனும் வெளிநாட்டு உயிரியல் அறிஞர், தனது ‘Man The Unknown’ (மனிதன் புரியாத புதிர்) எனும் நூலில், ஒரு ஆய்வின் மூலம், ‘மனிதன் மரணமில்லாதவன்; மனிதனது மரணத்துக்குக் காரணம், 1. உள் விபத்து; 2. வெளி விபத்து. இவ்விரு விபத்துகளும் இல்லையென்றால், மனிதனுக்குச் சிறிது கூட மரணமேற்பட வாய்ப்பில்லை’ எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் செய்த உயிரியல் ஆய்வின் விவரம் -
ஒரு கோழிக்குஞ்சின் இதயத்தின் சதைத் துண்டை அறுத்தெடுத்து, அதை ஒரு சோதனைக் குழாயில் போட்டார். அச்சதையிலுள்ள செல்கள் உயிருடன் இயங்க, ஒரு நுண்ணூட்டத் திரவத்தை அச்சோதனைக் குழாய்க்குள் ஊற்றினார். அச்சதையின் செல்களின் கழிவுகள் வெளியேறும் வண்ணம் அதற்குரிய ஒரு திரவத்தையும் அச்சோதனைக் குழாய்க்குள் ஊற்றினார். எனவே, கோழிக்குஞ்சின் இதயத் தசையில் உள்ள செல்கள் உயிருடன் இயங்கவும், செல்களிலிருந்து கழிவுகள் வெளியேறவும் உரிய திரவங்களை ஊற்றி, ஒரு நுண்பெருக்குக் கண்ணாடி மூலம், அச்செல்களின் இயக்கத்தைக் கவனித்தார். தொடக்கத்தில், அச்செல்களின் இயக்கம் எவ்வாறு இருந்ததோ, பல ஆண்டுகள் ஆகியும் அந்தச் செல்களின் இயக்கம், சிறிதுகூட குன்றவில்லை. மாறாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடக்கத்தில் இருந்த இயக்கமே இருந்தது.
இதிலிருந்து அவர் ஒன்றைச் சிந்தித்தார். ஒரு கோழிக்குஞ்சின் செல்லுக்கே, உரிய நுண்ணூட்டமும், கழிவுகள் வெளியேறவும் வாய்ப்புக் கொடுத்தால், திறமையுடன் குன்றாது செல் இயங்கினால், மனிதரது செல், கோழிக்குஞ்சின் செல்லைவிட மிகவும் அளப்பரியது. திறமை வாய்ந்தது. பேராற்றலுடையது. மிகவும் வலுவானது. எனவே, மனிதரது செல்களும் திறமையாக இயங்கத் தகுந்த நுன்ணூட்டமும், கழிவுகள் வெளியேறுவதற்கும் உரிய தக்க வாய்ப்பளித்தால், மனிதரது செல்லும் சிதையாது. வளர்ச்சி குன்றாது, இறக்காது. மனிதரது செல்கள் இறக்காமல் இருந்தால், மனிதருக்கும் மரணமில்லை (Man is immortal). மாறாக மரணம் வந்தால், உயிருக்கு ஒவ்வாத உணவுகளை உண்டு உள் விபத்து ஏற்பட்டு மரணம் வரலாம். அல்லது வெளி விபத்து ஏற்பட்டு மரணம் வரலாம். இல்லையேல் மனிதனுக்கு மரணமே இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வு உள்ளது எனக் கூறியுள்ளார்.
‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ - இது குறள் கூறும் கருத்து.
By டாக்டர் அப்பன்

Friday, October 30, 2015

எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி. நோய்க்கு தமிழ் மருத்துவம் !!!

எய்ட்ஸ், HIV: இன்று ஒரு அன்பர் எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பி பிழைக்க வழி உண்டா? என்று கேட்டிருந்தார்.
இது ஒரு உயிர் கொல்லி நோய் ஆகும். இதனை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆதலால் மருத்துவத்தை மட்டும் தெரிந்து கொள்வோம். இந்நோய் வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் முற்றிலும் குறைந்து போய் இருக்கும். இது தான் முதன் முதல் பிரச்சனை. சரி இதற்க்கு எளிமையான தீர்வு என்பது சித்த மருந்தகங்களில் கிடைக்கும் நரசிம்ம லேகியம், அஸ்வகந்தா லேகியம், ச்சயவன ப்ராஸ் லேகியம், வேப்ப இலை பொடி, அருகம்புல் போடி, கீழாநெல்லி பொடி, மஞ்சள் கரிசாலை பொடி போன்றவை நல்ல பயன் தரும் கூட்டு மருந்துகளாகும்.
மருந்தின் அளவு முறை: லேகியம் மூன்றிலும் ஒவ்வொன்றிலும் சுண்டைக்காய் அளவு எடுத்து மூன்று வேலையும் உணவிற்கு பின் 30 நிமிடத்திற்கு பின் சுவைத்து சாப்பிடவும். பொடி வகைகளை ஒன்றாக கலந்து வைத்து கொண்டு காலை மாலை வெறும் வயற்றில் ஒரு தேக்கரண்டி வீதம் வெந்நீருடன் உட்கொள்ளவும்.
இந்த மருந்துகளால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நோயாளியின் உடல் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்று விரைவில் HIV, எய்ட்ஸ் நோயிலிருந்து இருந்து குணம் பெறலாம் அல்லது வாழ்வை ஆயுள் முழுதும் நீடித்து கொண்டே இருக்கலாம். திருச்சிற்றம்பலம்.
தகவல்,நன்றி :- திரு.கிரிதரன் மகாதேவன் அவர்கள்