Friday, October 30, 2015

எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி. நோய்க்கு தமிழ் மருத்துவம் !!!

எய்ட்ஸ், HIV: இன்று ஒரு அன்பர் எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பி பிழைக்க வழி உண்டா? என்று கேட்டிருந்தார்.
இது ஒரு உயிர் கொல்லி நோய் ஆகும். இதனை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆதலால் மருத்துவத்தை மட்டும் தெரிந்து கொள்வோம். இந்நோய் வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் முற்றிலும் குறைந்து போய் இருக்கும். இது தான் முதன் முதல் பிரச்சனை. சரி இதற்க்கு எளிமையான தீர்வு என்பது சித்த மருந்தகங்களில் கிடைக்கும் நரசிம்ம லேகியம், அஸ்வகந்தா லேகியம், ச்சயவன ப்ராஸ் லேகியம், வேப்ப இலை பொடி, அருகம்புல் போடி, கீழாநெல்லி பொடி, மஞ்சள் கரிசாலை பொடி போன்றவை நல்ல பயன் தரும் கூட்டு மருந்துகளாகும்.
மருந்தின் அளவு முறை: லேகியம் மூன்றிலும் ஒவ்வொன்றிலும் சுண்டைக்காய் அளவு எடுத்து மூன்று வேலையும் உணவிற்கு பின் 30 நிமிடத்திற்கு பின் சுவைத்து சாப்பிடவும். பொடி வகைகளை ஒன்றாக கலந்து வைத்து கொண்டு காலை மாலை வெறும் வயற்றில் ஒரு தேக்கரண்டி வீதம் வெந்நீருடன் உட்கொள்ளவும்.
இந்த மருந்துகளால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நோயாளியின் உடல் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்று விரைவில் HIV, எய்ட்ஸ் நோயிலிருந்து இருந்து குணம் பெறலாம் அல்லது வாழ்வை ஆயுள் முழுதும் நீடித்து கொண்டே இருக்கலாம். திருச்சிற்றம்பலம்.
தகவல்,நன்றி :- திரு.கிரிதரன் மகாதேவன் அவர்கள்

Sunday, October 18, 2015

மலை வேம்பு - மருத்துவப் பயன்கள் !!!

கருப்பைக் கோளாறுகள்
மலை வேம்பு இலைக் கசாயம் 
தினமும் காலை என
மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே போதும்
அனைத்து கருப்பைக் குன்றங்களும் கோளாறுகளும் நீங்கி
நலம் அடைவர்
தாய்மைப் பெரும் அடைவர்
கசாயம் செய்யும் முறை
நூறு மில்லி கொதிக்கும்
நீரில் ஐந்து கிராம் மலை வேப்ப மரத்து (மலை வேம்பு) இலைகள் போட்டு
நன்கு கொதிக்க வைத்து
இருபது மில்லியாகச் சுருக்கி
இறக்கி வடிகட்டி
காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்
இது அனுபவ வைத்தியமாகும்
பயன்படுத்திப் பலன் அடையுங்கள்
பெரும்பாடு
மலை வேம்பு மரப் பட்டை --- ஐந்து கிராம்
நாட்டுப் பசும்பால் ------ நூறு மில்லி
மலை வேம்பு மரத்துப் பட்டையை
நாட்டுப் பசும்பாலில் போட்டு காய்ச்சி
இறக்கி வடிகட்டி
பத்து நாட்களுக்கு ஒருமுறை என
மாதம் மூன்று முறை மட்டும்
இரண்டு மாதங்கள் மட்டும்
குடித்துவர
பெண்களின் பெரும்பாடு என்னும் அதி உதிரப் போக்கு
வயிற்று வலியுடன் கூடிய மாதவிலக்கு நோய்கள்
பரி பூரணமாகக் குணமடையும்
பொடுகு
பலருக்கு தொல்லை தரும் பொடுகு நோய்க்கு மிகச் சிறந்த மருந்து
பயன் படுத்திப் பலன் அடையுங்கள்
சிகைக்காய் ---பத்து கிராம்
மலை வேம்பு இலைகள் --பதினைந்து கிராம்
இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து
வெந்நீரில் முதலில் தலையைக் கழுவி
பின் பின் இந்த விழுதை தலை முழுவதும் வேர்க்கால்களில் நன்கு படும்படி தேய்த்து
ஐந்து நிமிடங்களால் ஊறிய பின்
வெந்நீரில் தலைக்குக் குளித்து வர பொடுகு நீங்கும்

குறிப்பு
முருங்கை மரம் ஆண்களுக்கு எப்படி நன்மை செய்யுமோ
அதே போல
மலை வேம்பு மரம் பெண்களுக்கு மிகுந்த நன்மை செய்யும் மரம் ஆகும்
மலை வேம்பு மரம் என்பது நம் ஊர்களில் இருக்கும் நாட்டு வேப்ப மரத்திநின்று
வேறு பட்ட ஒன்றாகும்
தற்போது எல்லா ஊர்களிலும் வளர்க்கிறார்கள்
இதன் கன்றுகள் ஈஷா வில் கிடைக்கிறது
தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ் அவர்கள்

Tuesday, October 13, 2015

மஞ்சள்காமாலைக்கு பத்தியமில்லா ஒரு நாள் மருந்து!!!


கால் கிலோ வெள்ளாட்டின் ஈரல் வாங்கி அதை நன்கு கீறி அதில் ஆமணக்கு இலைக் கொழுந்து மற்றும் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்தரைத்துப்பூசி பச்சைப்பனை ஓலை நடுவில் வைத்துச் சுற்றி அனலில் காட்டி, ஓலை கருகாமல் பதமாக வேக வைத்துப் பின் அதைச் சுவைத்துச் சாப்பிடவும் ஒரே வேளையில் மஞ்சள் காமாலை தீரும்.

புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் / புற்று நோய் (prostate glands)

இது பொதுவாக வயதான மனிதர்களுக்கு வரும் தொல்லை. இதை சதையடைப்பு அல்லது நீரடைப்பு என்பர். விந்துப் பை மற்றும் சிறுநீர் பையிலிருந்து வெளியேற்றும் குழாய்கள் சேரும் இடத்தருகே உள்ளது. இது விந்தையும் சிறுநீரையும் முறையாக வெளியாக்க உதவுகிறது. சிறுநீர் பையின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக சிறுநீர் பாதையை சூழ்ந்து காணப்படும் பரஸ்தகோளம் என்னும் புராஸ்டேட் கோளத்தின் வீக்கமே முதுமையில் தோன்றும் சிறுநீர் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது.புராஸ்டேட் திரவத்தை தாங்கி, விந்து திரவத்துடன் இணைந்து, உறவின் போது சீராக வெளிப்படுவதற்கு உதவியாக இருக்கும் இந்த கோளங்கள் முதுமையின் காரணமாக சற்று பெருக்கின்றன. அத்துடன் இதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து, கடினமாகி வீக்கமடைந்து, ஆண்களின் சிறுநீர் வெளியேறும் பாதையை இறுக்கி பிடிக்கின்றன.
இதனால், சிறுநீர் பையில் நிறையும் சிறுநீரானது வெளியேற இயலாமல் சிறுநீர் பையின் உள்ளேயும், சிறுநீர் பாதையை நோக்கியும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துவதால் முதியவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால், புராஸ்டேட் வீக்கத்தினால் சிறுநீர் பாதை சுருங்கி சிறுநீர் பையில் முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் தங்கி விடுவதால், சில மணி நேரங்களில் பல முறை எழுகின்றனர். இதனால், அவர்கள் தூக்கம் கெடுவதுடன் சுற்றியுள்ளவர்களும் தொல்லையாகி அவர்களும் எரிச்சலடையும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த தொல்லைகள் மக்களால் கல்லடைப்பு, சதையடைப்பு (prostate glands) என்று கூறப்படுகின்றது. இதற்க்கு எத்தனையோ எளிய மூலிகை மருந்துகள் உள்ளன. சிறு பீளை, மற்றும் சிறு நெருஞ்சில் செடிகளை வேருடன் பிடுங்கி நிழலில் காயவைத்துப் பொடியாக்கிக் கொள்க. இரண்டும் சேர்ந்த 100கிராம பொடிக்கு 10 கிராம் மிளகும், 10 கிராம் சீரகமும் பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். காலை, மாலை உணவுக்கு முன் 5கிராம் பொடியை 2 குவளை நீரிலிட்டு அரைக்குவளையாக காய்ச்சி வடித்துக் குடிக்க புரஸ்த கோளங்களின் வீக்கம், புண், புற்று நீங்கி சுகமடைவார்கள். மேலும், அனைத்து சிறு நீரக கோளாறுகளையும் இந்த மூலிகைகளை கொண்டு தீர்க்க முடியும்
http://siddhahealer.blogspot.in/2011/04/blog-post_23.html

கர்ப்ப பை கட்டிகளுக்கு- நோய்களுக்கு (uterus fibroids) !!!

கர்ப்பபை நோய்களை நீக்கி சுகப் படுத்த கீழ்கண்ட மூலிகைகள் சிறப்பானவை.
கறிவேப்பிலை, 2. அம்மான் பச்சரிசி. 3. குப்பைமேனி,
4. சிறுசெறுபடை, 5. அருகம் புல்
இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்க. உடன் மிளகு, சீரகம் 10 ல் 1 பங்கு கலந்து பொடித்துக் கொள்க. இந்த கலவையை தேவையுள்ளவர்கள் மோரில் 1 தேக்கரண்டி கலந்து - அதிகாலை குளித்த பின் குடித்து வர, கர்ப்ப பை சார்ந்த நொயனைத்தும் தீரும். கர்ப்ப பைக் கட்டிகள் தீரும்.

Sunday, October 11, 2015

வலிப்பு பிரச்சனையால் அவதியா? இதோ தீர்வு தரும் மூலிகை !!!

சடா மாஞ்சில் எனும் மூலிகை மாதவிலக்கு பிரச்சனையை சீராக்கி, வலிப்புக்கு தீர்வு தருகிறது.
ஸ்பைக்னால்(Spikenard Plant) ஆங்கில பெயர், மாதவிலக்கு கோளாறு போக்கும். மாத விலக்கை தூண்டக் கூடியது. இதற்கு சடா மாஞ்சில் தேனீர் குடிக்கலாம்.
செய்முறை:
சடா மாஞ்சில் வேர் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு சடா மாஞ்சில் 1 கிராம் முதல் 2 கிராம் வரை சேர்த்து அரை ஸ்பூன் கருஞ்சீரகம், பனைவெல்லம் 1 ஸ்பூன் போட்டு கொதிக்க விட்டு தேனீர் தயாரித்து வடிகட்டி குடிக்க வேண்டும். தடைபட்ட மாதவிடாய் சீர்படும்.
பெண்களுக்கு மாதவிடாய் நேரம் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன் பயன்படுத்த தொடங்கினால் ஒருவாரத்துக்குள்ளாகவே குணம் தெரியும்.
குறைவான ரத்த போக்கு உள்ளவர்கள் சடா மாஞ்சில் எடுத்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மாத விலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலி குறையும்.
சடா மாஞ்சில் மூளைக்கு இதமான நிலை தரும். நரம்புக்கு பலம் தரக்கூடியது. 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாதாரணமாக எடுத்துக்கொள்வதை இந்திய மருத்துவம் பரிந்துரைக்கிறது. அதிகம் எடுத்தால் தூக்கம் அதிகரிக்கும்.
ஞாபக சக்தி தூண்டக்கூடியது. வயது ஆவதினால் ஏற்படும் மறதி போக்கும், சோர்வு நிலை மாறும்.
காக்காய் வலிப்பு வராத வண்ணம் தடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். சடா மாஞ்சில் தனிப்பட்ட முறையில் கருப்பை கோளாறு போக்கக்கூடியது.

Monday, October 5, 2015

நிறைய நோய்களுக்கு பயனுள்ள தைலம் !

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்
இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்.
சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற
உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது
ஒரு முறை.
நாம் ஒரு முறையை பார்ப்போம்.
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
புதினா உப்பு - MENTHOL
ஓம உப்பு - THYMOL
கட்டி கற்பூரம் - CAMPHOR
(அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது )
இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.
சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.
இப்பொழுது தைலம் தயார்.
இது மிகவும் வீரியமான தைலம்.
உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.
இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.
பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.
இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.
கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.
சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.
இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.
http://aadimaruthuvam.blogspot.in/
( தைமால்,மெந்தால்,கற்பூரம் மூன்றும் சம அளவு.நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.நான் என்னுடைய கிளினிக்கில் அநேக வருடங்களாக,நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு கொடுத்து பயன் அடைந்து உள்ளார்கள் )