Saturday, June 13, 2015

சிறு நீரகக்கல் பிரச்சனையா?

சிறு நீரகக்கல் இருந்தவர்கள் வலி தாங்க முடியாமல் டாக்டர் இடம் சென்றிருப்பீர்கள் ! அவரும் எல்லா சோதனைகளும் முடித்து மருந்துகள் கொடுப்பார் பிறகு மீண்டும் வலி வரும் மீண்டும் சோதித்து ஆபரேஷன் தான் வழி என்றும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு வைப்பார்.
நீங்களும் வேறு வழியின்றி வலி தாங்காமல் ஆபரேஷன் செய்து பணத்தை கட்டி அழுவீர்கள்!
ஆனால் சிறு நீரகக்கல் பிரச்சனை மீண்டும் மீண்டும் வரும் எத்தனை முறை டாக்டர் இடம் பணத்தை கொட்டி அழுவது?
சரி இனி விசயத்திற்கு வருகிறேன்,
சிறு பீளைச்செடி........
இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.
இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.
இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே!
இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.!
ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும்.
மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.
சாப்பிடும் முறை: இதன் பூ,இலை,தண்டு,வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு . இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது!
இது போன்று இரவும் சாப்பிடனும்.இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம்.
மற்றொரு சாப்பிடும் முறை:
இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml
பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம். இதை உட்கொள்ளும் போது மருந்து வேளை செய்தால் சிலருக்கு வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
. இந்த செடி எனது ஊரில் நிறைய விளைந்து கிடக்கிறது.இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை.
இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம்நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
சிறு நீரகக்கல் வந்தவர்கள் ஆபரேஷன் செய்திருப்பினும்
மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
http://dinesh3737.blogspot.in/


புற்று நோய்க்கு எளிய மருந்து

சத் குருவாய் இருக்கும் பழனி மலை முருகனை வணங்கி மருந்தை ஆரம்பிக்கவும்
பொடுதலை வல்லாரை பொற்றலை புங்கன் ,
விடுதலையாம் புற்றுநோய்க் குண் ...................குறள்
விளக்கம் :
பொடுதலை ,வல்லாரை மஞ்சள் கரிசலாங்கண்ணி ,புங்கு தளிர் இவற்றை சம அளவு எடுத்து நிழல் காய்ச்சல்லில் வைத்து பின்பு தூளாக்கவும் ,
தூளாக்கி தேனில் குழைத்து காலையும் ,மாலையும் உண்டு வர புற்றுநோய்
உடலை விட்டு நீங்கும் 

Baskar Jayaraman's photo.

Friday, June 12, 2015

குறள் மருந்து

தூது முருங்கை கருவேல் பிசின் முன்றன் ,
தாதுதூள் புற்றுக்கு மாற்று .------குறள்

தூதுவளை ,சமஅளவு முருங்கைப்பிஞ்சு,பூ ,இலை ,வேர்ப்பட்டை இவற்றுடன் கருவேலம் பிசினும் சேர்ந்த நுண் தூளை தேனில் உண்டு வர புற்றுநோய் தீரும் சமஅளவு
சேய் சாம்பல் மண் தின்றால் கிழாநெல்லி வேர்கடுக்
காய்மிளகு வெந்நீர் அருத்து ----குறள்

சாம்பல் ,மண் இவற்றை தின்னும் குழந்தைகளுக்கு கீழாநெல்லி வேர் ,கடுக்காய் ,மிளகு இம் 3யும் மை போல் அரைத்துக் காலையில் நான்கு கிராம் அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும் .அதனால் தீயமலக்கிருமிகளுடன் திண்ற மண் ,சாம்பல் இவையும் வெளியாகும் .குழந்தையும் அப் பழக்கத்தையும் மறந்து விடும் .
‪#‎இதய‬ நோய் குணமாக :
இதயநோய் வாராமல் எந்நாளும் காக்கும்
பதப்பாலில் வெங்காயம் பூண்டு .

பாலில் வெங்காயமும் பூண்டும் சேர்த்து காய்ச்சிப் பக்குவமாக அருந்திவர இதய வாராமல் காக்கும்
.
வரும்முன் காக்க :
பச்சை பூண்டு ஐந்து பல் அரைத்து ஒரு குவளை மோரில் கலக்கி குடிக்கவும் இதய நோய்
வராது
‪#‎வெள்ளை‬ படும் நோய் குணமாக :
கண்டு படிகாரம் காய்நெல்லி நீர்மோரில் ,
கொண்டிடின் வெள்ளை நோய் ஏது ?.-----குறள்

கற்கண்டு ,பொரித்த படிகாரம் ,நெல்லிவற்றல் இம் மூன்றையும் நுண் துளாக்கி ஐந்து கிராம் அளவு காலையில் மாலையில் உணவுக்குமுன் ஏழு நாள் தொடரவும் நோய் தீரும் .
‪#‎கேன்சர்‬ குணமாக :
பூண்டு மிளகு வெள்ளறுகுத் தூள்
வேண்டும்பல் புற்றுநோய்க் குண் .----குறள்

பூண்டு ,மிளகு, புதுவெள்ளருகு இவற்றை சம அளவு பொடி செய்து காலை மட்டும் மூன்று கிராம்க்கு குறையாமல் தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டு வர நோய் தீரும் .

சிறுநீரில் கல்லடைப்பு சேர்ந்திட்டால் ஓமக்
குருங்க்கொதிநீர் மாந்திடின் நன்று . ----- குறள்
சிறுநீரில் கல்லடைப்பு ஏற்பட்டால் ஓமத்தை நன்றாக தீட்டிப் புடைத்துப் பொன்வறுவல் செய்து
நாலில் ஒன்றாகச் சுருங்கக் காய்ச்சிய கொதிநீரை குடித்து வந்தால் கல்லடைப்பு நீங்கும் .
‪#‎மூலநோய்‬ மருந்து
ஆவாரைப் பூத்துளிர் அப்பட்டை வேரரசு ,
மேவார்க்குள் முல மிலை .....குறள்
ஆவாரை இலைத்துளிர் ,பூ ,பட்டை இவற்றுடன் அரச மர வேர்பட்டைத்தூளும் சேர்ந்த ஊறல்நீர் அல்லது கொதிநீர் காலை மாலை அருந்திவர உள்முலம் நோய் தீரும் .
‪#‎எளிதில்‬ கருத்தரிக்க :
அரசங் கொழுந்தோடே ஆன் பாலுங் கூட்டித் ,
தரின்கரு தங்கும் தகைத்து .............குறள்
குழந்தை வேண்டிய தாய் அரசமரக் கொழுந்து இலையை மை போல் அரைத்துப் பசும் பாலில் கலந்து அருந்திவர கருஜெனிக்கும் .

‪#‎கட்டிகள்‬ உடைய /மறைய
பலா வேரால் கட்டி பழுக்கும் அமுங்கும் ,
நிலாவுடல் நோயும் நிலைத்து ............குறள்
பலாமர வேரை அரைத்துப் பூச , கட்டி சிறிதாயின் அழுந்தியும் ,பெரிதாயின் பழுத்து உடைந்து மறைந்து போகும் ,பின் உடல் நோயும் தீரும் .
‪#‎கருவுற‬ (மகப்பேரியல் )
தப்பாமல் தாய் கருவாம் சாரணை வெண் குன்றிவேர்
திப்பிலி பூண்டு மிளகு .- குறள்
சாரணை வேர் ,வெள்ளைகுன்றிமணி வேர் ,திப்பிலி ,பூண்டு ,மிளகு இவை ஐந்தும் சமமாக நீர் விட்டரைத்துப் பழமளவு நீராடியபின் மூன்று நாளும் உண்டு வர கண்டிப்பாக கருத்தரிக்கும்
‪#‎குடல்‬ புண் ஆறுவதற்கு :
துளிர்கொய்யா மென்கொழந்து தேன்கலந் துண்ணின்
நெளிபுண் சீழ் மாற்றும் மருந்து .-------குறள்
கொய்யாமரத்தின் தளிரிலைகளை எடுத்தரைத்து அதனுடன் தேன் கலந்துண்டு வந்தால் வெகு விரைவில் குடல் புண் ஆறிவிடும் .

# ஈரல் புண் குணமாக
ஈரல்புண் கொண்டோரை ஈக்கள் மொய்ப்பதைக் காணலாம்
கனிந்த பழத்தை ஈ மொய்ப்பது போல் .-----நோய் அறிகுறி
மருந்து :
கருநொச்சி வாதநோய் கல்ஈரல் நோய்க்காம்
ஒரு இலவங்கம் பூண்டு மிளகொடு ........குறள்
கருநொச்சி இலையோடு இலவங்கம் ,பூண்டு, மிளகு இவற்றை சேர்துண்ண கல்லீரல்,மண்ணீரல் ,நுரையிரல் ஆகிய மூவிரல் நோயும் வாத நோயும் தீரும் .
‪#‎கர்ப்பம்‬ கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி

கருப்பங் கலைந்தால் கனிமா துளம்தோல்
பெருமரப் பட்டைய சோகு .-------------------குறள்

தாய் கருவுற்ரும் ,பின்னர் கலைந்துவிட்டால் ,அதற்கு மாதுளம் பழ தோல் உடன்
அசொகமரப் பட்டையும் சம அளவு எடுத்து கொதி நீரிட்டுப் பதமுடன் 45 நாள் காலையில்
அருந்தி வர உடல் நலம் தேறி ,நலம் பெற்று மீண்டும் கரு உண்டாகி நிலைத்துப் பிறக்கும்
‪#‎தோலில்‬ வெண் புள்ளி மறைய
வெட்டிய எட்டிவித்து வேம்புவிதைச் சாற்றினிலே

பட்டிடவுண் வெண்புள்ளி நோய்க்கு .......குறள்

மூக்கை வெட்டிய எட்டிக் கொட்டையைச் சுத்தி செய்து உடன் வேம்புவிதை (வேப்பங்கொட்டை )
அரைத்து கடலையளவு மாத்திரை ஆக்கி உண்டுவர தோலில் உண்டான வெண்புள்ளி தீரும் .
‪#‎மஞ்சள்‬ காமாலை நோய் தீர மருந்து :
கூட்டுங்கா மாலைக்கு கொழுந்திலைப் பூவரசு
நாட்டுமிள கோரேழு நாள் .---------------------------குறள்
பூவரசுக் கொழுந்தும் மிளகும் சேர்த்தரைத்து
நெல்லிக்காய் அளவு ஏழு நாள் காலையில் தொடர்ந்து அருந்தினால்
காமாலை நோய் தீரும் .

Sunday, June 7, 2015

சித்த வைத்தியத்தால் முடியும்!

சித்த வைத்தியத்தால் முடியும்!
=========================
===================
ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம்,இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா..?!
==========================================
சித்த வைத்தியத்தால் முடியும்!
==========================================
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை. பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும் கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும் எண்ணெய் மறு காதில் எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடப்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம் அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3&5 சொட்டு விடவும் மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி விடும்.

தினம் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

உருவுமல்ல ஒளியுமல்ல ஒன்றதாகி நின்றதே
மருவுமல்ல கந்தமல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர்காண வல்லிரே!
கடவுளின் நிலையை ஆராய்ந்தால், தனித்த உருவமற்றவர். ஒளியாகவும் அவர் இல்லை; நுட்பமாண மணமும் கொண்டவரல்லர்; மெல்லியதாக உணரப்படுகின்ற நாடியும் அல்லர்; மிகவும் பெரியதாகவும் மிகவும் சிறியதாகவும் அவர் காணப்படுபவரும் அல்லர். முடிவாக அவர் உணரக்கூடிய ஒரு பொருளாகவும் இல்லை; அரிதான அவரைக் காண வல்லவர் யார்?
ஒருவருமில்லை;
ஓரெழுத்து உலகெலாம் உதித்தஉன் சாத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியைஹ்
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே!
உலகத்தில் முதலில் தோன்றிய எழுத்து “ஓம்” எனும் ஒரே எழுத்தாகும்.
”ஹ்ரீம் ‘ எனும் இரண்டெழுத்து சக்தி மந்திரமாகும். சக்தி மந்திரத்தினால் உண்டாகும் இன்பத்தைப் பலரும் அறியவில்லை.
“ ஐம் ”, “ க்லீம் “,” சௌம் “ எனும் மூன்றெழுத்து மந்திர முடிவில் மும்மூர்த்திகள் தோன்றினர்.
“ ஓம் “, ‘ ஐம் “, ’ஹ்ரீம்’, ‘ ஸ்ரீம்’ எனும் நான்கெழுத்து மந்திரமே இவையாவுமாக உள்ளன.
இவை அனைத்திற்கும் மணிமுடியாகத் திகழும் மந்திரம் “ சிவாய நம” என்பதாகும்.
நல்லவெள்ளி ஆறுதல் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லும்நாகம் மூன்றுதாக் குலாவுசெம்பொன் இரண்டதாய்
வில்லினோசை ஒன்றுடன் விளங்கஊத வல்விரேல்
எல்லையொத்த சோதியமனை எட்டும்ஆற்ற லாகுமே!
சனிக்கிழமை தோறும் வில் ஓசை கொண்ட “ ஓம் “ எனும் மந்திரத்தையும்,
வியாழக்கிழமை “ ஹ்ரீம் “ எனும் மந்திரத்தையும் ,
புதன் கிழமை “ ஐம் க்லீம் “ என்னும் மந்திரத்தையும்,
செவ்வாய்கிழமை “ ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் “ என்னும் மந்திரத்தையும்,
வெள்ளிக்கிழமை “ ஓம் குமாராய நம “ என்னும் மந்திரத்தையும் தியானித்து,
பிராணாயாமம் செய்து வந்தால், சோதியான இறைவனை எட்டலாம்.
ஒன்பதான வாசல்தான் ஒழியுநான் இருக்கையில்
ஒன்பதான ராமராம ராமவென்னு நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள்வாக்கில் ஆய்ந்தமைத்து இருப்பதே!
ஒன்பது துளைகள் கொண்ட இந்த உடல் மறையும் நேரத்தில் “ ராம ராம ராம “ என்ற மந்திரத்தை ஒன்பது முறை கூறினால், மீண்டும் பிறக்காமல், அந்தப் பிறவி என்னும் நோயை அடைப்பவராவார்.
உண்மையன அன்பர்களின் வாக்கில் இந்த மந்திரம் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
priyamudan krishna
http://www.krishnaa.in/

இந்த தெய்வங்களை வணங்கினால் உங்கள் குறை தீரும் சித்தர்கள் அருளியது ,


வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு
http://www.worldtamilswin.com/

அஷ்டகர்ம சித்தி - தேரையர் !!!

அஷ்டகர்ம சித்தி - தேரையர் !!!
அட்ட கர்மங்கள் எனப்படுபவை
வசியம்
தம்பனம்
உச்சாடனம்
மோகனம்
வித்வேடணம்
ஆகர்ஷணம்
பேதனம்
மாரணம்
தேரையர் தனது சிவபூசாவிதியில் அஷ்டகர்மம் சித்தியாக அதற்குரிய மந்திரங்களை அருளியுள்ளார்.
தன்மையுடன் நமசிவய தம்பனந்தான்
தானான யவசிமந வசியமாகும்
மின்னின்ற சிவயநம உச்சாடந்தான்
முயங்கி நீ வசியநம அழைப்பதாகும்
ஒன்றான நயவசிம மோகனந்தான்
உருவுவய நமசியும் வித்துவேடமாமே
வேடமெனும் மநயவசி பேதனந்தான்
வினையமுடன் மசிவயந மாரணந்தான்
நாடவே அட்டகர்மம் ஆடுதற்கு
நலமாக இவ்வெழுத்தைத் தியானஞ்செய்யத்
தேடவே மூன்றெழுத்தைக்கூட்டி ஓதத்
திடமாக எட்டெட்டும் சித்தியாகும்
சூடவே கருமம் ஓன்றுக் கொருலட்சந்தான்
தீரமுடன் செய்திடவே சித்தியுண்டே.
தேரையர் சிவபூசாவிதி
பொருள்:
நமசிவய - தம்பனம்
யவசிமந - வசியம்
சிவயநம - உச்சாடணம்
வசியநம - ஆக்ருஷ்ணம்
நயவசிம - மோகனம்
வயநமசி - வித்துவேஷ்ணம்
மநயவசி - பேதனம்
மசிவயந - மாரணம்
அஷ்ட கர்மங்கள் சித்தியாக வேண்டுமென்றால் ஒவ்வொருகர்மத்திற்கும் கூறிய மந்திரத்தையும் ஐயும் கிலியும் சவ்வும் என்ற மந்திரத்தோடு சேர்த்து ஒரு கர்மத்திற்கு ஒரு லட்சம் உரு வீதம் தியானிக்க அக்கர்மங்கள் சித்தியாகும் என்கிறார் தேரையர்.
http://siddhalaya.org/