Sunday, June 7, 2015

தினம் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

உருவுமல்ல ஒளியுமல்ல ஒன்றதாகி நின்றதே
மருவுமல்ல கந்தமல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர்காண வல்லிரே!
கடவுளின் நிலையை ஆராய்ந்தால், தனித்த உருவமற்றவர். ஒளியாகவும் அவர் இல்லை; நுட்பமாண மணமும் கொண்டவரல்லர்; மெல்லியதாக உணரப்படுகின்ற நாடியும் அல்லர்; மிகவும் பெரியதாகவும் மிகவும் சிறியதாகவும் அவர் காணப்படுபவரும் அல்லர். முடிவாக அவர் உணரக்கூடிய ஒரு பொருளாகவும் இல்லை; அரிதான அவரைக் காண வல்லவர் யார்?
ஒருவருமில்லை;
ஓரெழுத்து உலகெலாம் உதித்தஉன் சாத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியைஹ்
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே!
உலகத்தில் முதலில் தோன்றிய எழுத்து “ஓம்” எனும் ஒரே எழுத்தாகும்.
”ஹ்ரீம் ‘ எனும் இரண்டெழுத்து சக்தி மந்திரமாகும். சக்தி மந்திரத்தினால் உண்டாகும் இன்பத்தைப் பலரும் அறியவில்லை.
“ ஐம் ”, “ க்லீம் “,” சௌம் “ எனும் மூன்றெழுத்து மந்திர முடிவில் மும்மூர்த்திகள் தோன்றினர்.
“ ஓம் “, ‘ ஐம் “, ’ஹ்ரீம்’, ‘ ஸ்ரீம்’ எனும் நான்கெழுத்து மந்திரமே இவையாவுமாக உள்ளன.
இவை அனைத்திற்கும் மணிமுடியாகத் திகழும் மந்திரம் “ சிவாய நம” என்பதாகும்.
நல்லவெள்ளி ஆறுதல் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லும்நாகம் மூன்றுதாக் குலாவுசெம்பொன் இரண்டதாய்
வில்லினோசை ஒன்றுடன் விளங்கஊத வல்விரேல்
எல்லையொத்த சோதியமனை எட்டும்ஆற்ற லாகுமே!
சனிக்கிழமை தோறும் வில் ஓசை கொண்ட “ ஓம் “ எனும் மந்திரத்தையும்,
வியாழக்கிழமை “ ஹ்ரீம் “ எனும் மந்திரத்தையும் ,
புதன் கிழமை “ ஐம் க்லீம் “ என்னும் மந்திரத்தையும்,
செவ்வாய்கிழமை “ ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் “ என்னும் மந்திரத்தையும்,
வெள்ளிக்கிழமை “ ஓம் குமாராய நம “ என்னும் மந்திரத்தையும் தியானித்து,
பிராணாயாமம் செய்து வந்தால், சோதியான இறைவனை எட்டலாம்.
ஒன்பதான வாசல்தான் ஒழியுநான் இருக்கையில்
ஒன்பதான ராமராம ராமவென்னு நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள்வாக்கில் ஆய்ந்தமைத்து இருப்பதே!
ஒன்பது துளைகள் கொண்ட இந்த உடல் மறையும் நேரத்தில் “ ராம ராம ராம “ என்ற மந்திரத்தை ஒன்பது முறை கூறினால், மீண்டும் பிறக்காமல், அந்தப் பிறவி என்னும் நோயை அடைப்பவராவார்.
உண்மையன அன்பர்களின் வாக்கில் இந்த மந்திரம் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
priyamudan krishna
http://www.krishnaa.in/

No comments:

Post a Comment