Friday, October 3, 2014

ஆண்மை பெருக,அதிகரிக்க உணவு,உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க

ஆண்மை பெருக
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல்,குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
தினமும் ஒரு தக்காளி சூப் போதும் ஆண்மையை அதிகரிக்க அற்புத மருந்து
லண்டன்: ஆண்மையை அதிகரிக்கும் சக்தி தக்காளியில் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரிட்டன் போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தக்காளி குறித்து ஓர் ஆய்வு நடத்தினர். தக்காளி, ஆண்மையை அதிகரிப்பதாக அதில் தகவல் வெளியாகியுள்ளது. தினமும் ஒரு தக்காளி சூப் குடித்தால் போதும். ஆண்களுக்கு வீரியத் தன்மை அதிகரிக்கிறது. விந்துவில் உயிரணுக்கள் குறைபாடே குழந்தை இன்மைக்கு காரணம். இதை தடுக்க சிறந்த மருந்து தக்காளிதான். தினமும் தக்காளி சூப் சாப்பிட்டால், இந்த குறைபாடு நீங்கிவிடும். தக்காளியில் உள்ள "லைகோபின்' தான் சிவப்பு நிறத்தை தருகிறது. இந்த சிவப்பில்தான் வீரியம் நிறைந்திருக்கிறது. கொய்யா, பப்பாளியிலும் லைகோபின் உள்ளது. இரண்டு வாரம் தொடர்ந்து தக்காளி சூப் குடித்தால், ஆண்களின் வீரிய சக்தியில் லைகோபினின் அளவு 7ல் இருந்து 12 சதவீதமாக அதிகரிகிறது. குழந்தையின்மை குறைபாட்டை போக்க தக்காளியும் உதவும். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண்மையை அதிகரிக்க உணவு
ஆண்மை பெருக
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல்,குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
தினமும் ஒரு தக்காளி சூப் போதும் ஆண்மையை அதிகரிக்க அற்புத மருந்து
லண்டன்: ஆண்மையை அதிகரிக்கும் சக்தி தக்காளியில் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரிட்டன் போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தக்காளி குறித்து ஓர் ஆய்வு நடத்தினர். தக்காளி, ஆண்மையை அதிகரிப்பதாக அதில் தகவல் வெளியாகியுள்ளது. தினமும் ஒரு தக்காளி சூப் குடித்தால் போதும். ஆண்களுக்கு வீரியத் தன்மை அதிகரிக்கிறது. விந்துவில் உயிரணுக்கள் குறைபாடே குழந்தை இன்மைக்கு காரணம். இதை தடுக்க சிறந்த மருந்து தக்காளிதான். தினமும் தக்காளி சூப் சாப்பிட்டால், இந்த குறைபாடு நீங்கிவிடும். தக்காளியில் உள்ள "லைகோபின்' தான் சிவப்பு நிறத்தை தருகிறது. இந்த சிவப்பில்தான் வீரியம் நிறைந்திருக்கிறது. கொய்யா, பப்பாளியிலும் லைகோபின் உள்ளது. இரண்டு வாரம் தொடர்ந்து தக்காளி சூப் குடித்தால், ஆண்களின் வீரிய சக்தியில் லைகோபினின் அளவு 7ல் இருந்து 12 சதவீதமாக அதிகரிகிறது. குழந்தையின்மை குறைபாட்டை போக்க தக்காளியும் உதவும். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள்
ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள்
பெண்கள்
கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப்
பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி
தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க
ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட
ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால்
தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி
மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட்
எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும்,வசீகரிக்கும் வனப்பை
வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில்
பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும்,தாம்பத்திய வாழ்வின்
திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும்
பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள
முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு
நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க
பாலுறவில் பரவசமடைய :
முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :
முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.
வயதானோரும் வாலிப சுகம் அடைய :
முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.
முருங்கை No-1வயகரா!
வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர். இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.
வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை. முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை. ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல் இருந்ததால் பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது. அவர் சீனா சென்று பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அந்நாட்டிலும் அவருக்குப் போகர் என்றே பெயர் இருந்ததாகக் கூறப்படுகிறது.இது என் நண்பன் மிதுன் கூற நான் தெரிந்த உண்மை.
மூலிகைகள் உண்டு அதிக போகத்தில் (உடலுறவில்) ஈடுபட்டதால் போகர் என்றே பெயர் பெற்றார். அவர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. 64 கலைகளில் பாலுறவு என்னும் காமச்சூத்திரக் கலையும் ஒன்று. மிக உயர்ந்த உன்னதக் கலையை மிருகங்கள் ஒன்றோடொன்று இணைந்து தன் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதுபோல், அனுபவிப்பதில் பயனில்லை.
மனிதனும் வயகரா மருந்துண்டு 10 நிமிடம் மிருகவெறியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் மிருகத்திற்கும், மனிதனுக்கும் வேறுபாடில்லை. சிலை, சிற்பம், சித்திரங்களில் உள்ளது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான வகைகளில் மாற்றி மாற்றி உடலுறவு சுகங்களை அனுபவிக்கும் போதுதான் மனிதனின் ஐம்பொறிகளின் உணர்வுக்கும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவைகளால் ஈர்க்கப்பட்டு, உடலுக்கும், மனத்திற்கும் பலவிதமான சுவைகளைச் சுவைத்து, உள்மனம் என்ற உயிர் ஜீவன் ஏகாந்த நிலையையும், இன்பத்தையும் அடைய முடியும்.
ஆண்தன்மை அதிகரிக்க :
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும்,
நன்றி :-http://smandsmherbals.blogspot.in/

ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம் - millet

அடுத்த மாதம் மருத்துவரைப் பார்க்க இந்த மாதமே முன்பதிவு செய்யவேண்டும், அவ்வளவு பிரபலமான மருத்துவராம். சரி எப்படியோ ஒரு மாதம் கழித்து பார்த்தாலும் உடல்நிலை நன்றாகஆனால் சரி. எப்படியும் மருத்துவரைப் பார்க்கும் நாளன்று சீக்கிரமே கிளம்பி விடுவோம். மதிய உணவு கூட வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பேசுபவர்களை நாம் அதிகமாகப் பார்க்க முடிகிறது.
இப்படிப்பட்ட மருத்துவர்களின் நடுவே, எங்களிடம் வருபவர்களுக்கு முதலில் ஆரோக்கியத்தைத்தான் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். அதனால்தான் எங்கள் சேவை மையங்களை மருத்துவமனை என்று சொல்லாமல் “ஆரோக்கிய மையம்” என்று சொல்கிறோம். எங்கள் ஆரோக்கிய மையங்களில் (Health centers),எங்களைச் சுற்றி நோயாளிகளை விட ஆரோக்கியமானவர்களையே பார்க்க விரும்புகிறோம் என்று இரண்டு மருத்துவர்கள் சொன்னால் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அப்படி இரண்டு மருத்துவர்களையும்,அவர்கள் நடத்தும்,அவர்களோடு இணைந்து செயல்படும் நிறுவனங்களைப் பற்றியும்தான் நாம் இந்தத் தொடரில் பார்க்கப்போகிறோம். இந்த விசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம், மருத்துவர் திரு.உஸ்மான் அலி அவர்களையும்,மருத்துவர் திரு.திருநாராயணன் அவர்களையும் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வைத்தியர் என்பது வெறும் அடைமொழிச் சொல் அல்ல. படித்து வாங்கிய பட்டம் என்பதற்கு மேல், இதற்கு இன்னமும் பொருள் இருக்கிறது. பண்டைக் காலத்தில் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீகம், நோய்நீக்கம், விவசாயம் (உழுவுதல், நடவு செய்தல், அறுவடை செய்தல்), நல்லநாள், முகூர்த்தம் பார்த்தல், சோதிடம் என்று எல்லாம் தெரிந்தவரையே வைத்தியர் என்றார்கள். இந்த வித்தைகளை எல்லாம் நன்றாகக் கற்றவரே வைத்தியர் என்று அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட வைத்தியர்களுக்கு சமூகத்தில் ஒரு உயரிய மதிப்பு இருந்தது. வைத்தியமும்,சோதிடமும் ஒன்றையொன்று சார்ந்த துறைகளாகவே இருந்தது. இப்பொழுதும் கூட திபெத்தியர்களின் மருத்துவ கல்லூரி “Tibetan Medical and astrological institute”என்றுதான் அழைக்கப்படுகிறது.
இவற்றில் சித்தவைத்தியம்,பாரம்பரிய வைத்தியம் ஆகிய முறைகளை தமிழ்நாட்டில் கொண்டுவர மருத்துவர்.திரு.உஸ்மான் அலியும்,மருத்துவர் திரு.திருநாராயணனும் ஏற்படுத்திய அமைப்புதான் “பாரம்பரிய மருத்துவ முறைகளும் அதன் ஆராய்ச்சியும்“Centre for traditional medicine and research”(CTMR) என்று இந்த அமைப்பை சுருக்கமாக அழைக்கலாம்.
உயரிய நோக்கங்களுடன் 2000-வது ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று தன்னுடைய14 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
மருத்துவர் திரு.உஸ்மான் அலியும்,மருத்துவர் திரு.திருநாராயணனும்CTMRன் நோக்கங்கள் என்ன என்பதில் மிகவும் திடமாகவும்,தெளிவாகவும் இருக்கிறார்கள்.
அவை
1. மரபு வழி மருத்துவம் (traditional medicines)
2. பொது சுகாதாரத்தை, பாரம்பரிய முறையில் நடைமுறைக்குக் கொண்டுவருவது.
3. பாரம்பரிய மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
4. எல்லோரும் வாங்கும்படி விலைகுறைவாகவும் (cost effective),தரமாகவும் (Quality)உள்ள மருந்துகளை தயாரித்தல்.
5. பாரம்பரிய மருந்துகளில் ஆய்வு மேற்கொள்ளுதல் (Research).
6. பாரம்பரிய மருத்துவ அறிவை ஆவணப்படுத்துதல் (Documentation of ancient medicines)
இந்த ஆவணப்படுத்தும் முறையில் முதலில் வருபவை:
பனை ஓலைச்சுவடிகள்தான் (Palm manuscripts)பழங்காலத்து ஓலைச்சுவடிகளை முதலில் சேகரித்து அவற்றை முறைப்படுத்துதல்,அவற்றிலிருந்து பொருள் அட்டவணை தயார் செய்தல் (catalogue),அவற்றை பாதுகாக்கும் வழிமுறையை பின்பற்றுதல், ஓலைச்சுவடிகளின் எழுத்துக்கள் நன்றாகத் தெரியும்படி அவற்றை மின்பதிவு (digitalize)என்ற முறையில் செயல்பாடுகள் இருக்கின்றன.
(பின்குறிப்பு) பொதுமக்கள் தங்களிடம் ஓலைச்சுவடிகள் இருந்தால் இந்த அமைப்பிடம் (CTMR)கொடுக்கலாம். அவர்களும் அதில் மருத்துவசம்பந்தமான குறிப்புகள் இருந்தால் அவற்றை மின்பதிவு செய்துவிட்டு ஓலைச்சுவடிகளை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். மருத்துவ குறிப்புகள் இல்லாத சுவடிகளை அவை எது சம்பந்தப்பட்டது (ஆலயம்,மாந்திரிகம்,மற்றபிற செய்திகள்) என்று மட்டும் சொல்வார்கள். அதற்கு விளக்கம் சொல்லவோ அல்லது மின்பதிவு செய்து தருவதோ கட்டாயமாக இயலாது என்பது குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும்.
===================================================
CTMR ஆராய்ச்சி மையம், ஆரோக்கிய மையங்கள் தவிர நடமாடும் மருத்துவமனைகளையும் நடத்துகிறது. சர்வசிக்ஷா அபியான் மூலமாக 15000 குறுந்தகடுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது.
இது தவிர மருத்துவர்களுக்கான கருத்து அரங்கம், கருத்து பரிமாறும் அரங்குகள், அவர்களுக்கான பயிற்சி பட்டறை ஆகியவையும் CTMR ஆல் நடத்தப்படுகின்றன. CTMR வீட்டுத் தோட்டம், பள்ளித் தோட்டம் மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைக்க உதவுகிறது. இது சம்பந்தமான சான்றிதழ்கள் இந்திய அரசு, இந்திராகாந்தி பல்கலைக்கழகம் (IGNOU), இந்திய தரக்கட்டுபாட்டு மையம் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகிறது. மேலும் ஜனரஞ்சகமான பத்திரிகைகள், ஆய்வு கட்டுகரைகளை வெளியிடும் மருத்துவ இதழ்கள் மூலமாக தரமான மருத்துவ கட்டுரைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வெளியிடப்படுகிறது.
தரமான மருந்துகளை தயாரிக்கவும், தரமான மூலப்பொருட்களை உபயோகப்படுத்தி தயாரிக்கவும் வழிமுறைகள் இங்கு கற்றுத் தரப்படுகிறது. சரியான உபகரணங்களை உபயோகித்து மருந்துகள் தயாரிக்கவும் கற்றுத் தரப்படுகிறது.
நோக்கம் நல்லதாக இருக்கும் பொழுது இணைந்து செயல்பட எல்லோரும் வருவது இயற்கைதானே இப்படித்தான் இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (TIIC) ஆகியவை பெருமளவில் CTMR ன் வளர்ச்சி பணிகளில் உதவி புரிகின்றன. கணவாய்புதூரில் உள்ள AMR நிறுவனம் சேலம் சாரதா நிகேதன் கல்லூரியில் ஒரு மருத்துவரை நியமித்து பொது மக்களுக்கு CTMR மூலமாக மருத்துவ சேவை செய்து வருகிறது.
AIM for Seva என்ற அமைப்பு தயானந்த சரஸ்வதி அவர்களின் உதவியுடன் மிகச் சிறப்பாக நடக்கிறது. ஆனைகட்டியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மருத்துவ பயிற்சியும் தங்களை தற்காத்துக் கொள்ள முதலுதவி பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.
ஆதிவாசிகளில் இருக்கும் முப்பத்து ஆறு இனங்களில் இருளர்கள், குறும்பர்கள், காட்டு நாயக்கன் ஆகியவர்களை தங்களுடைய ஆய்வுக்காக இவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் ஆதிக்க காலத்தில் இருந்தே ஆம்பூர், வாணியம்பாடி, ராணிபேட்டை குடியாத்தம் ஆகிய ஊர்களில் தோல் தொழிற்சாலைகளும், பீடி சுற்றும் தொழிற்சாலைகளும் பெருமளவில் இருந்து வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளால் காற்றும், தண்ணீரும் மிகவும் மாசுபடுகிறது. இதனால் இங்குள்ள மக்களின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இங்குள்ள மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட இந்த நிறுவனம் பல முயற்சிகளை செய்து வருகிறது. இன்னும் பல வழிகளில் செயல்படும் இவர்களின் செயல்பாட்டை மேலும் பார்ப்போம்.
==================================================
ஆங்கில மருந்துகள்தான் உடனடியாக நிவாரணம் தரும், சித்தமருந்துகள் சாப்பிட்டால் குணமாக நாளாகும், பத்தியம் எல்லாம் வேற இருக்கணும் என்கிற எண்ணம்தான் மக்களிடையே பரவலாக இருக்கிறது. ஆனால் அடிப்படையான ஆரோக்கியம் சித்தா முறையில் பாதுகாக்கப்படுமானால் மற்ற மருந்துகளின் உபயோகம் வெகுவாக குறைந்துவிடும் என்பதுதான் உண்மை. CTMR இந்த நிலையை பொதுமக்கள் உணரவேண்டும் என்பதற்காக பெருமளவில் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளது.
அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாத, படிப்பறிவும் இல்லாத மீனவ சமூகத்தினரை CTMR அணுகிய விதம் தான் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு செய்தியாகும். CTMR ன் மருத்துவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் உள்ள பொருட்களின் மருத்துவகுணங்களை எடுத்துச் சொல்லி புரியவைத்து அவற்றை உபயோகிக்கும் முறையையும் கற்றுத் தந்து இருக்கிறார்கள். அங்குள்ள 10வது படிக்கும் மாணவர்களை சளி, காய்ச்சல், வாந்தியெடுத்தல், பாம்பு கடித்தல் போன்றவைகளுக்கு அவர்களிடமே மருந்துகளைக் கொடுத்து சரிசெய்யும் வண்ணம் தயார் செய்து வைத்து இருக்கிறார்கள்.
தொற்று நோய்களான பறவைக் காய்ச்சல், டெங்கு, மலேரியா, காலரா போன்றவற்றிற்கு சித்தாவில் தான் மிகச்சிறந்த மருந்துகள் இருக்கிறது. ஆங்கில மருத்துவர்கள் கூட டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீரை தானே மருந்தாக கொடுத்தார்கள். ஆங்கில மருத்துவமும், சித்தமருத்துவமும் ஒன்றுக்கொன்று போட்டியானது என்று நினைப்பதை தவிர்க்கவேண்டும். எந்த நோய்க்கு என்ன மருந்து கொடுத்தால் குணமாகும் என்றுதான் யோசிக்க வேண்டும்.
நேரம் தவறிய, முறையற்ற பழக்கத்தினால் ஏற்படும் உடற்பருமனுக்கு சித்தவைத்தியம் மிகச்சிறந்தது. இம்மருந்துகள் சாப்பிடும் பொழுது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்று மருத்துவர் சொற்படி கேட்டு நடந்தால் பூரண குணம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.
ஒரு மருத்துவர் ஒரு நாளில் செவிலியின் உதவியுடன் 30 நோயாளிகளைப் பார்ப்பது என்பது நோயுற்றவர்களின் நிலைமையை நன்கு கணித்து மருத்துவ உதவி செய்ய வசதியாக இருக்கும் என்று CTMRநிறுவனம் நினைப்பது சரிதான். வேண்டுமெனில் மருத்துவர்களை அதிகப்படுத்திக் கொள்ளலாமே தவிர, மருத்துவர் நோயாளிகளை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. (நான் முதல்வாரத்தில் கூறியபடி நிறைய கூட்டம் வந்தால் மருத்துவர் மிகக் கெட்டிக்காரர் என்ற எண்ணம் தவறானது)
CTMRன் கவனிப்பால் இப்பொழுது மீனவ சமுதாயத்தினர், மிக எளிதான வழிமுறைகளைப் பின்பற்றி எளிதில் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்ற நோய்களில் இருந்து தங்களை குணப்படுத்திக் கொள்ளுகின்றனர். ஆவிபிடித்தல், வீட்டில் உள்ள மஞ்சள் போன்ற சமையல் பொருள்களை வைத்து பற்றுஇடுதல், வயிற்று உபாதைகளுக்கு பெருங்காயம், ஆடாதொடா இலையின் கொதிநீர் (கஷாயம்) ஆகியவைகளை உபயோகிக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
மில்லட்ஸ் என்று சொல்லப்படும் சிறுதானியங்களின் பயன்பாடு இவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. முறையாக இவற்றை உபயோகிக்கும் பொழுது தேவையற்ற உடல்பருமன், கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள் பெருமளவில் சரியாகின்றன. இவற்றின் பயன்பாட்டை வரும் தொடர்களில் தெரிந்துகொள்வோம்.
====================================
சித்தமருத்துவத்தை பொறுத்தவரையிலும் பஞ்சபூதங்களும், அறுசுவைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகக் கருதப்படுகிறது.
இனிப்பு – மண்ணும் நீரும்
துவர்ப்பு – மண்ணும் காற்றும்
கசப்பு – காற்றும் ஆகாயமும்
புளிப்பு – மண்ணும் தீயும்
உப்பு – நீரும் தீயும்
காரம் – காற்றும் தீயும்
என்ற வகையில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே இனிப்பு சாப்பிடும் பொழுது கபம், கசப்புடன் வாதமும், தீயுடன் பித்தமும் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. கலோரி என்ற ஒரு உணவின் சத்து அளவு இன்றைக்கு வெகுவாகப் பேசப்படுகிறது. இந்த அளவுடன் கூட சித்த மருத்துவம் ஒவ்வொரு உணவுப் பொருளில் உள்ள நிறமூட்டி (Colour), மணமூட்டி (Flavour), சுவையூட்டி(Smell or taste) இவைகளைக் கொண்டே உணவின் உபயோகத்தையும் கலோரியையும் நிர்ணயிக்கிறது.
இந்த வகையில் சிறுதானியங்கள்(Minor Millets) என்று சொல்லப்படும் வகைகளை நாம் ஒதுக்கியே வைத்து இருந்தோம். அவை ஏழைகளின் உணவு, சமைக்கும் முறை கடினமானது. இதை சாப்பிடுவது மேல்தட்டு மக்களுக்கு உகந்தது இல்லை என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால் இன்றைய மாசு நிறைந்த சூழலில் இந்த வகை சிறுதானிய உணவுகள்தான் நம்மை காப்பாற்றும் என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டுவிட்டோம்.
சிறுதானியங்கள் என்பது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கம்பு – Pearl millet
வரகு – Kodo Millet
தினை – Fox millet
ராகி – Finger Millet
சோளம் – Jovar Millet
சாமை – Little Milliet
குதிரைவாலி – Banyard Millet
இவற்றின் குணங்களாக சித்தமருத்துவம் கூறுவது.
ராகி – வயிற்று உபாதை (Abdominal Pain), வாதபித்தத்தை சரிசெய்யும்.
கம்பு – உடலின் உள் கொதிப்பை அகற்றி வலுவைக் கொடுக்கும்.
தினை- புரதமும், சுண்ணாம்பும் பெருமளவில் உள்ள தானியம். கபம், குளிர் காய்ச்சலைப் போக்கக் கூடியது, எலும்பு தேய்மானத்தை குறைக்கும், எலும்புமுறிவு (Fracture) குணமாவதை துரிதப்படுத்தும்.
சாமை – ஆயுர்வேதத்தில் சாமை ராசதான்யம் என்று சொல்லப்படுகிறது. வாதம், காய்ச்சல்(Fever) சமனப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.
சோளம் – சோறாகவும், உப்புமா, பொங்கல் போன்றவை செய்ய உகந்தது. உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இனிப்பும், துவர்ப்பும் கலந்த ஒரு சிறந்த தானியம்.
வரகு – சர்க்கரைவியாதி (diabetic) உள்ளவர்களின் நண்பன் இந்த வரகாகும். கபத்தையும் கட்டுப்படுத்தும் அதிக அளவில் நார்ச்சத்து (fibre) நிறைந்த பொருள் இது.
குதிரைவாலி – அடிப்படையில் சாமையைப் போன்ற தானியம் இது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாமையின் குணங்கள்தான் இந்த தானியத்திற்கும். இவை அனைத்தும் வறண்ட தண்ணீர் குறைவான பிரதேசங்களில் எளிதில் பயிடக்கூடிய தானியவகைகள் ஆகும்.
=====================================================
இந்தத் தொடரில் வரும் சில அத்தியாயங்களுக்கு சிறுதானிய உணவுகள் குறித்து அறிமுகம் தரப்படும்.
சிறுதானிய அடை
தேவையான பொருட்கள்:
சோளம் -2 தேக்கரண்டி
கம்பு – 2 தேக்கரண்டி
கொள்ளு – 2 தேக்கரண்டி
தினை – 2 தேக்கரண்டி
ராகி -2 தேக்கரண்டி
ஓமம் – ½ தேக்கரண்டி
மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
சுக்குப் பொடி -½ தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு
நறுக்கிய காய்கறிகள் -தேவையான அளவு
(காரட், பீன்ஸ், காளிஃப்ளவர்,பச்சை பட்டாணி)
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
இரவில் ஊறவைத்த சிறுதானியங்களை, அடைமாவு பதத்திற்கு அரைக்க வேண்டும். இதனுடன் எண்ணெய் தவிர, மேலே கொடுக்கப்பட்ட மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்க வேண்டும். இதனை தோசைக்கல்லில் சிறிய அடையாக ஊற்றி அதனைச் சுற்றி எண்ணெய் விட்டு மூடி வைக்க வேண்டும். வெந்தவுடன் இதனை சூடாக பரிமாறவும் இதற்கு எந்த சட்னியும் தேவையில்லை.
குதிரைவாலி உப்புமா
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி – 100 கிராம்
வெங்காயம் (நறுக்கியது)- 1
பச்சைமிளகாய்(நறுக்கியது) -1
இஞ்சி (நறுக்கியது) – 5 கிராம்
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கலந்த காய்கறிகள் (நறுக்கியது) – 1 கோப்பை
(காரட், பீன்ஸ், பச்சை பட்டாணி,காளிஃப்ளவர்)
செய்முறை:
குதிரைவாலியை நன்றாக பொரிந்து வரும் வரை நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் உளுந்தம்பருப்பை சேர்த்து பொரிந்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, கலந்த காய்கறிகள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். ஒரு கோப்பை தானியத்திற்கு 4 கோப்பை என்ற அளவிற்கு தண்ணீரை இதனுடன் சேர்த்துக்கொண்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும். கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது வறுத்த குதிரைவாலியை சேர்த்து சிறுஅனலில் வைக்கவேண்டும். அதனை மூடிவைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். வழக்கமாக நாம் செய்யும் ரவை உப்புமாவை விட இந்த உப்புமா வேக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
சாமை பொங்கல்
தேவையான பொருட்கள்:
சாமை – 100 கிராம்
பச்சை பயிறு -50 கிராம்
இஞ்சி – 5 கிராம்
பச்சை மிளகாய் -1
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 தேக்கரண்டி
மிளகு மற்றும் சீரகம் – ½ தேக்கரண்டி
கருவேப்பிலை – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
செய்முறை:
சாமையையும், பச்சை பயிறையும் நன்றாக கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். ஒரு கோப்பை தானியத்திற்கு 4 கோப்பை தண்ணீர் என்ற அளவிற்கு தண்ணீரை சேர்த்துக்கொள்ளவேண்டும். கடைசியாக இத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். இக்கலவையை அவிப்பானிற்கு (குக்கர்) மாற்றி, நன்றாக பொங்கல் போல வேகவைக்க வேண்டும்.
ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி மிளவு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனை மேற்சொன்ன பொங்கலுடன் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
கேழ்வரகு ரொட்டி(கட்லட்)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) – 1
கேழ்வரகு மாவு – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -1 இஞ்சி – 5கிராம்
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
வெங்காயம் (நறுக்கியது) – 1 (தேவையெனில்)
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மென்மையாக கலக்க வேண்டும். தேவையெனில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். சிறிய ரொட்டி (கட்லட்) வடிவத்தில் செய்து, தோசைகல்லில் இட்டு முழுவதுமாக வெந்தவுடன் எடுத்துவிடலாம். வேகும் பொழுது சிறிதளவு எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட ருசியாக இருக்கும்.
===================================================
தினை லட்டு
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைத்த தினை மாவு (நரிவால் தினை)– 1 கோப்பை
பொடித்த வெல்லம் – ½ கோப்பை
நெய் – 3 தேக்கரண்டி
திராட்சை மற்றும் முந்திரிபருப்பு – தேவையான அளவு
ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை
செய்முறை:
வறுத்து அரைத்த தினை மாவு, பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி இவற்றை கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் திராட்சை மற்றும் முந்திரிபருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின் இதனை கலந்து வைத்துள்ள தினை மாவுடன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக செய்தால் சுவையான தினை லட்டு தயாராகிவிடும்.
கேழ்வரகு இடியாப்பம்
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 1 கோப்பை
அரிசி மாவு – 1கோப்பை
உப்பு – தேவையான அளவு
சூடான தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகு மாவு, அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பும் கலந்து சூடான தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதிலிருந்து இடியாப்பம் தயார் செய்யலாம். இதனை ஓமவல்லி பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.
உளுந்தங்களி
தேவையான பொருட்கள்:
உளுந்தம்பருப்பு – 2 கோப்பை
வெல்லம் – 50 கிராம்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
உளுந்தம்பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து பின் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு வாணலியில் மாற்றி வெல்லம் நன்கு கரையும் வரையிலும் உளுந்தமாவு நன்றாக வேகும் வரையிலும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவேண்டும். கடைசியாக 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.
நெல்லிக்காய் பச்சடி
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் (கொட்டை நீக்கியது) – 2
பச்சைமிளகாய் சிறியது – 1
இஞ்சி – 5 கிராம்
தயிர் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காய், பச்சைமிளகாய், இஞ்சி இதனை அம்மியில் இட்டு ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி உப்பு மற்றும் தயிர் கலந்து பரிமாறவும்.
=============================================
தினை பாயசம்
தேவையான பொருட்கள்:
தினை (வறுத்து பொடி செய்தது) – ஒரு கோப்பை
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
பச்சைப் பயிறு – 1 தேக்கரண்டி
வெல்லம் – தேவையான அளவு
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
முந்திரிபருப்பு – 1 தேக்கரண்டி
உலர் திராட்சை -1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
காய்ச்சிய பால் – ½ கோப்பை
செய்முறை:
கடலைப்பருப்பு மற்றும் பச்சைப் பருப்பு இவ்விரண்டையும் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் தினை கலந்து 4 கோப்பை தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். பின் பொடித்து வைத்த வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக ½ கோப்பை பால் சேர்த்து இறக்கிவிடவும். பின் நெய்யில் வறுத்த உலர் திராட்சை மற்றும் முந்திரி பருப்பை சேர்த்தால் சுவையான தினை பாயசம் தயார். இதனை சூடாக பரிமாறவும்.
மாதுளை மனப்பாகு
தேவையான பொருட்கள்:
மாதுளை சாறு – ½ கோப்பை
சர்க்கரை – 1 கோப்பை
சுக்கு (பொடி செய்தது) – ½ தேக்கரண்டி
செய்முறை:
மாதுளை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து வேகவைக்கவேண்டும். மிதமான சூட்டில் வைத்து தொடர்ந்து கிளறிக்கொண்டிருக்க வேண்டும். ஓரளவுக்கு கெட்டியாக வரும் பதத்தில் இறக்கிவிடவும். கடைசியில் சுக்குப்பொடியை சேர்த்தால் சுவையான மாதுளை மனப்பாகு தயார்.
ஓமவல்லி பச்சடி
தேவையான பொருட்கள்:
ஓமவல்லி இலை – 4
உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
பச்சைமிளகாய் சிறியது – 1
இஞ்சி – 5 கிராம்
துருவிய தேங்காய் (தேவையெனில்) – ½ தேக்கரண்டி
தயிர் – 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை:
உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், துருவிய தேங்காய், பச்சைமிளகாய் ஆகியவற்றை செந்நிறமாகும் வரை வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
சுத்தம் செய்த ஓமவல்லி இலையை சிறிது எண்ணெய் ஊற்றி சுருங்கும் வரை வதக்க வேண்டும். இதனுடன் அரைத்துவைத்த பொடியை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்க வேண்டும். பின் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கடைசியாக கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து இதனுடன் சேர்க்க வேண்டும். தாளிக்காமலும் இதனைப் பரிமாறலாம்.
பிரண்டை சட்னி
தேவையான பொருட்கள்:
பிரண்டை – 1 சிறிய கோப்பை
(முனைகளை நீக்கி நறுக்கியது)
உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
புளி – 20 கிராம்
இஞ்சி – 5 கிராம்
மிளகு – 4
காய்ந்த மிளகாய் – 3
கறுப்பு எள் – 1தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
பிரண்டை இலையை ½ தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்க வேண்டும்.
உளுந்தம்பருப்பு, இஞ்சி, எள், மிளகாய், மிளகு சேர்த்து நன்கு தனியாக வறுக்க வேண்டும்.
வதக்கிய இலையை வறுத்த பொருட்களுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். தேவையெனில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
கீழ்வாதத்திற்கு இது மிகவும் உகந்தது.
முடிவுரை:
திருமூலரின் திருமந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் சித்தமருத்துவம். வாழ்க்கை முறையும் உணவு பழக்கமும் ஓரளவு நெறிமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சித்தமருத்துவம் கூறுகிறது. மனஅழுத்தம்(Stress) என்பது இன்றைய நாளில் ஒரு பரீட்சயமான வார்த்தையாகிவிட்டது. இந்த மனஅழுத்தத்தை அறவே குறைக்கும் வழியை நாடு, அல்லது மனஅழுத்தத்தை குறைக்கும் மாற்றுவழியைத் தேடு என்று சொல்வதும் இந்த மருத்துவ முறைதான். அசுவகந்தா சூரணம், மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு நல்ல மருந்தாகும்.
எந்த மருத்துவமுறையும் முழுமையானது அல்ல என்பதுதான் உண்மையான நிலையாகும். எனவே மருத்துவமுறைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உதவிடும் வகையிலும் (Complementary Approach) ஒருங்கிணைந்த சிகிச்சை என்ற முறையிலும் (Integrated Approach) வருவது பொதுமக்களுக்கு நன்மையளிக்கும். எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற ஆன்றோர் வாக்குப்படி ஆரோக்கியமாக, இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறையை வாழ அனைவரும் முயற்சி செய்வோம்.
நன்றி :-ஜெயாசுந்தரம் @ http://siragu.com/

Thursday, October 2, 2014

தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம்

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.
மூலிகை கசாயம்:
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கை கீரை
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்

குளிர்கால தொண்டை புண் (Winter Sore Throat)

பொதுவாக குளிர்காலங்களில் நோய் கிருமிகளின் தாக்குதல் அதிகமாவே இருக்கும். இவற்றால் நம் தொண்டையின் பாதிப்பு அதிகமே!!! தொண்டையில் புண் (Sore throat) வரும். பின் நமக்கு பிரச்சனையே. அதற்காக அடிக்கடி ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் மேலும் பல பிரச்சனைகள் வரும். ஆகையால் இதற்காக கவலைப்படாதீர்கள். உடனடி நிவாரணம் இதோ தயார்!!!!
நிவாரண மருந்து செய்யும் முறை:
———————————-
தேவையான பொருட்கள்:
1), இரண்டு எலுமிச்சை பழங்கள் (Lemon)
2), இரண்டு விரல்கள் அளவு இஞ்சி (Ginger)- (ஆள்க்கட்டி விரல்,நடுவிரல் போன்று)
3), ஒரு கப் அளவு சுத்தமான தேன் (ஒரு கப் என்பது 225ml, அதிக தேன் இருந்தாலும் பிரச்சனை இல்லை)
4), 300ml கொள்ளலவு அளவு உள்ள காலி ஒரு ஜார் ( 300ml capacity Jar)
செய்முறை:
————-
1), முதலில் எலுமிச்சை பழத்தையும், இஞ்சியையும் நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.
2), பிறகு இஞ்சியை Coin போல் சிறிதாக வெட்டவேண்டும்.
3), எலுமிச்சை பழத்தையும் மெல்லிய Slice ஆக வெட்டவேண்டும்
4), பின்னர் 300ml கொள்ளலவு அளவு உள்ள காலி ஜாரில் ( 300ml capacity Jar) வெட்டப்பட்ட எலுமிச்சை, இஞ்சி எடுத்துக்கொள்ளுங்கள்,
5), பின்னர் எலுமிச்சை, இஞ்சி இவற்றின் மீது தேனை நன்றாக ஊற்றுங்கள்.
6), மேலும் தேனால் எலுமிச்சை பழமும், இஞ்சியும் நன்றாக ஊற வேண்டும், இடைவெளி இல்லாமலும், அவற்றை தேன் முழுவதும் மூடி இருக்கும் அளவு தேன் இருக்கவேண்டும்.
7), பின்னர் ஜாரை(JAR) மூடி பிரிஜில் (fridge) வையுங்கள்.
8), Jelly போன்று ஆகிவிட்ட பின் பயன்படுத்தலாம்.
9), இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
———————-
பிரிஜில்(Fridge) வைக்கப்பட்ட Jellyபோன்று இருக்கும் மருந்திலிருந்து ஒரு ஸ்பூன் (Spoon) மருந்தை எடுத்து தம்ளரில் வையுங்கள், பின்னர் நன்றாக கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். பிறகு அதை நன்றாக கலக்குங்கள். இப்போது குடியுங்கள். உங்கள் “தொண்டைப்புண்”சரியாகி விடும். நன்றாக பேசுங்கள்.
(குறிப்பு: சுடு தண்ணீரில் தேன் கலந்து குடித்தால், உடல் பருமன் குறையும்- Note this beauty tips)
நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/

கை மருத்துவத்தில் சிறந்தது சுக்கு..!

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். சுக்கு , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
குலசை.ஆ.சாமி @ நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/

பித்தப்பை கல் நோய் நீங்க

இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஓன்று. இதை ஆங்கிலத்தில் (Gallstones) என்பார்கள். இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது என்றால், உணவு முறை தான் முதல் காரணம். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல்,உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.
அது போல் இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அரை.நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது.
அவையாவது கொழுப்பு,பித்தச்செம்பசை,பித்த உப்பு. இது சுரந்து அதை குடல் வழியாக நம் உணவோடு சேர்த்துவிடும்.மேலும் இது உருவாவதற்கு பல வகையான கரங்கள் உண்டு.
அவற்றை கீழே பாப்போம்.
1) இந்த நோயானது நம் குடுமபத்தில் யாருக்காவது இருந்தது என்றல். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்பு உள்ளது.
2) உடல் பருமன் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. உடல் பருமனானவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உண்டாகிறது.அந்த கொழுப்பானது பித்தபையை காலியாக இருக்கவிடாது.
3) எசுத்தோசென்(Estrogen): இது கொழுப்பை அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தபையை அசைய விடாமல் அதன் செயல் பாடுகளை குறைக்கும். மாசமாக உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை எடுத்து கொண்டவர்கள், ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்புகள் அதிகம்.
4) இனம் சம்பந்தமாக பூர்வீகம் உள்ளவர்களுக்கு இந்த நோய் வர வாய்புகள் அதிகம்.பூர்வீக அமெரிக்கர்களுக்கு மற்றும் மெகசிகோ அமெரிக்கர்களுக்கும் இந்த நோய் பரவலாக வரும் வாய்ப்பு உள்ளது.
5)பாலினம் மற்றும் வயதும் ஒரு முக்கிய காரணம். இந்த நோய் வயதான பெண்களை அதிகமாக தாக்கும்.
6)போதையான கொழுப்பு பொருள் பித்தத்தில் கொழுப்பை அதிக படுத்தும்.இது போன்று நிகழும் போது கொழுப்பு கற்கள் உருவாகும்.
6) நீரிழிவு: நீரழிவை த்டுபதற்காக கையலபடுகிற முறைகளினால் இரத்தத்தில் கொழுப்பு உண்டாகும். இந்த வகை பித்தப்பை கல் மிக மோசமானது.
இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டும்.
நோன்பு நோர்பதினால் பித்தப்பை சுருங்கும்.
இந்த நோயின் அறிகுறிகள்:
1) மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின் மேற்புறத்தில் வலி உண்டாகும்.
2) குமட்டுதல்: இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும்.
3) வாந்தி உண்டாகும்.
4) உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயு தொல்லை உண்டாகும், அசீரணம் பிரச்சனைகள் உண்டாகும்.
மருத்துவம்:
இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.
முடிந்த வரை இந்த மருந்தை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் உடன் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் தெரியபடுத்துங்கள். மேலும் இந்த மருந்தை உபயோக படுத்தியவர்கள் தங்களின் அனுபவத்தை என்னிடம் தெரிய படுத்து மாறு கேட்டு கொள்கிறேன்.
கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இறைவன் உங்களுக்கு பூரண குணம் அளிப்பானாக.

Ref: தகவல்,நன்றி :-http://mohamedushama.wordpress.com/

உடல் பருமன் குறைக்கும் கொள்ளு சாதம்

உடல் பருமன் குறைக்கும் சமையல் கொள்ளு சாதம்
தேவையான பொருட்கள்
வேகவைத்த கொள்ளு 1 கப்
வேகவைத்த சாதம் 2 கப்
எண்ணெய் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
சுக்கு பொடி 1 டீஸ்பூன்
கடுக்காய் பொடி 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சின்ன வெங்காயம் 1 கப்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும், பின் வெட்டிய சிறிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும், பின் கொள்ளு, சுக்குப் பொடி, கடுக்காய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். அதன்பின் வேகவைத்த சாதம் சேர்த்து, கிளறி ஒரு நிமிடம் மூடிவிடவும். சூடாகப் பறிமாறவும்
-----------------------------------------------------------------------------------------------
உடல் பருமனை குறைக்க
உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் —
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும். -
---------------------------------------------------------------------------------------
உடல் பருமன் குறைய
இன்றைய நவீன யுகத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்னையாகிவிட்டது. உடல் பருமனால் பாதிக்க படாத குடும்பங்களே இருக்க முடியாது என்கிற அளவிற்கு. உடல் பருமன் பிரச்சனை மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டது. கணினி மற்றும் நவீன சாதங்களின் வளர்ச்சியால் மனிதர்களுக்கு உடல் உழைப்பு குறைந்துவிட்டது. இதன் விளைவே இந்த உடல் பருமன் பிரச்சனை. இதை சாக்காக வைத்து பலர் உடல் பருமனுக்கு எளிமையான மருந்து என்று பொய் சொல்லி கண்ட கண்ட மாவுகளை கொடுத்து. கண்ட கண்ட சாதனைகளை கொடுத்து பல ஆயிரம் ரூபாய் காசு பார்த்துவிடுகின்றனர். ஆனால் நமது சித்தவைத்தியத்தில் உடல் பருமனுக்கு மிகச்சுலபமான வழி முறைகள் உள்ளன. நம் வீட்டில் இருக்கும் சமையல் பொருளை வைத்தே மிகச்சுலபமாக குறைந்தது நாற்ப்பது நாட்களிலேயே உடல் பருமன் பிரச்சனைக்கான நிவாரணத்தை கண்கூடாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மோர் தேவையான அளவு .
சீரகம்.
வெந்தயம்.
மிளகு.
செய்முறை :
வெந்தயம். மிளகு. சீரகம் ஆகிய மூன்றையும் பொடியாக அரைத்து அதை மோரில் கலக்கி தினமும் குடித்து வர உடலின் எடை வெகு விரைவில் குறையும்.
நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/