Wednesday, October 29, 2014

தமிழ் - ஆங்கிலம் (உணவு பொருட்கள் ) -1

Kitchen Provisions - பலசரக்குகள்
Acorus - வசம்பு
Almond - பாதாம்
Anise - சோம்பு
Areca nut - பாக்கு
Asafoetida - பெருங்காயம்
Barley - பார்லி அரிசி, வால்கோதுமை
Beans - அவரை
Bengal - gram - கடலை
Black- gram -உளுந்து
Bell peppers - கொடிமிளகாய்
Black-eyed peas - மரமணி
Bishop's weed - ஓம‌ம்
Butter - வெண்ணெய்
Butter milk - மோர்
Brussels sprouts - கலாகோஸ்
Buckwheat - கொட்டு
Cardamom - ஏலக்காய்
Cashewnut - முந்திரிப்பருப்பு
Cheese - பாலடைக்கட்டி
Chickpea - bengal gram - கடலை
Chili - மிளகாய்
Cinnamon - லவங்கபட்டை, பட்டை
Clove - கிராம்பு
Coconut - தேங்காய்
Coriander seed - கொத்தமல்லி விரை, வரகொத்தமல்லி, தனியா.
Cubebs - வால்மிளகு
Cucumber - வெள்ளரிபழம், கிரகை
Cumin - ஜீரகம்
Curry leaves - கருவேப்பிலை
Curd - தயிர்
Fennel - பெருஞ்சீரகம்
Fenugreek seed - வெந்தயம்
Finger millet - கேழ்வரகு
Garlic - உள்ளிபூண்டு, வெள்ளை பூண்டு
Gallnut - கடுக்காய், மாசிக்காய்
Ghee - நெய்
Ginger - இஞ்சி
Green beans - பீன்ஸ்
Green-gram -பச்சைப்பயிறு
Groundnut - வேர்கடலை
Grits - நொய்யரிசி
Honey - தோன்
Horse-gram - கொள்ளு
Incense, myrrah, gumbenjamin - சாம்பிராணி
Jaggery - வெல்லம்
Joss-stick - ஊதுவத்தி
Licorice - ( liquorive ) - அதிமதுரம்
Linseed - ஆளிவிதை
Mace - ஜாதிப்பத்திரி
Maize - மக்கா சோளம்
Millet - கம்பு
Mung bean - பாசிப்பயறு, பயத்தம்ப்பருப்பு
Musk - கஸ்தூரி
Mustard seed - கடுகு
Nutmeg - ஜாதிக்காய்
Oregano - ஓமம்
Paddy - நெல்
Peas - பட்டாணி
Pepper - மிளகு
Poppy - கசகசா
Pigeon pea / red gram - துவரை, துவரம்பருப்பு
Pistachio - பிஸ்தா
Ragi - கேழ்வரகு
Rolong - கோதுமை நொய்
Rose water - பன்னீர்
Pumpkin - பூசணி
Red lentil - மசூர்
Red-gram - துவரை
Rice - அரிசி
Rice - parboiled - புழுங்கல் அரிசி
Rice - raw - பச்சரிசி
Saffron - குங்குமப்பூ
Sago - ஜவ்வரிசி
Salt - உப்பு
Sarsaparilla - நன்னாரி
Sugar - சர்க்கரை
Semolina - ரவை
Sesame seeds - எள்
Sorghum - சோளம்
Soyabean - சோயா பீன்ஸ்
Split peas / lentils - பருப்பு
Sunflower - சூர்யகாந்தி
Tamarind - புளி
Turmeric - மஞ்சள்
Urad bean - உளுத்தம் பருப்பு
Wheat - கோதுமை
தமிழ் - ஆங்கில உணவு பொருட்கள்- 2
Fruits - பழவகைகள்
Banana - நேந்திர பழம்
Custard-apple -சீதாப்பழம்
Fig - அத்திபழம்
Jujube fruit -இலந்தைப் பழம்
Melon - முலாம் பழம்
Musk-melon,Cucumber - வெள்ளரிப் பழம்
Orange - கிச்சிலிப் பழம்
Pear -பேரிக்காய்
Pompel moose, pumple-moses- பம்பளிமாஸ்
Prune -ஆல்பாகாறா பழம் ( ஒரு வகை பழ வற்றல் )
Raisin -உலர்ந்த திராட்சை
Rose apple - ஜம்புநாகப்பழம்
Shaddock ( or ) pomelo - கிடாரங்காய், பழம்
Wood-apple - விளாம்பழம்
Flowers - புஷ்பங்கள்
Camomile - சாமந்தி
Common sweet basil -திருநீற்றுப்பத்திரி
Holy-basil,tulsi -துளசி
Jasmine -மல்லிகைப் பூ
Lotus -தாமரை
Millingtonia -மரமல்லிகை
Oleander -அலரி, அரளி
Patcholly - கதிர்ப்பச்சை
Rangoon creeper -ரங்கூன் மல்லிகை
Rose - ரோஜாப்பூ
Sunflower ( or ) Jasper -சூரிய காந்தி
Water-lily -அல்லி
Water solder - நந்தியாவட்டை
Vegetables - காய்கறிகள்.
Angular (or) ribbed gourd - பீர்க்கங்காய்
Beans - அவரையினத்தைச் சேர்ந்த காய், பீன்ஸ்.
Beet root -சக்கரைக் கிழங்கு, பீட்ரூட்
Bell peppers கொடிமிளகாய்
Bitter gourd -பாகற்க்காய்
Bottle gourd -சுரைக்காய்
Bread-fruit - கொட்டைப் பலாக் காய்
Brinjal -கத்தரிக்காய்
Cabbage -முட்டைக்கோஸ்
Capsicum -குடமிளகாய்
Carrot -ஒருவித வெண் சிவப்பு , முள்ளங்கி ( கேரட் )
Cluster-beans -கொத்தவரைக்காய்
Cucumber -கக்கரிக்காய், வெள்ளரிபழம், கிரகை
Curry-leaf -கறிவேப்பிலை
Coconut தேங்காய்
Fava beans கருப்பு அவரைக்காய்
Fenugreek leaves வெந்தயம் கீரை
Goose-berry, amla -நெல்லிக்காய்
Green plantain -வாழைக்காய்
Garlic உள்ளிபூண்டு, வெள்ளை பூண்டு
Gourd -பூசணிக்காய், பூசணி வகை
Ginger இஞ்சி
Green beans பீன்ஸ்
Horse radish (or) drumstick -முருங்கைக்காய்
Lady's finger, bhindi -வெண்டக்காய்
Lettuse -கீரைவ‌கை, அரை கீரை
Moong bean -ப‌ய‌த்த‌ங்காய்
Mint - பொதினா, புதினா
Onion -வெங்க‌யாம்
Onion (small) சின்ன வெங்காயம்
Potato -உருளைக்கிழ‌ங்கு
Peas பட்டாணி
Pumpkin -ந‌ல்ல‌ பூச‌ணிக்காய், பற‌ங்கிக்காய்
Radish -ஒருவ‌கை முள்ள‌ங்கி
Sabre-bean -அவ‌ரைக்காய்
Snake-gourd -புட‌ல‌ங்காய்
Spinach பசலை கீரை
Sweet potato -ச‌ர்க்க‌ரை வ‌ள்ளிக் கிழ‌ங்கு
Tamarind புளி
yam -சேனைக்கிழ‌ங்கு
http://azhkadalkalangiyam.blogspot.in/

Tuesday, October 28, 2014

காயகற்பம் - ஒரு விளக்கம்!!!!!

பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.
வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும். இரண்டாவதாக இரசவாதம் மூலமாக முப்பு என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடம் 500 வருடம் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.
உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.
மனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள். அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் லம்பிகா யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடியதே காயகற்பக் கலையாகும்.
------------------------------------------------------------------------------
வேம்பு கற்பம் (காயகற்பம்).
புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
ஆமாப்ப பட்டையைத்தான் வெட்டிவந்து
அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
கொண்டிடவே யனுபான வகையைக்கேளு
மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே
நந்தீசர் சகலகலை ஞானம் -1000
நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார்
தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை தேடி அதன் பட்டையை வெட்டிவந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும் இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு ,கொத்தமல்லி இலையை இடித்த சாறு இரண்டும் சமமாகக்கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும் இதை வெயிலில் வைத்து காயவிடவும் இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக்கலந்து வெயிலில் காயவிடவும்
இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று பெயர் இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர் இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு டீ ஸ்பூன் அளவு)எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை -மாலை)என நாற்பது நாள் உண்ணவும்
இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும், தசைகள் இறுகும், தலைமுடி நரை மாறும் ,பார்வைத்திறன் அதிகரிக்கும், உடல் இளவயது தோற்றம் பெரும், மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்து திடப்படும், உடல் உறவில் அதிகநேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்வோருக்கு பேரின்பசித்தி கிட்டும் மற்றும் ஞானத்தின் ஆறு நிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த "வேம்பு கற்பம்" உண்டவனைக் கண்டு காலன் என்ற எமன் அஞ்சுவான் என குறிப்பிடுகின்றார்
இப்படி மகத்துவம் வாய்ந்த "வேம்பு கற்ப சூரணம்"செய்து உண்டு அனைவரும் பெரும் பயனடையலாமே.

Monday, October 27, 2014

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.
இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.
உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்
கோரை கிழங்கு பொடி 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்
இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும். இந்த மருத்துவ முறையை வராகமித்ரர் அங்கரசனைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.
குளியல் பொடி:
இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.
குளியல்பொடி தயாரிப்பது எப்படி?
மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
சோம்பு 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
வெட்டி வேர் 200 கிராம்
அகில் கட்டை 200 கிராம்
சந்தனத் தூள் 300 கிராம்
கார்போக அரிசி 200 கிராம்
தும்மராஷ்டம் 200 கிராம்
விலாமிச்சை 200 கிராம்
கோரைக்கிழங்கு 200 கிராம்
கோஷ்டம் 200 கிராம்
ஏலரிசி 200 கிராம்
பாசிப்பயறு 500 கிராம்
இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
http://www.dinakaran.com/

மூலிகை முதலுதவிகள்

’முதலுதவி செய்ய மூலிகை அறிவு’ என்பது அன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், குறிப்பாய் குடும்பத்தலைவிக்கு நிச்சயம் உண்டு. தொழிற்புரட்சி காலத்திற்கு பின் இங்கிலீஷ் மருத்துவம் வேகவேகமாக உலகெங்கும் காலூன்றிய போது, நாட்டு மருத்துவம் முழுமையும் நசுங்கி விடாமல் காப்பாற்றப்பட்டதிற்கு பாட்டி வைத்தியமாய் அது வீட்டில் பெண்களால் பாதுகாக்கப்பட்டதும் முக்கிய காரணம். மூலிகை என்றதும் பலரும் நினைப்பது, ’ஏதோ ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி எடுக்கும் விஷயம்’ என்று. நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும்,
அருகாமை நிலத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமல், ’சைரன் இல்லாத 108 வேன்’ மாதிரி பல மூலிகைகள் முதலுதவி செய்ய காத்திருக்கின்றன.
விருப்பமான உணவு தயாரிக்கும் வித்தை மாதிரி, முதலுதவிக்கு வீட்டில் இருந்தே கைமருந்தாய் கொடுக்கும் வித்தையும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் தெரிந்திருக்க வேண்டும். ‘ஐய்ய்யோ! கைமருந்தா!?’ அது ஆபத்தாச்சே என்ற மேல்தட்டு மனோபாவம் மாற வேண்டும். எது அவசரம்? எது ஆரம்பம்? எது சின்ன சிரமம்? என்ற அடிப்படை அறிவு வீட்டில் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருப்பது அவசியம்.
நல்ல உருளைக்கிழுங்கு போண்டாவும் மொச்சைப்பயறும் சாப்பிட்டுவிட்டு கனவிலும் பைக்கில் மட்டுமே வாக்கிங் போகும் நபருக்கு, “கேஸ் போக மாட்டேங்குது: வயிரு உப்புசமாயிருக்கு; மார் வலிக்கிறது- பகவான் கூப்பிடரார்-னு நினைக்கிறேன். எனக்கு ஒருதடவை கடைசிப்புள்ள சுரேஷைப் பார்க்கணும்; புறப்பட்டு வரச் சொல்றியா?”ன்னு கேட்க, டாக்டருக்கும் விளி மானிலப் புள்ளைக்கும் போன்க்ள் பறக்கும். தடாலடியாய் ராவோடு ராவா பஸ்-டிரய்ன் பிடிச்சு அவர் வர, அவர் வந்து சேர்வதற்குள் , நட்சத்திர மருத்துவமனையில் வேகவேகமாக எல்லா ’டெஸ்டிங் சன்னதி’யிலும் சேவிச்சிட்டு கடைசியில், மூலஸ்தானத்து பெரிய டாக்டர் கடவுள், ” யு.ஆர்.லக்கி! ஒண்ணுமில்லே! இந்த மாத்திரைய சாப்பிடுங்க..ன்னு சின்னதாய் ஒரு மாத்திரை பிரசாதத்தையும், பெரிசாய் ஒரு பில்லையும் புன்னகையுடன் தந்து செல்வார்.
”நான் படிச்சு படிச்சு சொன்னேன்; இந்த போண்டா போளீ எல்லாம் வேண்டாம் வேண்டாம்-னு கேட்கிறாரா மனுசன் ?” என வீட்டம்மா அங்கலாய்க்க, ”ஏண்டி! அப்ப எனக்கு ஒன்றுமில்லே-ன்னு சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கா?”-ன்னு அவர் புலம்பும் வேளையில், கசங்கிப்போய் கடைசிப்பிள்ளை வாசலில் வந்து நிற்பார். ஒரு அவுன்ஸ் ஓம வாட்டரோ, ஒரு கிளாஸ் பெருங்காயம் கலந்த மோரோ அல்லது ஒரு ஸ்பூன் அன்னப் பொடியோ செய்து தரத் தெரியாத படித்த அறிவாளி நாகரீக குடும்பத்தில் இப்படித்தான் முதலுதவிகள் ரொம்ப காஸ்ட்லி! கைப்பக்குவமாய் முதல் உதவி செய்ய உதவும் மூலிகைகள் சில குறித்து பார்க்கலாமா?
ஆடாதொடை- எந்த உரமும் போடாமல்,எந்த பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்த செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. கொடிய கசப்புள்ள இந்த செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்து கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வர தயங்கும் நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியை கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.
அதிமதுரம் - இனிப்பு சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும்.
திப்பிலி – சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலி கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவது ’வீசிங்கை’ குறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.
ஓமம் – வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது செர்யாது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்து கசாயமாக்கி சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10மிலி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து ½ டம்ளர் குடிக்கச் சொல்லலாம்.
சீரகம்- லேசான கிறுகிறுப்பு அதிக பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளை கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிட குறையும்.
வாய்விடங்கம்- வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு மிளகு சேர்த்து கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு மதிய வேளையில் மோரில் பெருங்காய தூள் போட்டு சாப்பிட தீரும்.
கடுக்காய்- விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.
கற்றாழை – குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய் காலத்துவரும்வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு வெந்தயம் பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாக கிளறி எடுத்து தினசரி ஒரு சிரூ நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை!
சாதிக்காய்- தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள் ½ சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.
இலவங்கப்பட்டை – பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்த பட்டையை தே நீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.
இந்த பட்டியல் பெரிது..ஆனால் இந்த அறிவு மிக முக்கியமானது. பிட்சாவிற்கு மெக்ஸிகன் சில்லி போடவும் சல்சா சட்னி தொடவும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம், நம் பாரம்பரிய சொத்தை மறப்பதும் மறுப்பதும் மடமை. ஹெல்தி கிச்சன் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்த கிச்சனில் இந்த பொருட்களும் பொருள் குறித்த அறிவும் மிக அவசியம். எந்த மூலிகை எப்படி இருக்கும் என எனக்கு தெரியாதே என டபாய்க்க வேண்டாம். ’ஓட்ஸ்’ தெரியாத பாட்டியோ/பேத்தியோ இன்று கிடையாது. ஐந்து வருட்த்திற்கு முன் ’ஓட்ஸ்’-என்றால் எத்தனை பேருக்கு தெரிந்த்து? ஆனால் தினையோ கம்போ பற்றி பேசினால், ”இப்பல்லாம் அது கிடைக்கிறதா என்ன?”- என வியப்புடன் கேட்பார்கள். காரணம் ஓட்ஸ் வேக வேகமாக சந்தைப்படுத்தப்படுவது தான்.
அதிலுள்ள வணிக லாபங்கள் அவசர அவசரமாக அதன் நற்குணங்களை முதன்மைப்படுத்துகின்றன. நம்ம ஊர் கம்பும் தினையும் யதார்த்த சினிமாவின் கவிதை வரியில் மட்டும் ஒட்டிச் சிலாகிப்பதுடன் நின்று போகின்றன. ஆதலால் நாம் தான் இந்த மூலிகைகளை நலம் பயக்கும் சிறு தானியங்களை கூடுதல் அக்கறையுடன் தேடித் தெரிய வேண்டும். தெரிந்து பயன்படுத்த வேண்டும். அது நம்மையும், நம் விவசாயத்தையும் பாதுகாக்கும்!
http://siddhavaithiyan.blogspot.in/

(வள்ளலார் காயகற்பம் ) பத்தியம் ஏதுமில்லை

பலர் எம்மிடம் ஏதாவது காயகற்பங்கள் இருந்தால் கூறுங்கள் என்று கேட்ட வண்ணம் உள்ளார்கள் அவர்களுக்கு இந்த வள்ளலாரின் காய கற்ப சூரணம் அருமையான அற்புதமான கற்பம்.
வள்ளலாரின் காயகற்ப சூரணம்
வெள்ளைக்கரிசாலை – 200கிராம்
தூதுவளை – 50கிராம்
முசுமுசுக்கை – 50கிராம்
சீரகம் – 50கிராம்
காலையில்வெறும்வயிற்றில், ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி சூரணத்தைக் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து, இளஞ்சூட்டில் மெதுவாகசுவைத்து குடிக்கவேண்டும்.
இது ஒரு சர்வரோக நிவாரணியாகும். இது வள்ளலார் அருளியது.
இது கல்லீரல் , மண்ணீரல் , சிறு நீரகம் , இதயம் , வ்யிறு போன்ற ராஜ கருவிகளில் தேங்கியுள்ள விஷங்களை நீக்கி உடலை சுத்தப்படுத்துவதுடன் . உடலிலுள்ள சப்த தாதுக்களையும் வலுப்படுத்தி , இரத்தத்தை மேம்படுத்தி ஆயுளையும் அதிகரிக்கிறது.
வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம்
இது.பத்தியம் எதுவுமில்லை.சர்வரோக நிவாரணியாக
செயல்படுகிறது. காலையில் அருந்துவதற்கு ஏற்ற
மூலிகைபானமாகவும் விளங்குகிறது.
http://www.machamuni.com/

Friday, October 24, 2014

குப்பைமேனி

சருமத்தைக் காக்கும் கற்ப மூலிகை..குப்பைமேனி.. ..
மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.
மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.
குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.
குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.
மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.
Tamil - Kuppaimeni
English - Indian acalypha
Telugu - Kuppi-Chettu
Malayalam - Kuppa-meni
Sanskrit - Arittamajarie
Botanical name - Acalypha indica
இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.
தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்
தேரையர் குணபாடம்
பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.
வயிற்றுப் புழுக்கள் நீங்க
குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
சொறி, சிரங்கு நீங்க
குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.
இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா
அகத்தியர் குணவாகடம்
பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.
குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.
குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.
மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.
குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.
குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.
உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம்.
குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.
இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.
தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும.;
இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும்.எங்கும் காணப்படுகிறது.
இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும்இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .
நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.
வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.
தோல் நோய் நீக்கும் குப்பைமேனி!
மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.
குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.
குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து 48 நாள்கள் தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.
ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிப்பவை. குணமாக்கும் பண்பையுடைய மிளகின் மற்ற குணநலன்களையும் அறிந்துகொள்வோமா......
* ஒரு தேக்கரண்டி மிளகை லேசாக வறுத்து ஒன்றிரண்டாய் தட்டி நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட பசியின்மை தீரும்.
* தலைவலி அதிகமாக இருப்பின் உப்பையும், மிளகையும் நன்கு அரைத்து தலையில் பற்றிட குணமாகும்.
* ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.
* பத்து மிளகினை பொடி செய்து அதனுடன் பாகல் இலைச்சாறும், கரிசலாங்கண்ணி இலைச்சாறும் கலந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.
* சந்தனம், மிளகு, கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு எளிதில் குணமாகும்.
குப்பை மேனி இலையை மைய அரைத்து கடிவாயில் பத்து போட எலிக் கடியின் விஷம் குறையும்
ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.
கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து சிரங்குகள் மீது தடவி வர விரைவில் சிரங்கு அகன்றுவிடும். தேள், பூரான், வண்டுக்கடி வீக்கத்தின் மீது இலையை அரைத்துப் பூசிவர விஷம் முறியும்.
இலையை கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும். வேருடன் குப்பை மேனிச் செடியைப் பிடிங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப் பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயம் செய்து பருகிவர குடலிலுள்ள தீமை தரும் பூச்சிகள் அழியும். குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர சருமம் முன்பு இருந்த இயல்பானதாக இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசி facial செய்தால் முகம் அழகு கொடுக்கும்.
( பின் குறிப்பு: எப்போதும் எந்த மூலிகைகளையும் தகுந்த மருத்துவரை ஆலோசித்து பின் உள்ளுக்கு சாப்பிடுவது நல்லது .இது அணைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும். )
http://greatinformationrepository.blogspot.in/

மெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் பயன்கள்

தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தேஇந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க ¬வத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைததுக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்றுதின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்¬ல நீங்கும்.
* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக்கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம்மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமு¬ற தடுப்புமுறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்குஉண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்தநோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்தஅழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்
.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு வேளையாகசாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டுவர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சிகுணமாகும்.
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
* ஓமத்துடன் சிறிதுசீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
* பெண்களுக்கு ஏற்படும்வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை தேயிலைத்தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்துசாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
என்ன சீரகத்தை பற்றி படிச்சதற்கே மெய் சிலிர்த்து போச்சா, அனுபவிச்சி பாருங்க இன்னும் பயனடைவீங்க
http://greatinformationrepository.blogspot.in/