Wednesday, August 27, 2014

விந்து நட்டம் நூறும் அறுக்கும் வில்வம்" !!!


ஆngகிலப் பெயர்கள் : Bengal quince, golden apple, stone apple
தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் மருத்துவ பண்பை
“பல்லம் பூ பிஞ்சு பழம் இலை யாவும் முறையே
வல்வன் மேகம் மந்தமாம் குன்மம்
சொல்லுகின்ற நோக்கம் அருள்
விந்து நட்டம் நூறும் அறும்
அடுத்தவர்க்கு ஆக்கம் அருள்
வில்பத்திலாம” எனப் பாடியுள்ளார். இங்கு
1.“பல்லம் பூ பிஞ்சு பழம் இலை யாவும்”: இங்கு பல்வம் பூ பிஞசு பழம் என்பன வில்வமரத்தின் பல்வேறு பாகங்களைக் குறிப்பிடுகின்றார் பல்வம் என்பது இளம்தளிரைக் குறிப்பிடுகின்றார்.
2.“வல்வன் மேகம் மந்தமாம் குன்மம்”: இங்கு “மேகம்” என்னும் போது மதுமேகமான நீரழிவு நோயையே கருதுகின்றார். “மந்தமாம் குன்மம்” என்னும் போது வயிறிறில் வலி ,அஐPரணம் அல்லது ஐPரணக் கோளாறுகளைக் குறிக்கும்.
3.“சொல்லுகின்ற நோக்கம் அருள்”: என்ன என்ன வெல்லாம் நீங்கவேண்டும் எனநினைக்கின்றோமோ அதை எல்லாம் நீக்கி அல்லது என்ன என்ன வெல்லாம் வேண்டுமென்று அதை எல்லாம் வழங்கும் வல்லமை வில்வத்துக்குண்டு. எனக்குறிப்பிடுகின்றார்.
4. “விந்து நட்டம் நூறும் அறும்”: விந்துலான இந்திரியத்தில் எற்படக் கூடிய குறைபாடுகள் ஆண்மைக்குறைபாடுகள் உட்பட நூறு வகையுண்டு அவை அனைத்தையும் தீக்கவல்லது வில்வம். எனக்குறிப்பிடுகின்றார்.
5.“அடுத்தவர்க்கு ஆக்கம் அருள் வில்பத்திலாம்”: ஊக்கம் என்பது முயர்ச்சி ஆக்கம் என்பது செய்திறன் உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டமும் செயல்திறனும் அவசியம் இதனை வில்லம் தரும் என்று குறிப்பிடுகின்றார்.
வில்வத்தை நவீன அறிவியல் ஆராய்ந்து அதன் தன்மையை வெளியீடு செய்துள்ளது. வினோதினி, நாராயணண் என்னும் இரு ஆய்வாளர்கள் வில்வத்தை ஆராய்ந்து அது உடலில் உள்ள சக்கரை சத்தையும் கொளுப்புச் சத்தையும் தேவையான அளவுக்கு சீர் செய்து பராமரிக்கும் ஆற்றல் உடையது எனவும் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றும் ஆற்றல் உண்டு என்றும் ஆய்வு செய்து வெளியீடு செய்துள்ளனர். வயிற்றினுள் அமிலத் தன்மையால் குடலில் ஏற்படும்; புண்களை ஆற்றுகின்ற ஆற்றல் வில்பத்தின் தளிர்களுக்கு உள்ளது.
வில்வ தளங்கள் சிவதலங்களில் அதிகளவில் பயன்படுத்துவதுண்டு. சிவன் பஞ்ச பூதங்களில் வாயுவுக்கு அதிபதி அது உஸ்ணத்துக்கு காரணமானது உஸ்னத்தை சீர் செய்து சமநிலையைப்பேன வில்வ தளம் பிரதானமானது. வில்வம் குளிர்மையானது. ஆத்துமா சூடான தன்மையுள்ளது. அதனாலேயே வில்வம் சிவபெருமானுக்கானது சிவாலயங்களிலே தீர்தமாக வில்வஇலை தீர்த்தம் கொடுக்ப்படுகின்றது.
பயன் படுத்தும் முறைகள்:
1. வில்வதளத்தினை நன்றாக சுத்தம் செய்து அதை செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் ஒன்பது இலை வரையில் ஒருமணிநேரம் ஊறவிட்டு காலையில் வெறுவயிற்றில் இலைகளை சப்பி விழுங்கி விட்டு அந்த நீரை அருந்திவர வெப்பத்தினால் விளையும் மேல் செப்பிய நோய்கள் அறும். இரவில் போட்டு காலையிலும் அருந்தலாம்.
2. வில்வதளங்களை நன்றாக மூன்று அல்லது நான்கு முறை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து சூரிய ஒளி நேரடியாகப்படாது இனலில் உலத்தி அரைத்து துணியில் கலித்து வஸ்திர காயமாகக் சூரணமாக்கி வெறு வயிற்றில் திருகடி பிரமாணமாக காலை மாலை பயன் படுத்தலாம்.
3.பூவை இனலில் உலர்த்தி உலர்ந்த பூவை நீர்விட்டுக காய்ச்சி தேனீர்; அருந்துவதை போல்அருந்தலாம்.
4.வில்வம் பழத்தை தேன் விட்டு விளாம் பழத்தைப் போன்று உண்ணமுடியும் இதனால் உடல் குளிர்ச்சியடையும்.

No comments:

Post a Comment