Sunday, December 27, 2015

Kuratttai Relief - lagiyum


Kuratttai Relief - lagiyum:
1. Mul murungai - 2 leaf
2. white pepter - 7
3. garlic - 4 gloves
4. small onion - 2
5. Adi maduram - 1gram
6. Panai Vellam (Palm sugar) as needed

Graind everything and eat for while until it get cured.

Saturday, December 19, 2015

வில்வம்-ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வம் போதும் !

வில்வம்-ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வம் போதும் !
ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வம் போதும்! சிவனாருக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம். வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!
வில்வ வழிபாடும் பயன்களும் :
சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ;பத்துக்குச் சமமாகும். வில்வத்தில் லக்ஷ;மி வசம் செய்கிறாள்.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ;ட, வில்வம். கந்தபல எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது. மண்ணலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவென ஈசனின் இச்சா, கிரியா, ஞான வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் அடைவார்கள்.
வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்.
அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெற்றது.
சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்.
அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்க வில்வத்தை ஏற்றக் கொண்டான். ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்லது.
வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வில்வத்தின் இலை லவகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.
மாதப்பிறப்பு சோமவாரம் அமாவாசை பௌர்ணமி சதுர்த்தி அஷ;டமி நவமி ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
வீடுகளில் வில்வ மரம் :
நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.
ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவரிற்கு ஒருபோதும் நரகமில்லை.
ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமன்.
வில்வம் பழந்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.
வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மே
இதன் பொருள்:
போகமோட்ச உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்.
ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.
மருத்துவக் குணங்கள் :
இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.
வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களிற்கு அருமருந்தாகும்.
கொலஸ்ரோல் வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்புகுணப்படுத்தப்படும்.
வில்வத்தின் இலை லவகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.
மாதப்பிறப்பு சோமவாரம் அமாவாசை பௌர்ணமி சதுர்த்தி அஷ;டமி நவமி ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
விரிவான மருத்துவக் குணங்கள்:
வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது.
கனி தொடர்பான, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள்.
கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும்.
இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.
பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியன ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம்.
இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.
ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.
வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காச்சல் போக்கும்.
தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும்.
வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.
பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.
பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.
பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.
வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.
வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.
வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.
நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.
இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.
வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.
வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.
வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.
வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.
வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.
வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.
வில்வ வேரை 10 – 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்.
இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக.

Sunday, December 6, 2015

உடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள் !!

உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? எடையைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் இதர சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா? முக்கியமாக உங்களால் எடையைக் குறைக்க டயட்டை பின்பற்ற முடியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்காகத் தான்.
உடல் எடையைக் குறைக்க டயட்டை மேற்கொள்ள முடியாவிட்டாலும், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களைக் எடுத்து வந்தால் தான், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை எரிக்க முடியும்.
இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் சில எளிய வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை மட்டும் பின்பற்றி வந்தாலே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதனைப் பின்பற்றும் முன் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அது தான் நடக்கும்.
சீரகம்
சீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் உடல் எடை குறையும்.
எடுக்கும் முறை
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1/2
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
செய்முறை
இரவில் படுக்கும் போது நீரில் சீரகத்தைப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அதில் எலுமிச்சையை பிழிந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் காலையில் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடை குறைந்திருப்பதை நீங்களே காணலாம்.
எலுமிச்சை மற்றும் தேன்
ஒரே மாதத்தில் உடற்பயிற்சி அல்லது டயட் இல்லாமல் எடையைக் குறைக்க வேண்டுமெனில், தேன் மற்றும் எலுமிச்சை உதவும். எலுமிச்சை உடலை சுத்தப்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் எலுமிச்சையில் உள்ள பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும். அத்தகைய எலுமிச்சையுடன் தேனைக் கலக்கும் போது, ஆரோக்கியமாக உடல் எடை குறையும்.
எடுக்கும் முறை
எலுமிச்சை - 1/2
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்
செய்முறை:
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையைப் பிழிந்து, தேன் கலந்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, ஒரு வாரத்தில் எடையில் மாற்றத்தைக் காணலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
உடல் பருமனை நினைத்து கவலைக் கொள்கிறீர்களா? அப்படியெனில் ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு எடையை விரைவில் குறைக்கலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் என்னும் பொருள், நீங்கள் அளவாக உணவை உட்கொள்ளச் செய்யும். மேலும் இதில் உள்ள அசிட்டிக் ஆசிட், கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும்.
எடுக்கும் முறை
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் மாலை மற்றும் இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வர, ஒரு வாரத்தில் கொழுப்புக்கள் கரைந்து தொப்பை சுருங்கி, உடல் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.
சுடுநீர்
சொன்னால் நம்பமாட்டீர்க்ள, தினமும் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு, உடல் எடை சீக்கிரம் குறையும். எனவே உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் சுடுநீரைக் குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 9-10 டம்ளர் சுடுநீரைக் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் சேர்மம், உடலில் சேர்ந்துள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புக்களை கரைத்து, உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதற்கு தினமும் 4-5 பற்களை பச்சையாக உட்கொள்ளலாம் அல்லது பாலுடன் சேர்த்தும் எடுத்து வரலாம்.
எடுக்கும் முறை
பூண்டு - 5 பற்கள்
பால் - 1 கப்
செய்முறை:
பூண்டு பற்களை பாலில் போட்டு, 20 நிமிடம் நன்கு வேக வைத்து, பின் பூண்டை அந்த பாலுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

Monday, November 23, 2015

நல்லதை பகிரந்துக் கொள்வோம்.!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஈரோடு மில்க்கி மிஸ்ட் பன்னீர் கம்பெனியில்
வேலையில் இருக்கும் போது.ஒருமுறை மாடிப்படி ஏறும் போது கால் வழுக்கி விழுந்துவிட்டேன்.
அப்போது தோள் பட்டையின் பின்புறம் 
தசை பிடிப்பு ஏற்பட்டு சில நாட்கள் அவதிப்பட்டு வந்தேன்.
எனக்கு ஆங்கில மாத்திரை மருந்தகள் என்றாலே மிகவும் கவனமுடன் முடியாதபோது மட்டும் எடுத்துக் கொள்வேன்.
ஹோமியோ,சித்தா,ஆயுர்வேதா,அல்லோபதி என கண்டமேனிக்கு வாசிப்பு அனுபவமும் உடையவன்.
எனவே மாறறுமுறை மருதஃதுவம் மூலமே தீர்வுகாண்பேன்.
ப்ரூபன்,டைக்லோபெனக்,பைராக்ஸிகேம்,கெட்டோரோலேக்,மெத்தோகார்பமால்,அசிக்லோபெனக்.,இண்டோமெத்தாசின்,நிமுசூலைட் என பல பெயின் கில்லர்களும்.அதன் செயல்பாடும்,பக்கவிளைவுகளும் நன்குத் தெரியும்.
எனவே அல்லோபதியைத் தவிர்த்து
குணமாக்கிக் கொள்ள விரும்பினேன்.
அச்சமயம் ஜெயமோகன் ப்ளாக்கை தொடர்வாசிப்பு செய்துக் கொண்டிருந்தேன்.
அதில் இதுப்போன்ற வலிகளுக்கு
கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை
"கொட்டம் சுக்காதி தைலம்"
என்று ஒருதைலம் நல்லகுணம் அளிப்பதாகவும்.
அதில் அவர் சுயஅனுபவத்தையும் பதிவிட்டிருந்தார்.
ஒரு நண்பர் மூலம் கோட்டக்கல்லில் இருந்து.,அந்த தைலத்தை வரவழைத்து பயன்படுத்தி குணம் அடைந்தேன்.
தற்போது விவசாயத்தில் ஆள் பற்றாக்குறையால் நானும் இன்னொருவரும் சேர்ந்து 30மூட்டை வரகை தைத்து(80Kg) சுமந்து.,வண்டியில் ஏற்றிவிட்டேன்.
அப்போதுதான் தெரிந்தது மனசுக்கு வயசாகமல் இருபெபதும்,உடலுக்கு வயசானதும்.
என்ன பழயபடி முதுகில் சதைப்பிடிப்பு.
நேற்று திருவண்ணாமலை சென்றிருந்தேன்.அங்குள்ள ஆயுர்வேத பார்மஸியில் "கொட்டம் சுக்காதி தைலம்"வாங்கி வந்தேன்.இரவில் நன்கு தேய்த்து விட்டேன்.
காலையில் இயல்பான செயல் செய்யும் அளவுக்கு வலிபோய் விட்டது. நன்றி ஜெ.மோ.
குறிப்பு.
******
மூட்டு வீக்கம்,தசைபிடிப்பு,நரம்பு வலி,கழுத்துவலி நன்கு வேலை செய்கிறது.
============================================================
நண்பர் திரு.தங்கராஜ் பகிர்ந்தது.கொட்டம் சுக்காதி தைலம் எல்லா ஊர்களிலும் உள்ள ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கிறது.உபயோகித்து பலன் அடையுங்கள்

Saturday, November 21, 2015

திருநீற்று பச்சிலை (திருநீருபத்ரி)

நீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடந்து, விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மூலிகை இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகளவு வளர்கிறது. இந்த இலையை கசக்கி முகர்ந்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும். வாந்திகளுக்கு இது கைகண்ட மருந்து. குறிப்பாக, ரத்தவாந்திக்கு மிகவும் பயன்தரக்கூடியது. இதற்கு, உருத்திரசடை, பச்சை சப்ஜா என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.
பருக்கள் பட்டுப்போகும்
புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இது பயன்படுகிறது. அஜீரணத்தைப் போக்கும் குணமுடையது. படர்தாமரை உள்ளிட்ட சரும நோய்களை குணமாக்கும். இதன் தைலத்தை தனியாகவோ, எண்ணெயில் சேர்த்தோ தலைக்கு வைத்து குளித்தால் பேன், பொடுகு பறந்து போகும்.
பருவ வயதுடையவர்களின் முக்கிய பிரச்னை முகப்பரு. குறிப்பாக இளம் பெண்கள் பருக்களை ஒழிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட அழகுசாதன முகப்பூச்சுகளை வாங்கித் தடவுகிறார்கள். சிலர் பருக்கள் உடனே போக வேண்டுமே என்பதற்காக, அளவுக்கு அதிகமாக முகப்பூச்சுகளை தடவுகிறார்கள். இதனால் பரு இருந்த இடம் சூட்டினால் வெந்து, கருப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது. பணத்தை கொடுத்து, பாதிப்பை ஏன் வாங்க வேண்டும்.
மனிதகுலம் வளமாக வாழத் தேவையான அனைத்தையும் படைத்த இயற்கை, இதற்கொரு தீர்வு வைத்திருக்காதா.. என்ன? அப்படிப்பட்ட தீர்வுதான் திருநீற்றுப் பச்சிலை. வீடுகளில், தொட்டிகளிலோ, புறக்கடையிலோ ஒரே ஒரு செடி இருந்தால் போதும், உங்கள் முகப்பரு பிரச்னை இட்ஸ் கான்... என ஆனந்த கூச்சல் இடுவீர்கள்.
தேவையற்ற நீரை வெளியேற்றும்
இதன் இலையை கசக்கி, சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். சாதாரண பருக்கள் மட்டுமல்ல.. புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும். அதேபோல கண்கட்டி உள்ளிட்ட சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதன் சாறு அருமையான நிவாரணி. இதன் விதைகள் குளிர்பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுகின்றன.
இதன் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
ஆண்டி ஆக்ஸிடெண்ட்
பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.
இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது. இன்னும் பல நோய்களுக்கும் திருநீற்றுப் பச்சிலையில் தீர்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
http://naattumarunthu.blogspot.in/

Wednesday, November 11, 2015

நெருஞ்சி !!!

வரப்பு ஓரத்தில் வளர்ந்து, முதிர்ந்து, தலைசாய்ந்து நிற்கும் நெல் கதிரைப் பார்த்தபடி, வெறுங்கால்களுடன் நடக்கும் வாய்ப்பு, நகர்ப்புறத்துக் குழந்தைகளுக்கு இல்லை. அப்படி வெற்றுக்கால்களில் நடக்கையில், ‘சுருக்’ எனக் குத்தி ரணப்படுத்தும் நெருஞ்சி முள்தான் இந்த வார நாட்டு மருந்துக் கடை நாயகன்.
மூலிகை என்றதும் நம்மில் பலர், மூன்று கடல், மூன்று மலை தாண்டிப் போனால், அங்கு உள்ள ஜடாமுடிச் சித்தர் காட்டும் ஏதோ ஒரு செடி எனக் கற்பனை செய்கிறோம். உண்மையில் வரப்பு ஓரங்களிலும், வேலி ஓரப் புதர்களிலும் மிகச் சாதாரணமாய்த் தென்படும் நோய் தீர்க்கும் மூலிகைகளுள் ஒன்று நெருஞ்சி.
‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்’ எனப் பெண்ணின் பாத மென்மைக்கு அலாதியாய் ஓர் உவமையைச் சொன்ன வள்ளுவன் காலம் தொட்டு நம் தமிழர் வாழ்வில் இடம் பெற்ற மருத்துவ மூலிகை நெருஞ்சி. “மேகவெட்டை, நீர்ச்சுருக்கு வீறுதிரி தோடப்புண், வேகாசுரம் தாகம் வெப்பம் விட்டொழியும்” என அகத்தியர் குணவாகடத்தில் அடுக்கடுக்காய் பல நோய்களை அகற்றும் என அறுதியிட்டுச் சொன்ன நெருஞ்சி கோடை காலத்து ஸ்பெஷலிஸ்ட்.
சாதாரணமாய்க் கோடையில் வரும் நீர்ச்சுருக்குக்கு, நெருஞ்சி முள்ளை ஒன்றிரண்டாய் இடித்து, தேநீர் வைப்பது போல் கஷாயமிட்டு, காலை மாலை என ஐந்து நாட்கள் குடித்துவந்தால் நீர்ச்சுருக்கு குணமாகும். சிறுநீர்ப் பாதைத் தொற்று என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் அவஸ்தை தரும் பிரச்னை.
ஆன்டிபயாடிக் சிகிச்சை எடுத்தால், இரண்டு வாரங்கள் அமைதியாய் இருக்கும் இந்தக் கிருமிகள், மீண்டும் அவதாரம் எடுத்து ஆட்டிப்படைக்கும். சில நேரத்தில் பிறப்புறுப்பில் வரும் அரிப்பு பாக்டீரியாவாலா, பூஞ்சையாலா எனக் குழப்பத்தில் இருக்கும் நோயாளிகளும் உண்டு. அவர்களுக்கு எல்லாம் நெருஞ்சி மூலிகை ஒரு வரப்பிரசாதம்.
நெருஞ்சியுடன் கொத்துமல்லி விதை (தனியா) சம அளவு சேர்த்து, ஒன்றிரண்டாக உடைத்துக் கஷாயமிட்டு, தினம் இரு வேளை 60 மி.லி தந்தால் ஆண்களுக்கு வரும் புராஸ்டேட் கோள வீக்கத்துக்கும் அதனைத் தொடரும் கிருமித்தொற்றுக்கும் பயனளிக்கும்.
மேகச்சூட்டினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு, நெருஞ்சி முள் மற்றும் அதன் வேரைப் பச்சரிசியுடன் சேர்த்து, வேகவைத்து வடித்து, கஞ்சியாகக் கொடுக்கலாம். வெள்ளைப்படுதலுடன், சூதகபாதையில் (Salphynx) ஏற்படும் அழற்சிக்கும், நெருஞ்சி கசாயம் பயனளிக்கும்.
சிறுநீரகக் கற்களுக்கு நெருஞ்சி முள் மிகச் சிறந்த மருந்து. நெருஞ்சி, நீர்முள்ளிச் செடி, மாவிலங்கப்பட்டை, சிறுகண்பீளைச் செடி இந்த நான்கையும் சமபங்கு எடுத்து 400 மி.லி நீர் ஊற்றி, 60 மி.லியாகக் குறுக்கிக் காய்ச்சி வடித்து, காலை மாலை என இருவேளை 45 நாட்கள் கொடுத்துவந்தால், 5-10 மி.மீ உள்ள கற்கள் உடைந்து நீங்கும்.
நீண்ட நேர பேருந்துப் பயணத்துக்குப் பிறகு ஏற்படும் கால் வீக்கம் சிலருக்கு வாடிக்கையாக வரும் தொல்லை. இந்த வீக்கத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பின் தொடக்க நிலைகூடக் காரணமாக இருக்கலாம். அந்த சமயத்தில், பிற மருந்துகளுடன், நெருஞ்சி உதவிடும். சிறுநீரைப் பெருக்கி, வீக்கத்தைப் போக்கிடும் மருத்துவ குணமும் நெருஞ்சிக்கு உண்டு.
நவீன வேளாண்மையில், ரசாயன களைக் கொல்லிகளால் விரட்டி, வதைத்து எறியப்படும் ஏராளமான மூலிகையில் நெருஞ்சி மிக முக்கியமானது. அதுவும் மானாவாரி, தேரி நிலமான தூத்துக்குடி மாவட்டத்து நெருஞ்சிமருத்துவச் சத்துக்களைக் கூடுதலாய்க் கொண்டது என்பது, தென் தமிழகத்து மக்களுக்கு இனிக்கும் செய்தி.
-
வம்ச விருத்திக்கு நெருஞ்சி!
ஸ்டாஃபிலோகாக்கஸ் ஏரெஸ் (Staphylococcus aureus) பாசிலஸ் சப்டீலிஸ் (Bacillus subtilis), இ-கோலி (E coli), டிப்தீரியா என அத்தனை வகை பாக்டீரியாவையும் கேன்டிடா அல்பிகன்ஸ் (Candida albicans) எனும் பூஞ்சையையும் தனி ஆளாய் நின்று எதிர்க்கும் ஆற்றல் நெருஞ்சிக்கு உண்டு என சமீபத்திய ஆய்வுகள் சான்று அளித்துள்ளன.
நெருஞ்சியின் மிக முக்கியப் பயன், ஆண், பெண் இருபாலருக்கும், ஹார்மோன்கள் குறைவால் ஏற்படும் குழந்தைப்பேறின்மையைச் சரிசெய்வது. டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனை நெருஞ்சி உயர்த்தும் என்பதும், ஆண் விதைப்பையில் உள்ள விந்துவின் தாய் செல்களான செர்டோலி செல்களை ஊக்குவித்து, விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதையும் நவீன அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கு.சிவராமன்
சித்த மருத்துவர்

Monday, November 2, 2015

நாட்டு மருந்துக் கடை!!!

திப்பிலி! திரிகடுகு எனும் மூலிகை மும்மூர்த்திகளில் மூன்றாமவர். சுக்கையும் மிளகையும் அறிந்த அளவுக்கு, இந்தத் தலைமுறை திப்பிலியை அறிந்திருக்கவில்லை. மிளகைப் போன்றே மிக முக்கிய மருத்துவக் குணம் உடையது இது. “கட்டி எதிர்நின்ற கடும் நோயெல்லாம் பணியும்” என தேரன் சித்தர் சிலாகித்துப் பாடிய இந்த திப்பிலி, சாதாரண சளி, இருமல் முதல் இளைப்புநோய் வரை குணப்படுத்தும். இளைப்புநோய் என்பது குழந்தைகளை எடை குன்றச்செய்து, காயச்சலும் சளியுமாய் இருக்கச்செய்யும் இளங்காசம் எனும் பிரைமரி காம்ப்ளக்ஸ் தான்.
‘‘மாமனுக்கு மாமனென மற்றவனுக்கு மற்றவனாக காமனெனுந் திப்பிலிக்குக் கை” என தேரன்சித்தன் பாடியதை விரித்தால், விளங்கும் விஷயம் அலாதி. பாரதத்தில் சகுனி மாமனால் வந்த பிரச்னையை, கிருஷ்ண மாமான் தீர்த்துவைத்ததுபோல், ஆஸ்துமா நோய் மாமன் போல் மரபாய் வந்திருந்தாலும், மற்றவனாய் சொல்லப்பட்ட கோழையை விரட்டி, ஆஸ்துமாவை விரட்டும் என்பதுதான் அப்பாடலின் பொருள். திப்பிலிக்கு சித்த மருத்துவத்தில் காமன் என்று இன்னொரு பெயர் உண்டு. பித்தம் தாழ்ந்து இருக்கும் ஆஸ்துமாவில், பித்தத்தை உயர்த்திச் சீராக்கும் தன்மையும் இருக்கிறது என்பதுதான் பொருள். கூடவே திப்பிலி பித்தத்தினை உயர்த்தி, விந்தணுக்களையும் உயர்த்தும் தன்மை கொண்டது.
ஆஸ்துமா நீக்கும் திப்பிலி
ஆஸ்துமாவைக் கட்டுக்குள்வைக்க இன்று நவீன மருத்துவம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் சில மாதங்கள் இரவில் மட்டும் ஆன்டி லியூகோட்ரைன்ஸ் (Anti Leucotrines) கொடுப்பது வழக்கம். இந்த மருந்து செய்வதைத் திப்பிலியும் செய்யும். ஆஸ்துமாவுக்கு மூச்சுஇறுக்கத்தை (Tightness of chest) குறைக்க வேண்டும். மூச்சுக் குழலை விரிவடையச் (Broncho dilation) செய்ய வேண்டும். வெளியே வர மறுக்கும் வெந்த சவ்வரிசி போன்ற சளியை, மூச்சுக்குழல் நுரையீரல் பாதையில் இருந்து பிரித்தெடுத்து வெளியேற்ற (Mucolytic) வேண்டும். இத்தனையையும் திப்பிலி செய்யும். காற்று மாசுக்களால் ஹிஸ்டமினும், லியூகோட்ரைனும் தூண்டப்பட்டு, மூச்சுக்குழலை இறுகவைப்பதைத் திப்பிலி தடுப்பதுடன், திடீர் கோழைப்பெருக்கம் நடப்பதையும் நிறுத்தும் என்பதைப் பல சர்வதேச மருத்துவ ஆய்வேடுகள் உறுதிபடுத்தியுள்ளன.
சித்த மருத்துவ மருந்தான திப்பிலி ரசாயனம், ஆஸ்துமா நோய்க்கென கொடுக்கப்படும் மிகச் சிறந்த தடுப்பு மருந்து. திப்பிலையைப் பிரதானமாகவும், இன்னும் பல சளி நீக்கும் உலர் மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த மருந்து, சித்த மருந்துகளில் ஆஸ்துமாவுக்கான மருந்துப் பட்டியலில் தலையானது.
பல நோய் போக்கும் திப்பிலிமிளகைவிட அதிகக் காரமும் வெப்பத்தன்மையும்கொண்ட இந்தத் திப்பிலியை கைப்பக்குவ மருந்தாக வீட்டில் பல வகையில் பயன்படுத்த இயலும். இளவறுப்பாய் வறுத்துப் பொடித்த திப்பிலிப் பொடியை, 3 சிட்டிகை அளவு எடுத்துக்கொண்டு, வெற்றிலைச்சாறும் தேனும் சேர்த்துக்கொடுக்க, நுரையீரலிலிலிருந்து வெளியேற மறுக்கும் கோழையை வெளியேற்றி இருமலைப் போக்கும்.
கபம் நெஞ்சில் கட்டிக்கொண்ட, மலச்சிக்கலும் உள்ள குழந்தைகள் அல்லது முதியோருக்கு, மலத்தை இளக்கி வெளியேற்றி கபத்தைக் குறைப்பதுதான் ஆஸ்துமா நோய்கான தீர்வைத்தரும். இதற்கு, திப்பிலி பொடியையும், கடுக்காய் பொடியையும் சம அளவு எடுத்து, தேன் சேர்த்து உருட்டி இரவில் கொடுக்கலாம்.
உடலெங்கும் பரவி, போக மறுக்கும் சாதாரணப் பூஞ்சையை நிரந்தரமாகப் போக்க, மேலுக்கு சீமையகத்திச் சாறு போடுவது, நலுங்கு மாவு போட்டுக் குளிப்பதைத் தாண்டி, தினம் ஒரு வேளை திப்பிலி பொடியை 2 சிட்டிகை அளவு சாப்பிடுவது நல்லது என்கிறது சித்த மருத்துவம்.
திப்பிலி செடியின் வேரும்கூட பெரும் மருத்துவப் பயன்கொண்டது. இதற்குத் திப்பிலி மூலம் என்று பெயர். திப்பிலி போலவே சளி நீக்கும் குணம் கொண்ட இந்த மூலிகை வேரை, பாலில் விட்டு அரைத்து, காய்ச்சிய் பாலில் கலந்துகொடுக்க இடுப்பு, முதுகுப் பகுதியில் வரும் வலிகளான ஸ்பான்டிலோசிஸ், லும்பாகோ (Spondylosis, lumbago) போன்றவை குணமாகும்.
பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கும் வெள்ளைப்படுதலும் இருந்தால், திப்பிலி 30 கிராம், தேற்றான் கொட்டை 30 கிராம் அரைத்துப் பொடித்து, காலை வேளையில் மூன்று சிட்டிகை சாப்பிட்டுவர நீங்கும் என்கிறது, சித்த மருத்துவ குணபாட நூல்.
நாட்டுமருந்துக் கடையில் அரிசித்திப்பிலி, யானைத்திப்பிலி என இரண்டு வகை கிடைக்கும். அரிசித்திப்பிலி, எனும் சன்னமாக சிறிதாக இருக்கும் திப்பிலிதான் மருத்துவத்துக்கு மிகவும் சிறப்பானது. உதிராது, உலர்ந்து முழுமையாய் இருக்கும் இதனை வாங்கி, இளவறுப்பாக வறுத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது, இது விளையும் சீசனில் வாங்கிப் பத்திரப்படுத்தி ஃப்ரெஷாகப் பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.
திப்பிலி ரசாயனம் எப்படி செய்வது?
திப்பிலி 100 கிராம், மிளகு, சுக்கு ஏலம், சீரகம், திப்பிலி வேர், வாய்விடங்கம், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒவ்வொன்றும் 25 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் இள வறுப்பாய் வறுத்து, நன்கு மையாகப் பொடித்துகொள்ள வேண்டும். பனை வெல்லத்தைப் பாகு காய்ச்சி, அந்தப் பாகின் மேல் சொன்ன பொடியை அளவாகப் போட்டு, லேகியமாய் வேகவைத்து, ஆறிய பின்னர், சிறிது தேன் சேர்த்துவைத்துக்கொள்ள வேண்டும். சளி, இருமல், கோழை ஆஸ்துமா உள்ள வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய கைமருந்து இது. இந்த லேகியத்தைச் சிறு சுண்டைக்காய் அளவு குழந்தைகள் முதல் பெரியவர் வரை மாலைப்பொழுதில் சாப்பிட, இரைப்பு நோய் எனும் ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்க முடியும். ஆஸ்துமா இழுப்புக்குப் பக்கவாத்தியம் செய்யும், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் ஆகியவற்றையும் இந்த மருந்து போக்கும் என்பது கூடுதல் செய்தி.
நன்றி-டாக்டர்விகடன்
-Powenraj @ http://www.eegarai.net/t118750-topic