Saturday, March 28, 2015

மஞ்சள் காமாலை குணமாக:!!!

தேவையான பொருள்கள்:
கீழாநெல்லி
தும்பை இலை
கரிசலாங்கண்ணி
செய்முறை:
மஞ்சள் காமாலையை குணப்படுத்த வேண்டுமெனில் கீழாநெல்லி கீரையை தவிர வேறு மருந்து கிடையாது.
கீழாநெல்லிகாய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்கு பயன்படுத்தப்படுகிறது.
கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை என பத்து நாட்கள் உண்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
இதனை பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது.
காரம், புளியைத் தவிர்த்து பாதி உப்பு சேர்த்து பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பூரண குணமாகும்.
”வருமுன் காப்பாதே சிறந்தது” என்ற பழமொழியை உணர்ந்து இத்தகைய நன்மைகள் நிறைந்த கீழாநெல்லியை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம்; நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோம்.
http://www.grannytherapy.com

Tuesday, March 17, 2015

கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்
1) நெல்லிப்பொடி
2) வெண்மிளகு
3) கடுக்காய்ப்பொடி
4) கஸ்தூரிமஞ்சள்
5) வேப்பன்வித்து
இதை வாரமிரு முறை பாலில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வைத்து அரைமணி நேரம் கழித்து இளம் சூடான வெந்நீரில் குளித்து வர தலையில் உள்ள சூடெல்லாம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.
பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வலிமை பெறும். கண்பார்வைக் குறைபாடுகள் , அது கிட்டப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி , தூரப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி சில மாதங்களில் நீங்கும்.இது கண் பார்வைக் குறைபாட்டால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமான மருந்து.
http://padithavaikal.blogspot.in/

Thursday, March 12, 2015

கறிவேப்பிலையில் குவிந்து கிடக்கும் மருத்துவம் !!!

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அறிந்தவர்கள் அதை தூக்கி எறிவதில்லை. பெரும்பாலானோர் கறிவேப்பிலையை மணத்துக்காகப் பயன்படுத்திவிட்டு உணவிலிருந்து அதை தூக்கி எறிகின்றனர். சுவைத்தும், சமைத்தும் சாப்பிட வேண்டிய ஓர் அருமருந்து
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையை அரைத்து, சாறெடுத்து, கடலை மாவில் கரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை எட்டிப் பார்க்காது. கூந்தல் செழித்து வளரும்.
அதே போல 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வைத்து, கைப்பிடி கறிவேப்பிலை போட்டு மூடி வைக்கவும். ஆறியதும் அந்தத் தண்ணீரைக் குடித்தால் உடலிலுள்ள நச்சு நீர் வெளியேறி விடும். ஊளைச்சதை குறைந்து உடல் அமைப்பு மாறும்.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கும் தலைக்கு தேய்க்கும் எண்ணையாகவும் பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து தூளாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.
அதிக மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போது பார்த்தாலும் குழப்பமாகவே இருப்பார்கள். எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு அருமருந்தாக கறிவேப்பிலை திகழ்கிறது.கறிவேப்பிலையை நன்கு நீரில் கழுவி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சோற்ரோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும்
கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும் தன்மை நாவிற்கு கிடைக்கும்.
கறிவேப்பிலை குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீங்கும். இக்கறிவேப்பிலையால் பித்த மிகுதியால் வந்த பைத்திய நோய்களும் விலகுவதாகச் ‘சித்தர் வாசுட நூலில்’ உள்ளன.
இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை தூளாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலச்சிக்கல், மலக்கட்டு, கிரகனி, கழிச்சல்நோய், பிரமேகட்டு நோய்கள் குணமாகும்கறிவேப்பிலை குடலுக்கு பலத்தைக் கொடுக்கும். தன்மை கொண்டது இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இந்த மூன்றும் ஜீரண உறுப்புக்களின் தோழன் என்று கூறுவார்கள்
கறிவேப்பிலை ரத்தத்தி இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் அறிவைப் பெருக்கவும் உதவுகின்றது கறிவேப்பிலையை பச்சையாகச் சப்பிச் சாப்பிட்டால் சளி குறையும் குரல் இனிமையாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப்பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத்துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது. இவ்வாறு கறிவேப்பிலையின்மருத்துவ தன்மை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.
- ந. நிருபா
http://mix.looktamil.com/


Friday, February 27, 2015

பிரண்டை !!!

மருத்துவக் குணங்கள்:
பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும். காரத்தன்மையும், எரிப்புக் குணமும் கொண்டது.
-------------------------------------------------------------------------------------
இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.
-----------------------------------------------------------------------------------------
பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.
குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.
------------------------------------------------------------------------------------------
வாய்ப்புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.
-------------------------------------------------------------------------------------------
தீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 – 96 நாள் இரு வேளை சாப்பிட குணமாகும். நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வேளை கொடுக்க குணமாகும்.
----------------------------------------------------------------------------
300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.
-------------------------------------------------------------------------------------
பிரண்டை உப்பை 2 – 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.
இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.
---------------------------------------------------------------------------------------
மூன்று வேளை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.
பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.
-------------------------------------------------------------------------------------------
பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.
----------------------------------------------------------------------------------------
நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.
------------------------------------------------------------------------------------------
பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேளையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.
---------------------------------------------------------------------------------
பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.
---------------------------------------------------------------------------------
பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.
------------------------------------------------------------------------------------
முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.
பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.
-------------------------------------------------------------------------------------
பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.
---------------------------------------------------------------------------------------
மருத்துவ மூலிகை
இலைகளும்,இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு
முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா,
ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட
உதவுகிறது.
மெலிந்த உடல் குண்டாக
ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள்
பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு
வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
வயிற்றுப் பொருமலால்அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும்.மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
பிரண்டை துவையல்
எலும்புசந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால்
தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால்
அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி
பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச்
செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.
இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன்
சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப்
பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி,
கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------
மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத்துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
மூலநோயால்அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.
ரத்த ஓட்டம் சீராகும்
உடலில்கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில்
கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால்
இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய
வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது
.http://atozthagavalkalangiyam.blogspot.in/


Thursday, December 18, 2014

ராம நாமத்தின் இரகசியம் !!!


ராம நாமத்தின் இரகசியம்தாரக மந்திரம் என்றால் கடக்க உதவும் மந்திரம் என்று பொருள். இந்தக் கலியுகத்தில் தவம் செய்வது அவ்வளவு எளிதல்ல. பக்தியில் மனதை செலுத்துவதும் மிகக் கடினமானதாகும். நாம ஜெபமுமே இறை நிலையை அடைய சிறந்த உபாயமாகச் சொல்லப்படுகிறது. மனதை அடக்கி, புலன்களை வசப்படுத்தி தவம் செய்பவர்கள் இருந்தாலும், எல்லோருக்கும் அது சாத்தியமாவதில்லை. அது போலவே பக்தி என்கிற சாதனையிலும் அதே நிலைதான். இதை உத்தேசித்தே நாம ஜெபங்கள், மந்திர ஜெபங்கள் சித்தர்களாலும், ரிஷிகளாலும் முன்னரே தரப்பட்டுள்ளன. எனவே இந்தக் கலியுகத்தில் மாயை எனும் கடலைக் கடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் குரு மூலமாக மந்திர உபதேசம் பெற்று ஜெபித்து வர மேன்மை உண்டாகும். இதில் ராம நாமம் மிகவும் உன்னதமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஔவை சொல்கிறார்
பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தியாம்.
இதில் பேசா எழுத்து ம. இது மெய். பேசும் எழுத்து ரா. இது உயிர். அதாவது ஒலியுடன் ஒளி கூடி வரும் ராம மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் அதுவே ஆச்சாரியனாக இருந்து உண்மை நிலையை, இரகசியங்களை விளக்கிக் காட்டும் என்கிறார்.சித்தர் சிவவாக்கியர் ராமநாமத்தின் சிறப்பை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.
ரா என்றால் சூரியன், ம என்றால் சந்திரன். சூரியன் ஆன்மக்காரகன். சந்திரன் மனோகாரகன். அதாவது சூரியன் பரமாத்மா. சந்திரன் ஜீவாத்மா. அதாவது பரமாத்மாவோடு ஜீவாத்மாவை இணைக்க உதவும் மந்திரமே ராம நாமம் ஆகும். இதில் வாசிக் கலையின் பங்கும் மறைந்துள்ளது. அதாவது சூரியகலையின் எழுத்தாகிய ரா, சந்திர கலையின் எழுத்தாகிய மா இரண்டையும் சேர்த்து உச்சரித்து வரவர சுழுமுனை திறக்கும். யோசித்துப் பாருங்கள் நான் சொல்வதில் உள்ள நுட்பம் புரியும்.
அத்யோ ‘ரா’ தத்பதார்த்தஸ்யாத்
‘ம’ கார த்வம்பதார்த்தவாந், தயோ
ஸம்யோஜந மஸித்யர்த்தே தத்த்வலிதோ விதுஹூ.
- ராமரஹஸ்யோபநிஷத்.
அதாவது ரா என்றால் தத், பரப்பிரம்மம். மா என்றால் த்வம், ஜீவாத்மா. அதாவது நிராகார(ரூபமில்லாத) பரப்பிரம்மமே ஒவ்வொரு ஜீவஜந்துக்களின் உள்ளும் ஆத்மா என்ற பெரில் விளங்குகிறது. ப்ரம்மம், ஆத்மா என்ற பேதமேயொழிய இரண்டும் ஒன்றே. அதாவது தூல சரீரம் கண்களால் காணப்படுவது. அதற்குள் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்று நான்குமாகி தொழிற்படும் சரீரங்கள் சூக்கும, காரண சரீரங்கள். இந்த சரீரங்களின் இன்ப, துனபத்திற்கு காரணமாக இருப்பது சஞ்சித கர்மமே. எனவே இந்த மூன்று சரீரங்களின் உணர்வும் அற்றுப் போனால் மட்டுமே பரமாத்மாவை அடைய முடியும். இந்த மூன்று தேகங்களுக்கும் சாட்சியாக இருக்கும் ஆன்மாவே ராம என்று சொல்லப்படுகிறது. இதை மனதில் நினைத்துக் கொண்டோ, வாக்கினால் சொல்லிக் கொண்டோ இருப்பதினால் உண்மை நிலையை அடைய முடியாது. அதற்கு சில விதி முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அவை காலப் போக்கில் குறிப்பிட்ட இனத்தவர்களால் மறைக்கப்பட்டு விட்டன. இப்போது அந்த வாசல் உங்களுக்குத் திறக்கப்படுகிறது. தேவை உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு தனிமையான இருட்டறையில் நெய்விளக்கேற்றி, பலகையிட்டு, அதன் மேல் விரிப்பு விரித்து வடக்கு நோக்கி சித்தாசனத்தில் சின்முத்திரை பிடித்து அமர்ந்து கொண்டு, கண்களை மூடி, மூக்கு நுனியில் மனதை நிறுத்தி, மூச்சை உள் இழுக்கும் போது ரா என்ற மந்திரத்தை மனதினால் நினைத்து மூச்சுடன் உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளிவிடும் போது மா என்ற மந்திரத்தை மனதில் நினைத்து வெளியே விடவேண்டும். ஒரு தடவை மூச்சுவிடும் போதும் ஒரு ரா, ஒரு மா என்று விடவேண்டும். இவ்வாறு மூச்சுடன் சேர்த்து ஜெபம் செய்து வரவர பலனை உணரலாம். இது ரஹஸ்யமான உபதேசம் என்று வெளியில் சொல்லாமல் மறைப்பார்கள். இன்று இறையருளாலும், சித்தர் சிவவாக்கியரின் அருளாலும் என்மூலம் திறக்கப்பட்டது. குரு முகமாக மந்திர தீட்சை பெறுவது சாலச் சிறந்தது. இயலாதவர்கள் தட்சிணா மூர்த்தியையோ, திருச்செந்தூர் முருகனையோ குருவாக எண்ணி சாதனையைத் தொடங்கலாம். திருச்செந்தூர் சென்று குளித்து விட்டு வினாயகரை வணங்கி, முருகனை வணங்கி, குருவாகத் திகழும்படி வேண்டிக் கொண்டு, பிரகாரம் சுற்றி வரும் போது, முருகனுக்கு எதிரில் சுவற்றில் காணப்படும் துவாரத்தில் காதை வைக்கும் போது ஓம், ஓம் என்ற ஓசை கேட்கும். இதுவே முருகன் அருளும் மந்திர தீட்சையாகும்
(தகவல் பகிர்வர் https://www.facebook.com/ram5665
மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்)

புற்று நோயை போக்கும் மந்திரம் !!!

புற்று நோயை போக்கும் மந்திரம்காஞ்சி மஹா பெரியவா இந்த மந்திரத்தை அருளியுள்ளார்.கீழ் குறிப்பிட்டுள்ள இந்த மந்திரத்தை 45 நாட்களுக்கு 108 முறை பாராயணம் செய்வதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்திருப்பதாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்கள் கூறியுள்ளார்.
"அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ"
நம்பிக்கையுடன் முயற்ச்சித்துதான் பாருங்களேன்…

காயகற்பம் சில தகவல்கள்!!!

நரை ,திரை , பிணி,மூப்பு,மரணம் இவற்றிலிருந்து உடம்பை காத்துகொள்வதே காயகற்பம் என்பதாகும். கொங்கணர்,போகர்,திருமூலர் என பல சித்தர்களின் நூல்களில் கற்பங்களின் செய்திகள் காணக்கிடக்கின்றன. கற்பங்களை பொது கற்பம்,சிறப்பு கற்பம் என இருவகைகளாக பிரிக்கலாம். பொதுவான நோயற்ற நிலையில் உண்ணுகிற கற்ப முறை பொது கற்பம் என்றும். மற்றொன்று ஒரு குறிப்பிட்ட நோயை நீக்கி உடலை காயகற்பமாக்கும் முறையாகும்.
பொதுவாக மிளகு,சிந்தில்,வேம்பு, நெல்லி, கடுக்காய், குமரி, வில்வம்,கரிசாலை, தூதுவளை இவைகள் மூலிகைக் கற்பங்களில் அடங்கும். அண்டம் என்னும் முட்டை ஓடு கற்பம்,உப்புக் கட்டு , வங்கச்சுண்ணம் போன்றவை தாது மற்றும் ஜீவ கற்பங்களாகும். கற்ப மூலிகைகள் அறுபதும், தாது கற்பங்கள் அறுபதும், உலோகங்களான தங்கம், பாதரசம் சேர்த்து 122 காயகற்பங்கள் உள்ளன.
காயத்தைக் கற்பமாக்குவதன் மூலம் , வாத சித்தி என்னும் ரச வாதத்தையும், வாத சித்தியால் , யோக சித்தி என்னும் இறை நிலையை அடைதலையும் சமாதி என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உடலை பாதுகாக்காமல் அழியவிட்டால், உடம்பில் உள்ள உயிரும் அழியும்,அவ்வாறு உடலும் உயிரும் அழிய நேரிட்டால் இறைநிலையை அடைய முடியாது. எனவே, காயகற்ப முறைகள் மூலமாக உடலின் நரை,திரை,பிணி,மூப்பு போன்றவற்றை நீக்கி இறப்பைத் தடுத்திடலாம் என்பது சித்தர்கள் வாக்கு.இறைநிலையை அடை உடலை பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த திருமூலரின் பாடலின் மூலம் அறியலாம்.
உடம்பால் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
மூலிகை கற்பங்களை நாற்பது நாள்கள் சாப்பிட வேண்டும் அவ்வாறு சாப்பிடும்போது மலச்சிக்கல், தொண்டையில் வழவழப்பு இவற்றை நீக்குவதற்கு ஒரு சில கற்ப மூலிகைகளை சாப்பிட்ட பிறகு முறையான கற்பத்தை சாப்பிட வேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் முறையாகும்.அத்தகைய கற்ப மருந்துகளை சாப்பிடும்போது புளி ,உப்பு,எள்,நெய் ,மாமிசம்,மோர்,கடுக,பூண்டு,உடலுறவு,பகல் தூக்கம் இவற்றை நீக்கி பிராணாயாமம்,தியானம் செய்து வரவேண்டும். கற்ப மருந்துகளை சாப்பிடும்போது பசுவின் பாலும் நெய்யும் சேர்த்து ஒரு பொழுது மட்டுமே உணவு சாப்பிடவேண்டு. இரவில் சிறிது பசும்பாலை மட்டுமே உணவாக கொள்ளவேண்டும். பச்சைப்பயிறு,தேன்,பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
கடுக்காய் கற்பம் !!
கடுக்காய் என்ற மூலிகை கற்பத்தை பயன்படுத்தும் முறையை போகர் தன் போகர் 7000 த்தில் இவ்வாறு கூறுகிறார்.
சித்தரை , வைகாசி , மாதங்களில் சுக்கு நீரோடும்.
ஆனி,ஆடி,ஆவணி மாதங்களில் வெல்லம் கலந்தும்.
புரட்டாசி மாதத்தில் தேன் கலந்தும்.
ஐப்பசி, கார்த்திகை,மாதங்களில் குமரிச்சாறு (கற்றாழைச்சாறு) கலந்தும்.
மார்கழி , தை ,மாசி மாதங்களில் கற்கண்டு சேர்த்தும்.
பங்குணி மாதத்தில் நெய் சேர்த்தும் சாப்பிட வேண்டுமாம். இவ்வாறு சாப்பிட வாதம்,பித்தம்,கபம் மூன்றும் நீங்கி உடல் வணப்பு உண்டாகும்.
மிளகு கற்பம்!!!
பொதுவான கற்ப விதிகளுடன் ,முதல் நாள் ஐந்து மிளகு சாப்பிடத் தொடங்கி, ஒவ்வொரு நாளும் ஐந்து மிளகு கூட்டிக் அமுரியில் கலந்து 100 மிளகு ஆகும் வரை கலையில் சாப்பிட வேண்டும். பிறகு ஒவ்வொரு நாளும் 5 மிளகு குறைத்து 20 நாட்களுக்கு காலையில் சாப்பிட வேண்டும். அத்துடன் மாலையில் அருகம்வேர் 35 கிராம்,25 மிளகை சேர்த்து இடித்து தண்ணீரில் கரைத்து சிறிது வெண்ணை சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
அமுரி என்பது சிறுநீர்,பனிநீர், இளநீர், பழைய சோற்றின் நீர், எலுமிச்சம் பழச்சாறு என்று பலவகையாகச் சொல்லப்பட்டாலும், பொதுவாக மெத்தன் வாழை மரத்தில் துருசுச் சுண்ணம் என்ற மருந்தை வைக்க அதனால் அடித்தண்டில் வடியும் நீர்தான் அமுரி என்ப்படுகிறது. இருந்தாலும், எலுமிச்சம் பழச்சாறு, பழைய சோற்றின் நீரும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
சிவகரந்தைக் கற்பம் !!!
சிவகரந்தைச் செடியை வேருடன் எடுத்து நிழலில் உலர்த்தி தூளாக்கி பால், நெய், தேன் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து தினமும் சிறிது அளவு சாப்பிட்டு வந்தால் முதல் மாதம் உடல் நாற்றம் நீங்கும் என்றும், இரண்டாம் மாதம் வாத நோய்கள் நீங்கும் என்றும், மூன்றாம் மாதம்,பித்த நோய்கள் நீங்கும் என்றும்,நான்காம் மாதம் தோல் நோய்கள் நீங்கும் என்றும் , ஐந்தாம் மாதம் பசி கூடும் என்றும்,ஆறாம் மாதம் அறிவும் தெளிவும் உண்டாகும் என்றும்,ஏழாம் மாதம் உடல் வனப்பு உண்டாகும் என்றும்,எட்டாம் மாதம் உடல் தோல் உரியும் என்றும், ஒன்பதாம் மாதம் நரை,திரை,பிணி நீங்கும் என்றும் யோகம் சித்தியாகும் என்றும் ‘சித்தர் காயகற்பம் விளக்குகிறது’ என்று ‘சித்த ரகசியம் என்ற நூலில் படித்தது’.
விஷ்ணு கரந்தை கற்பம் !!!
விஷ்ணு கிரந்தி அல்லது விஷ்ணு கரந்தை செடியை அரைத்து, பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் நாற்பது நாட்களில் உடல்சூடு நீங்கி,கண் பிரகாசமாகி, சுவாசம் கட்டுப்படும். அதன்பிறகு, நாற்பது நாள்கள் தேன் கலந்து சாப்பிட யோகம் சித்தியாகும்.
http://www.tamilkadal.com/