Thursday, December 11, 2014

இயற்கை வைத்தியம் !!!!!

நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும். பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகு பதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகிய பதம் வந்தவுடன் இறக்க வேண்டும். ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.
இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்கு பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும். பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாட்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும். காய கல்பமாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.
நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாக்காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாக தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்த வேண்டும்.நீர் சுண்டி சருகு போல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்து விட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க வேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.
நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.
(தினகரன் )


Saturday, December 6, 2014

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!



நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!
ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம்.....!
பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!
* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....
படித்துவிட்டு அதிகம் பகிருங்கள்...!
என்றும் உங்களுடன் ,

தடைகள் விலக தாந்த்ரீக முறை :!!!

இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய வேண்டும்.
ஆகாசதாமரை செடியை வியாழன் அன்று பறித்தோ (ஏரி மற்றும் நீர் நிலைகளில் காணப்படும்)அல்லது வாங்கியோ முழுவதுமாக ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத படி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில் மாட்டி விட வேண்டும். இதை எவரும் தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும். தொட்டால் பரிகாரம் தடை படும். 45 நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம். பலன் அளிக்கும் பரிகாரம் இது என்கிறது தாந்த்ரீகம்.
நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட "உப்பு நீர்" பரிகாரம்
சோம்பேறித்தனம்
என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை
நேரம் தவறுதல்- வேகமின்மை
தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்
கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள்
மன அழுத்தம்
திடீர் உடல் நிலை கோளாறுகள்
திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள்
செய்வினை கோளாறுகள்
மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர்
பேய் அல்லது ஆவிகள் அல்லது துர்ஆத்மாவினால் பயம்
மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்" பரிகார முறையை பின்பற்றஅனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
தேவையானவை :
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக் சால்ட்
(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும், சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.
வேலை மாற்றத்திற்கு :
அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள் அணிந்து 11 சிவப்பு மிளகாய்களை எடுத்து கொண்டு
வேலை மாற்றத்திற்காண வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து விடவேண்டும். இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர வேண்டும். இதற்கிடையில் வேலை மாற்றம் ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.
வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு :
1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.
2. வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.
3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.
4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.
5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும்.
கடன் தொல்லை :
1. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும்.
2. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம் பருப்பை மறு நாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம்.
4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.
5. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
6. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்.
இழந்ததை பெற மேலும் இழக்காமல் இருக்க
ஒவ்வொரு திங்களும் அரச மரத்து இலைகள் 11 பறித்து அதில் 4 முறை சிகப்பு சந்தனத்தால் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) "ராம் ராம்" (இரண்டிரண்டாக 4 முறை) மேலிருந்து கீழ் எழுதி அந்த 11 இலைகளையும் ஏதாவது ஒரு அனுமன் கோவிலில் சென்று வைத்து விட்டு அனுமானை வழிபட்டு வர ஆஞ்சநேயன் நாம் இழந்த பொருள்,நஷ்டம் அனைத்தையும் திரும்ப பெற செய்வார் என்பது உறுதி. நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வர நலம் பெறலாம்.
சகலமும் வசியமாக பழங்கால முறை
சுத்தமான கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன் கலந்தும், திங்கள் வியாழன் நேய்யுடன் கலந்தும், செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும் மையாக இட்டு செல்ல அனைத்தும் வசியமாகும்.வேண்டிய காரியம் சித்திக்கும்.
ஜோதிட சூச்சும பரிகாரங்கள்
திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர பண வருவாய் அதிகரிக்கும்.
திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட சுபிட்சம் பெறலாம்.
பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.
எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்-
(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.
(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.
(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு. (5) அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்- தொடர்ச்சி 2
(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும்.
(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும்.
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
(4) நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
(5) பூர்வீக சொத்து கிடைக்க வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வாங்கி வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால் 27 வாரங்கள் (செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
(6) சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும்.எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்- தொடர்ச்சி
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும். எந்த கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன பலன்கள் ?? ஞாயிறு- ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்
திங்கள் - தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்
செவ்வாய் - எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன் நிவர்த்தி.
புதன் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.
வியாழன் - சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
வெள்ளி -லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.
சனி - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிட்டும். ருத்ராக்க்ஷ பரிகாரங்கள்-தொடர்ச்சி
(1) பெரிய அளவில் செய்யப்படும் புதிய முயற்சிகள், பெரிய தொழிற்சாலை, ப்ராஜெக்ட்
18 முகம்
(2) குழந்தைகளுக்கு தீர்க்க முடியாத வியாதிகள், உடல் நல கோளாறு
12 முகம்
(3) பொருளாதார வளர்ச்சி, எதிர்காலத்தை அறியும் தன்மை
15 முகம்
(4) எல்லா வித பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு
ஒன்று முதல் 14 வரையிலான முகங்கள் மற்றும் கணேசா
ருத்திராக்ஷம், கௌரிஷங்கர் கொண்ட சித்த மாலை
(5) உச்ச நிலை தியானம்,ஆன்மீகம் கைகூட
ஒன்று,மூன்று,ஐந்து,ஒன்பது, பதினொன்று,மற்றும் கௌரிஷங்கர்
(6) வெளிநாட்டில் வாழ்ந்து முன்னேற்றம் இல்லாத நிலை மற்றும் பாதுகாப்பு
சித்த மாலை அல்லது பதினோரு முகம்
(7) எந்த துறையிலும் பிரகாசிக்க
பதினான்கு / பதினேழு / பத்தொன்பது / இருவது முகம்
(8) ஆன்மீகத்திலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கும்.

Posted by ஸ்ரீ விஸ்வ ஆன்மீகம்.

வாயு ஏற்படுவது ஏன்?

டாக்டர் கு. கணேசன்
வாயுப் பிரச்சினை. இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை ‘நாகரிக உணவுப் பழக்கம்’என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.
வாயுத் தொல்லை எது?
அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் ‘வாயுத் தொல்லை’(Flatulence) என்கிறது. ஆனால், பொதுமக்கள் வாயுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சுவலி, முதுகுவலி, முழங்கால் மூட்டுவலி, விலாவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி என்று உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.
நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டி ருப்பதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.
வாயு எப்படி வருகிறது?
நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.
அடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். தினமும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.
கெட்ட வாடை ஏன்?
சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.
சத்தம் ஏன் கேட்கிறது?
பலருக்குச் சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது. சிலருக்குச் சத்தத்துடன் அது வெளியேறுகிறது. காரணம் என்ன? பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் ‘புஸ்வாணம் சத்தம்’ மட்டுமே கேட்கும். இந்தக் கலவை அதிகமாகிவிட்டால் ‘அணுகுண்டு வெடியைப் போன்ற சத்தம்’கூடக் கேட்கலாம்.
வாயு அதிகமாகப் பிரிவது ஏன்?
நாளொன்றுக்குச் சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்குப் முதன்மைக் காரணம்.
அடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.
உடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும். உடற்பயிற்சி இல்லாதது, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாயுத் தொல்லை அதிகரிக்கிறது.
என்ன சிகிச்சை?
வாயுக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு சிகிச்சை பெறுவது வாயுத் தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும். வாயுப் பிரச்சினைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. சீக்கிரத்திலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுமுறை முக்கியம்.
வாயுக்கு எதிரிகள்!
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
வாயுவைக் கட்டுப்படுத்த
எண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.


Thursday, December 4, 2014

*அதி மதுரம்:*

*அதி மதுரம்:*
***********
- மலச்சிக்கலை நீக்கும்
- கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது
- இரத்தப் போக்கை நிறுத்தும்.
- சொட்டு மூத்திரத்தை நிவர்த்தியாக்கும்.
- சிறுநீர்ப்பை புண்களை ஆற்றும்,
- கல்லடைப்பை நீக்கும்
- ஊட்டச் சத்தாகவும்
ஒற்றை,இரட்டைத் தலை வலி அகல
***************************************
அதிமதுர சூரணம் 35 கி
சோம்புசூரணம் 35 கி, சர்க்கரைசூரணம் 35 கி ஒன்றாய் கலந்து பின்
கொஞம் எடுத்து தேனில்
சீதள தலை வளி
***************
திரிபலா + அ.மதுரம் 4 பொருளும் சம எடையில் + தேன்
வெப்பத்தலைவலி
****************
திரிபலா + அ.மதுரம் 4 பொருளும் சம எடையில் + தேன்
அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீர
********************************
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றும்சம அளவு
இளவறுவல் + சூரணம் + தேன் 5 கி
[அ]
அதிமதுரம் 5 கிராம்
வால்மிளகு 5 கிராம்
சித்தரத்தை 5 கிராம்
திப்பிலி 5 கிராம் பொடி
கால் லிட்டர் நீர் கொதிக்க வைத்து காலை மாலை இருவேளை
இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்க
++++++++++++++++++++++++++++
எருமைப்பால் + அம்மியில் அ.ம் பேஸ்ட்
மீண்டும் மயிர் முளைக
பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க
2.ஆஸ்துமா குணமாக
****************
தினமும் 1தேக்கரண்டி
ஆஸ்துமா ,சளி, இருமல் இருக்காது. தொண்டை நோய்கள்,ஆண்மை பலவீனம்,கருப்பை நோய்கள்.மலட்டு த்தன்மை நிவர்த்தியாகும்
3.தலை முடி உதிர்தல் குணமாக:
*********************************
பசும்பால்+ அ.ம = ஹேர் பேக்
ரத்த வாந்தி உள் உறுப்பு ரணம் ஆற
சந்தன தூள் 1/2கி
அதி மதுர தூள் 1/2 கி + பாலில் 4 வேளை அருந்துக
4.பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிறுத்த
அதிமதுரம், சீரகம் சம அளவு சூரணம் 20 கிராம்
200 மில்லி தண்ணீ­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிடவும்
தாய்ப்பால் நன்கு சுரக்க
************************
அதிமதுர தூள் ,கொன்சம் சர்க்கரை + பால் [குழந்தைக்கு ஊட்ட சத்தும் கூடும்
மலச்சிக்கல் நிவாரனம் பெற,உள் உறுப்பு சூடு அகல
சோம்ம்பு சூரணம் 5 கி
அதி மதுர சூரணம் 5 கி
+சுடு நீர் = மல்சிக்கல் அகலும்
அதிமதுரம் 5 கிராம்
வால்மிளகு 5 கிராம்
சித்தரத்தை 5 கிராம்
திப்பிலி 5 கிராம் பொடி
கால் லிட்டர் நீர் கொதிக்க வைத்து காலை மாலை இருவேளைக
போக சக்தி அதிகரிக்க ,இழந்த வாலிபம் திரும்ப
*************************************************
தேன்+பால்+அ.மதுரம்
தொண்டைக் கரகரப்பு குரல் கம்மல்,தொண்டை சளிக் கட்டு கரைய:
*******************************************************
அதி மதுர துண்டு வாயில் அடக்கல்

வழுக்கை தலயில் முடிவளர வேண்டுமா? இதோ சித்தவைத்திய முறையில் சில ஆலோசனைகள்…

சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.முடி உதிர்வது மற்றும் நரை போக்க:
1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.
4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
அமரர் மார்க்கண்டு வைத்தியர்
© WorldTamilsWin 2013, All

Friday, November 21, 2014

இதய நோய்களுக்கு பாட்டி வைத்தியம்

1. மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
2. கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து, தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 30 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
3. பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
4. வல்லாரை இலை (4), அக்ரூட் பருப்பு (1), பாதாம் பருப்பு (1), ஏலக்காய் (3), மிளகு (3) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.
5, ஆரைக்கீரை, தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து, ஏலக்காயை (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
6, வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
7, வங்கார வள்ளைக் கீரைச் சாறில் பூண்டை (ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், ரத்த அழுத்தமும் குணமாகும்.