Sunday, August 24, 2014

முதுகு வலியும்- இயற்கை மருத்துவமும்:-

இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.
நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.
சியாடிக்கா என்றால் என்ன?
நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.
முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.
அறிகுறிகள்
‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.
இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.
காரணங்கள்:
• முதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும்.
இதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.
• ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.
• சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும்.
• ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.
வீட்டு வைத்தியம்:
• விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
• பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.
• புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.
• சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.
• விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.
• ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.
ஆயுர்வேத அனுபவம்
முதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.
இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.
முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.
மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.
ஒரு நாள் எண்ணெய்யை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.
உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.
இதர வழிகள்:
1. முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.
2. குப்புற படுக்கக் கூடாது.
3. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.
4. நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.
5. உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.
6. இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.
7. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.
8. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.
9. படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.
10. நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
11. பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.
12. தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.
13. தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.
14. கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.
15. உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.
16. பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
17. முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
18. பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.
உணவு முறை:
• குளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.
• பழைய உணவுகளை தவிர்க்கவும்.
• கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.
• எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.
• இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
• இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.
• இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.
• இஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.

வாழை இலைக்குளியல்!!!

உலகில் உள்ள அனைத்து தாவரங்களும், மரங்களும் கரியமிலா வாயுவை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதர்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து கரியமிலா வாயுவை வெளியே விடுகிறார்கள்.
அதாவது மனிதனின் வெளிமூச்சு தாவரங்களுக்கு உள்மூச்சு. தாவரங்களின் வெளிமூச்சு மனிதர்களுக்கு உள்மூச்சு.
உயிரினங்கள் இல்லாவிட்டால் மரம், செடிகளும் மரம் செடிகள் இல்லாவிட்டால் மற்ற உயிரினங்களும் உலகில் ஆரோக்கியமாக
வாழ முடியாது.
இதுவே
இறைநிலையின் ஏற்பாடு.!
அதிலும் மற்ற தாவரங்கள் ஆக்ஸிஜனை மட்டுமே வெளிவிடுகிறது
அதில் பிராணக்காற்றும்
கலந்துள்ளது.ஆனால், வாழையிலை மட்டுமே கரியமிலா வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராணவாயுவை மட்டுமே வெளிவிடுகிறது
மற்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் ஆக்ஸிஜனில் இருப்பதை விட
பலமடங்கு பிராணசக்தி வாழையிலையில் நிறைந்துள்ளது.
அதனால்தான்
உடலில் பல்வேறு வழிகளில் தேங்கியுள்ள கரியமிலா வாய்வை வெளியேற்றி உடலில் உள்ள கெட்ட காற்றையும் நீரையும் வெளியேற்ற வாழையிலை குளியல் ஒரு உபாயமாக இருக்கிறது.
*பலன்கள்
————
1.உடல் எடையை குறைக்கும்.
2.உடல் வீக்கம், கை, கால்வீக்கத்தைப்போக்கும்.
3. சிறுநீரக செயலிழப்பை தடுக்கும்.
4.அலர்ஜி, மற்றும் தோல்வியாதி
களைப்போக்கும்.
5.வியர்வை சுரபிகளில் ஏற்பட்டுள்ள தடையை போக்கும்.
6.உடலில் பல்வேறு உறுப்புகளில் தேங்கியுள்ள கெட்ட காற்றை வெளியேற்றும்.
7. உடலுக்கு புத்துணர்வை
யும், புதுப்பொலிவையும் தரும்.
8. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
9.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்பட்டுள்ள மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.
*செய்முறை
—————–
1.வாழை குளியலுக்கு முதல் நாள் நிறைய நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை பச்சையாக உண்ணவேண்டும்.
2.குளியல் செய்ய
போகும் இடத்தில்
ஆறு துண்டு நூல்கயிறு அல்லது தென்னை கயிறை வரிசையாக
தரையில் போடவும்.
3.அதன்மேல் நான்கு பெரிய இலைகளை விரிக்கவும்
< உடல் பருமனுக்கு தகுந்தபடி>
4.வாழை குளியல் எடுப்பவருக்கு ஆறுடம்ளர் தண்ணீர் கொடுத்து, தலையில் ஒரு டவ்வலை நனைத்து சுற்றி இலைகளில் படுக்க வைக்கவும்.
5.கால் பாதம் முதல் உச்சந்தலை
வரை உடலில் எந்த பாகமும் வெளியே தெரியாதபடி அவரின் மேலே இலைகளால் மூடவும்.
6.மூக்கின் அருகே மூச்சு விடுவதற்காக இலையின் சிறு பகுதியை வெட்டிவிடவும்.
7.இலைகட்டு
களை கட்டுவதுபோல் அவர் உடல் முழுவதையும் போர்த்தி சற்று மெல்லிய இறுக்கத்துடன் கட்டிவிடவும்.
அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க செய்துவிட்டு கட்டுகளை அவிழ்த்து மூன்று முறை நன்றாக மூச்சை இழுத்துவிட செய்து எழுப்பி நிழலில் அமர்த்தி. எலுமிச்சை , தேன் , இந்துப்பு , இஞ்சி கலந்த கலவையை கொஞ்சம் மெதுவாக நன்றாக கொப்பளித்து குடிக்க செய்துவிட்டு பிறகு 15 நிமிடம் கழித்து பச்சைதண்ணீரில் குளிக்க செய்து
விடலாம்.
அதன்பிறகு அன்றைக்கு முழுவதும் இயற்கை உணவு அல்லது சாத்வீக உணவுகளையே உண்ண வேண்டும்.
10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்
வாழையிலை குளியல் எடுத்துக்கொள்ளலாம். வாழை குளியல் செய்ய காலை
ஏழு மணி முதல் பதினோரு மணிவரை உள்ள நேரமே சிறந்ததாகும்.
வாழைகுளியலின்போது
இருபது நிமிடத்திற்குள்ளாகவே வெப்பம் அதிகமாக உணரப்பட்டால் வாழையின் மேலே கொஞ்சம் நீரை தெளித்துகொள்ளலாம்.
இலையின் உள்ளிருப்பவர் பொறுக்க முடியாத அளவு சிரமமாக உணர்ந்தால் அவரை வெளியேற்றி விடலாம்.
குளியலின் போது வெறும்
டவ்வல் அல்லது ஜட்டியை மட்டுமே அணிந்து கொள்ளலாம்.
பெண்கள் குறைந்த பட்ச பருத்தி ஆடைகளை அணிந்து
கொள்ளலாம்.
இயற்கையின் ஆற்றல் அளவிட முடியாதது நண்பர்களே அதை முழுவதுமாக பயண்படுத்தி
கொண்டு. கெட்ட
பின் விளைவுகளை
தரும் மருத்துவ முறைகளை முற்றிலும் தவிர்த்து, வெளிநாட்டு இரசாயண மருந்துகளின் குப்பைத் தொட்டியாக
நம் உடலை ஆக்காமல் இறை உறையும் ஆலயமாக அதை மாற்றுவது நமது கைகளில் தான்
இருக்கிறது.!
இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்.!

மூட்டுவலி, உடல்வலி, கை, கால் வீக்கம், நெஞ்சுச்சளி போன்ற பிணிகளுக்கு !!!

நல்லெண்ணெய் 200 மிலி
விளக்கெண்ணைய் 100 மிலி
வேப்பெண்ணைய் 50 மிலி
இந்த மூன்று எண்ணைய்களையும் வாங்கி ஒன்றாகச்சேர்த்து அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எருக்கன் இலை நான்கை பிச்சுப்போட்டு இலை வெந்ததும் எண்ணையை இறக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு மூட்டுவலி, உடல்வலி, கை, கால் வீக்கம், நெஞ்சுச்சளி போன்ற பிணிகளுக்கு பாதிப்புள்ள இடத்தில் கொஞ்சம் அழுத்தமாக தடவி அரைமணி நேரம்
கழித்து சுடுநீரில் ஒத்தடம் கொடுத்து வர மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும்.
உள் மருந்தாக திரிபலா சூரணம் 5 கிராம் எடுத்து சிறிது தேனில் குழைத்து இரவு தூங்கும்முன் உண்டு வந்தால் மேற்கண்ட பிணிகள் தீர்ந்துவிடும்.!

டான்சில் வீகத்திற்கு இயற்கை மருத்துவம்!!!



டாங்சில்ஸ் வீக்கம்
----------
சுக்கு 10 கிராம்
மிளகு 10 கிராம்
திப்பிலி 10 கிராம்
நெல்லிவற்றல் 10 கிராம்
தான்றிவற்றல் 10 கிராம்
மேற்கண்ட மூலிகைகளை வாங்கி தனித்தனியாகப் பொடித்து பின் ஒன்றாக கலந்து
100 கிராம் கற்பூரவல்லி இலையை சிதைத்து சாறெடுத்து அதோடு மூலிகைப் பொருட்களை சேர்த்து அம்மி அல்லது மருந்து தயாரிக்கும் கல்லில் வைத்து நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் நான்குநாட்கள் காயவைத்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிட்டு அரைமணி நேரம் சென்ற பின் வேளைக்கு ஒன்றுவிதம் மூன்று வேளையும் வாயில் போட்டு ஒதுக்கிக்கொண்டு உமிழ் நீரோடு சேர்த்து மெதுவாக உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காலை, இரவு தேனில் மாத்திரையை பொடித்து கலந்துகொடுக்கலாம்.! டாங்சில்ஸ் வீக்கம்.தொண்டைவலி, குரல்கட்டி, சளி, ஜலதோசம், வறட்டு இருமல் ஆகிய பிணிகள் குணமாகும்.
டாங்சில்ஸ் என்பது தொண்டைவீக்கம் தான் ஆனால் அது சதைவளர்ச்சி என்றுகூறி வர்த்தக மருத்துவத்தில் அறுவைசிகிட்சை செய்ய கூறுவது தவறாகும்.
உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாக சேர்க்க வேண்டும்.
புளித்த, பழைய அதிக குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நலம் பெருகட்டும் …

குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!

மழைக்காலம் வந்தாலே சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். திடீரென்று ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் குழந்தைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மூக்கில் தண்ணீர் வடிவதால் முகமெல்லாம் சிவந்து எரிச்சலடைவார்கள். இந்த தொந்தரவுகளை நீக்குவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மருந்துகளை கொடுக்கலாம் என்கின்றனர் குழந்தைநல நிபுணர்கள்.
சளி தொந்தரவு ஏற்பட்டாலே குழந்தைகளுக்கு மூக்கு அடைத்துக் கொள்ளும். ஒரு துண்டு சுக்கு எடுத்து தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மாலையிலும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். துளசிச்சாறு, இஞ்சி, தேன் சம அளவு கலந்து குடிக்கத் தரலாம் ஜலதோஷம் நீங்கும். அதேபோல் மூலிகை டீ குடிக்கக் கொடுக்கலாம்.
டீ போடும்போது இஞ்சியைத் தூளாக்கி போட்டுக் கொதிக்க வைத்து குடித்தால் ஜலதோசம் சரியாகும்.
பட்டை, கிராம்பு, பெரிய ஏலக்காய், இஞ்சி, வெற்றிலை ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் பனங்கற்கண்டு கலந்து குடிக்கத் தரலாம். கலந்தோ குடித்தால் சளித்தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இருமல் வந்தால் ஓமவள்ளி, வெற்றிலை, துளசி, இஞ்சி இவற்றின் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கத் தரலாம். இதனால் மார்பில் கட்டி இருக்கும் சளி பிரிந்து வெளிவரும். குழந்தைகளுக்கு நெஞ்சுச்சளி அதிகம் இருந்தால் தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
ஒரு சில குழந்தைகள் இரவு நேரங்களில் வறட்டு இருமல் இருமி தூங்காமல் முழித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கற்பூரவல்லி இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு குடிக்கத் தரலாம் நல்ல பலன் உண்டாகும். மேலும் காசநோய், வாதக் கடுப்பு போன்ற நோய்களுக்கும் இதன் சாறு மிகவும் நல்லதாகும்.
வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும். வெந்தயக் கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் சளி சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். இரும்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளது.
நன்றி :-http://pvsmms.blogspot.in

குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!

மழைக்காலம் வந்தாலே சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். திடீரென்று ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் குழந்தைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மூக்கில் தண்ணீர் வடிவதால் முகமெல்லாம் சிவந்து எரிச்சலடைவார்கள். இந்த தொந்தரவுகளை நீக்குவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மருந்துகளை கொடுக்கலாம் என்கின்றனர் குழந்தைநல நிபுணர்கள்.

சளி தொந்தரவு ஏற்பட்டாலே குழந்தைகளுக்கு மூக்கு அடைத்துக் கொள்ளும். ஒரு துண்டு சுக்கு எடுத்து தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மாலையிலும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். துளசிச்சாறு, இஞ்சி, தேன் சம அளவு கலந்து குடிக்கத் தரலாம் ஜலதோஷம் நீங்கும். அதேபோல் மூலிகை டீ குடிக்கக் கொடுக்கலாம்.
டீ போடும்போது இஞ்சியைத் தூளாக்கி போட்டுக் கொதிக்க வைத்து குடித்தால் ஜலதோசம் சரியாகும்.

பட்டை, கிராம்பு, பெரிய ஏலக்காய், இஞ்சி, வெற்றிலை ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் பனங்கற்கண்டு கலந்து குடிக்கத் தரலாம். கலந்தோ குடித்தால் சளித்தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இருமல் வந்தால் ஓமவள்ளி, வெற்றிலை, துளசி, இஞ்சி இவற்றின் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கத் தரலாம். இதனால் மார்பில் கட்டி இருக்கும் சளி பிரிந்து வெளிவரும். குழந்தைகளுக்கு நெஞ்சுச்சளி அதிகம் இருந்தால் தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

ஒரு சில குழந்தைகள் இரவு நேரங்களில் வறட்டு இருமல் இருமி தூங்காமல் முழித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கற்பூரவல்லி இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு குடிக்கத் தரலாம் நல்ல பலன் உண்டாகும். மேலும் காசநோய், வாதக் கடுப்பு போன்ற நோய்களுக்கும் இதன் சாறு மிகவும் நல்லதாகும்.
வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும். வெந்தயக் கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் சளி சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். இரும்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளது.
நன்றி :-http://pvsmms.blogspot.in

தைராய்டு தொல்லையால் அவஸ்தை படுவோருக்கு சில ஆலோசனைகள்…


எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது:
தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.
தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.
உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.
உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
டயட்
உடலில் அயோ டின் அளவு குறைந் தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.
தைராய்டு பிரச்னை யை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.
உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்‘ என்கிறார் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.
ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
நன்றி :-http://pvsmms.blogspot.in

புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுதலை வேண்டுமா?

 மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை; புகை பிடிப்பவர்களை அதன் பாதிப்பில் இருந்தும் அந்த பழக்கத்தில் இருந்தும் காப்பாற்றும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.
மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது, இது சீனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்த நாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை.
இந்த மருத்துவத்தை தலைவன் (master) பெங்க் மும்பை வந்த போது எனக்கு சொன்னது, நான் பலரிடம் சொல்லி அதற்கான பலனும் பார்த்திருக்கிறேன், இதை நீங்களும் உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க உடனிருங்கள்.