Thursday, May 28, 2015

மஹா பெரியவா அருள்வாக்கு

தர்மம் பண்ணுவதில் மட்டும் ‘அப்புறம்‘ என்று ஒத்திப் போடாமல், எப்போதும் யமன் உன் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடன் பண்ணி விட வேண்டும்.
வியாசர், பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின், சிஷ்யர்கள் அவற்றின் ஸாராம்சத்தை ஒன்றிரண்டு ஸ்லோகங்களில் சுருக்கித் தருமாறு வேண்டினார்கள். “பதினெட்டுப் புராணம் மட்டுமின்றி, மொத்தமுள்ள கோடிப் புத்தகங்களின் ஸாரத்தையும் அரை ஸ்லோகத்தில் சொல்கிறேன்” என்றார்.
“ச்லோகார்த்தேந ப்ரவக்ஷயாமி யதுக்தம் க்ரந்த கோடீஷு
பரோபகார: புண்யாய பாபாய பரபீடிதம்”
இருக்கும் அத்தனை கோடி மத சாஸ்த்ர புத்தகங்களும் உயிர் நிலையான தத்வம் என்னவென்றால், “புண்யம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பரோபகாரம் பண்ணு. பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதென்றால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு”, என்பதுதான்.


No comments:

Post a Comment