Sunday, August 24, 2014

வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!

தாம்பத்ய உறவின் போது அதிக நேரம் உறவில் ஈடுபடுவதற்கு வயக்ரா போன்ற மாத்திரைகளை சிலர் உட்கொள்வார்கள். இனி அதெல்லாம் வேண்டாம் மாதுளம்பழம் ஜூஸ் குடிங்க என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். மாதுளம்பழத்தில் உள்ள சத்துக்கள் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றனவாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்
.
மாதுளம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஏற்கனவே ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில் இது மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை ஊக்குவிக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த எடின்பர்க் குயின் மார்க்கரெட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 21 வயது முதல் 64 வயதுவரை உடைய 58 பேர் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தினசரி ஒரு கப் மாதுளம்பழச் சாறு கொடுக்கப்பட்டது. 15 நாட்கள் தொடர்ந்து பழச்சாறு கொடுக்கப்பட்டதில் அவர்களின் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பின் அளவு அதிகரித்தது தெரியவந்தது.
ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கு இருந்த பிரச்சினைகளான தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், சினைப்பை பிரச்சினை போன்றவை சரியானது ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதனால் பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகள் அதிகரித்தன.
மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டுவதற்கு மாதுளம்பழச்சாறு எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாத அருமருந்து என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டெஸ்டோஸ்ட்ரோன் அளவு 16 முதல்30 சதவிகிதம் வரை அதிகரிப்பதனால் உயர்ரத்த அழுத்தம் குறைகிறது. அதே சமயம் மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

மூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்!!!

ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க…. ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா… மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.
இளநீரில் ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி, வீட்டு மொட்டை மாடியில ஒரு ராத்திரி வச்சிரணும். காலையில அந்த இளநீரை குடிச்சிட்டு, வெந்தயத்தையும் சாப்பிடணும். தொடர்ந்து 5 நாள் இதே மாதிரி செய்தா மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கணக்கா… மூலம் ஓடிப்போயிரும். அப்படியும் சரியாகலைனா…. 5 நாள் கழிச்சி திரும்பவும் சாப்பிட்டா கண்டிப்பா சரியாயிரும்.
வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா… பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.
சோத்துக்கத்தாழை மடல் எடுத்து மேல்தோலை நீக்கி நல்லா கழுவணும். அதுல ரெண்டு அங்குல அளவு துண்டு போட்டு, அப்படியே சாப்பிடணும். தண்ணியில கழுவினாலும் லேசா கசப்பு இருக்கும். அதனால பனைவெல்லத்தையும் சேர்த்துச் சாப்பிடணும். மூலத்தை குணமாக்கற இந்தக் கத்தாழை, கேன்சரைகூட குணமாக்கும். முக்கியமா கர்ப்பப்பை புற்றுநோய்க்கு நல்ல மருந்து இது.
அடுத்ததா, ஒரு கைகண்ட மருந்து குப்பைமேனி. இந்த செடியைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. சிலர் இதை ஒண்ணுக்கும் ஆகாத செடினு சொல்வாங்க. ஆனா, மூலத்துக்கு இது நல்ல மருந்து. குப்பைமேனி இலையை காய வச்சு நல்லா தூளாக்கி வச்சுக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டா, எல்லா வகை மூலமும் சரியாயிரும்.
அருகம்புல் 20 கிராம் அளவு எடுத்து, மை போல அரைச்சு, காய்ச்சின பசும்பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா… மூலம் மட்டுமில்லாம ரத்த சோகையும் குணமாகும்.
நன்றி :-http://pvsmms.blogspot.in

கொழுப்பை குறைக்க 10 வழிகள்!!!

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!
இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்…
வயிற்றுக் கொழுப்பை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இவ்வாறு வயிற்று கொழுப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது சரியான வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாம் தோல்வியடைகிறோம். வயிற்றுக் கொழுப்பை குறைக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால் அதற்காக ஒன்றல்ல, இரண்டல்ல 10 வழிகள் இதோ.
உடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப உங்க டயட்-ல பலாப்பழத்தை சேத்துக்கோங்க…
சரியாக சாப்பிடுதல்
சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
தண்ணீர்
தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி
பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.
சர்க்கரை வேண்டாம்
பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்
உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.
வைட்டமின் சி உணவுகள்
உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.
கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்
கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.
தேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல்
கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.
காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்
காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.
தூக்கம்
உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது.
இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்.
உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது.
இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்.
நன்றி :-http://www.vivekabharathi.in

விரலில் அக்குப்பிரஷர் புள்ளிகள்!!!

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
++++++++++++++++++++++++++++++++++++++++
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.
அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம்.
அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?
நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும்.
கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும்.
அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம்.
வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன.
விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன.
மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது.
மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது.
LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி :
கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன.
எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது.
இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.
காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.
H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.
இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது.
இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

இளநரையை போக்கும் கடுக்காய்!!!

அறுபது வயதில் `தாத்தா பாட்டி’ ஆவது பெருமையான விஷயம். ஆனால், இருபது வயதிலேயே தலையில் இளநரை, பித்த நரை விழுந்து `தாத்தா-பாட்டி’ என்று கிண்டலுக்கு ஆளாவது சங்கடமான மேட்டர்தான். இந்த `வெள்ளிக் கம்பிகளை கறுப்பாக மாற்றும் `பிளாக் மேஜிக்’ கடுக்காய் வசம் இருக்கிறது….
100 கிராம் மருதாணி பவுடர்,
நெல்லி பவுடர் 10 கிராம்,
பிஞ்சு கடுக்காய் பவுடர் 20 கிராம்,
இவற்றுடன் 25 கிராம் டீ டிகாஷனை சேர்த்து 1 எலுமிச்சம்பழத்தை பிழிந்து முந்தின நாளே ஊற வையுங்கள். மறுநாள் தலையில் இதை `மாஸ்க்’ ஆக போட்டு நன்றாக காய்ந்ததும் அலசிவிடுங்கள். வாரம் ஒரு முறை இந்த மாஸ்க்கை தவறாமல் போட்டுப் பாருங்கள்.
கொஞ்ச நாளிலேயே இருக்கிற நரைமுடிகள் பழுப்பு நிறத்துக்கு மாறி கண்சிமிட்டும். மேலும், நரை என்பதையே கிட்ட நிருக்காமல் துரத்திவிடும். இந்த பழுப்பு நிறம் மெள்ள மெள்ள கறுப்பாக மாறிவிடும். `பிளாக் மேஜிக்’ மாஸ்க் போட நேரமே இல்லையா? கவலையே வேண்டாம்.
உங்களுக்காக ஒரு சுலப சிகிச்சை இதோ……….
பிஞ்சு கடுக்காய், நெல்லிக்காய், கருவேப்பிலை… மூன்றையும் சம அளவில் எடுத்து நன்றாக இடித்துக் கொள்ளவும். மூன்றும் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணையை எடுத்து சூடு பண்ணி, அதில் மூன்றையும் ஊறவிடுங்கள்.
தலைக்கு குளிக்கும்போதெல்லாம் இந்த எண்ணையை சற்று சூடு பண்ணி, தலையில் நன்றாகத் தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இந்த `கடுக்காய் தைலக் குளியலை’ கட்டாயம் செய்து பாருங்கள், இளநரை ஓடியே போவதுடன், முடியும் கறுமையாக மாறிவிடும்.
`கருகரு கூந்தல் இருந்தால் மட்டும் போதுமா விளம்பரப்படங்களில் வருவது போல அலைபாயும் நீண்ட கூந்தலுடன் நடை போட முடியலையே’ என்று ஏங்குபவர்களா நீங்கள்? உங்களுக்கும் கை கொடுக்கிறது கடுக்காய்…
100 கிராம் பிஞ்சு கடுக்காய்,
100 கிராம் முத்தின கடுக்காய்…
இரண்டையும் வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். இதனுடன் 20 கிராம் சுருள்பட்டை, கட் பண்ண 100 கிராம் வெட்டிவேரையும், கால் கிலோ தேங்காய் எண்ணையுடன் சேர்த்து கலந்துவிடுங்கள்.
தினந்தோறும் கூந்தலுக்கு இந்தத் தைலத்தை தடவி வந்தால், `நீ நீ நீ…….. நீளமாக’ கூந்தல் வளர்வது நிச்சயம். கூந்தலில் மட்டுமல்ல, புருவம், கண் இமைகளிலும் இந்தத் தைலத்தை தடவலாம். கண் இமை, புருவ முடிகள் அடர்த்தியாக வளர்த் தொடங்கும்.
`வீஸிங்’ தொல்லை இருப்பவர்களும், பயமேயின்றி இந்த தைலத்தை பயன்படுத்தலாம். கடுக்காய்க்கு நீரை உறிஞ்சும் தன்மை இருப்பதால் சளியோ, தலைவலியோ வரவே வராது.
ஓய்யார கொண்டையாம் தாழம்பூவாம்….. அதில் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனாம் போன்ற பாட்டுக்கெல்லாம் வேட்டு வைக்கிற ஷாக் டீரிட்மெண்ட் இது… சீயக்காய் 1 கிலோ, பிஞ்சு கடுக்காய் 100 கிராம், வெந்தயம் கால் கிலோ, பச்சை பயறு கால் கிலோ, உலர்ந்த செம்பருத்தி 100 கிராம்… இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்
இந்த `கடுக்காய் மிக்ஸர் தூளை’ ஆயில் பாத் எடுக்கும் போதெல்லாம் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், கொஞ்ச நாளிலேயே பொடுகு, அரிப்பு செதில், பேன் உட்பட சகலத் தொல்லைகளும் `போயே போச்சி’! தலைமுடி மின்ன, ஒரு எளிய சிசிக்சை……
முத்தின கடுக்காய் தோல் 5, பூந்திக்கொட்டை தோல் 5 இரண்டையும் தண்ணீரில் நன்றாக கொதிக்கவிடுங்கள். அந்த நீரை தலை அலசும் போது பயன்படுத்தினால் முடி `பளபள’ வென மின்னும். புருவம், இமை பகுதிகளில், இந்த நீரை பஞ்சினால் தொட்டு தடவி வர, முடி உதிர்வது நின்று நன்றாக வளரத் தொடங்கும்.
கை வேலைப்பாடு மிகுந்த விதவிதமான ஆபரணங்களை போட்டு பார்ப்பது அழகு தான். ஆனால், காதுக்கு சேதாரமாகாமல் இருக்க வேண்டுமே அப்படி, காதில் ஏற்படும் புண்களை நொடியில் மறையச் செய்கிறது, இந்த கடுக்காய் ட்ரீட்மெண்ட். பிஞ்சு கடுக்காயை பொடி செய்தோ (அ) சந்தன மலையில் தண்ணீர் சேர்த்து கடுக்காயை இழைத்தோ புண் வந்த இடத்தில் பூசுங்கள். இரண்டே நாளில், இருந்த இடம் தெரியாமல் புண் மறைந்துவிடும்.
நன்றி :-http://www.vivekabharathi.in

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்:

சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது.
முள்ளங்கி உடலுக்கு நல்ல குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும்.
குடல் வாதம், நீர்க்கோவை, காசம் ஆகியவை நீங்கும். பசியை உண்டாக்கும். தொண்டைக் கம்மல், மூலரோகம், கல்லடைப்பு, அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
முள்ளங்கிச்சாறு காலை, மாலை அருந்தினால் – சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.
சுவைக்காக சேர்க்கப்படுவது சிவப்பு முள்ளங்கி, முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதைமூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.
சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது.
சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதில் அதிகமாக இருப்பது தான் அதற்கு காரணம்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.
பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.
இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளி போன்ற பிரச்சினைகள் இருக்காது. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
உடல் உஷ்ணத்தை தணிக்க வல்லது. இது வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளி நீக்க வல்லது. குடலில் புண் இருந்தாலும் ஆற்றி விடும்.
மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கும். பசியை அதிகரிக்க செய்யும். உஷ்ண மிகுதியால் மூல நோய் ஏற்பட்டு அவதிபடுபவர்க்கு இது சிறந்த மூலிகையாகும்.
நீரிழிவு, நரம்பு தளர்ச்சிகு நல்லது. முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். ஆகவே அளவாக சாப்பிடுவது நல்லது
நன்றி :-http://www.vivekabharathi.in/

உடம்பெல்லாம் வலியா இருக்கா?

ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.
மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடுகிறது.
இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.
இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்படவாய்ப்புண்டு.
எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.
தேன்: தொண்டை வலி
தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும்.
எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
காபி: ஒற்றை தலைவலி
காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால் ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பூண்டு எண்ணெய்: காது வலி
காதுகளில் வலி ஏற்பட்டால், பூண்டுகளை தட்டி கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால் உடனே வலி நீங்கிவிடும்.
கிராம்பு: பல் வலி
சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி போய்விடும்.
வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு
உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால் பிடிப்புக்கள் நீங்குவதோடு, உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.
உப்பு: பாத வலி
நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள்.
முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு வீக்கமும் குறையும்.
திராட்சை: முதுகு வலி
முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்
மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும்.
அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால், வீக்கமானது தணியும்.
செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி
மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.
தக்காளி: கால் பிடிப்பு
இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
மீன்கள்: அடிவயிற்று வலி
மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.
இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.
ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.
அன்னாசி: வாயுத் தொல்லை
வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால் அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.
புதினா: தசைப்புண்
அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால் அது வலியைக் குறைத்துவிடும்.