Thursday, May 28, 2015

முருகனை காண உதவும் பகை கடிதல் பதிகம் !

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல்
திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர்உருவே,
அருமறை புகழ்உருவே, அறவர்கள் தொழும்உருவே
இருள்தபும்ஒளிஉருவே, எனநினை எனதுஎதிரே,
குருகுகன்முதல்மயிலே,கொணர்திஉன்இறைவனையே.
மறைபுகழ் இறைமுனரே, மறைமுதல்பகர்உருவே,
பொறைமலிஉலகுஉருவே, புனநடை தரும்உருவே
இறைஇளமுகஉருவே, எனநினைஎனதுஎதிரே
குறைவுஅறுதிருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.
இதரர்கள்பலர்பொரவே, இவன்உறை எனதுஎதிரே
மதிரவி பலஎனதேர், வளர்சரன்இடைஎனமா,
சதுரொடு வருமயிலே, தடவரைஅசைவுஉறவே,
குதிதரும்ஒருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.
பவநடை மனுடர்முனே, படர்உறும்எனதுஎதிரே
நவமணி நுதலணிஏர், நகைபல மிடறுஅணிமால்,
சிவணிய திருமயிலே, திடனொடு நொடிவலமே
குவலயம்வருமயிலே, கொணர்தி உன்இறைவனையே.
அழகுஉறுமலர் முகனே, அமரர்கள்பணிகுகனே,
மழஉரு உடையவனே, மதிநனி பெரியவனே
இழவுஇலர்இறையவனே, எனைநினைஎனதுஎதிரே
குழகுஅதுமிளிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.
இணைஅறும்அறுமுகனே, இதசசிமருமகனே,
இணர்அணிபுரள்புயனே,எனநினை எனதுஎதிரே,
கணபணஅரவுஉரமே, கலை(வு)உறஎழுதரும்ஓர்
குணம்உறு மணிமயிலே, காணர்திஉன்இறைவனையே.
எளியவ, என் இறைவ, குகாஎனநினைஎனதுஎதிரே
வெளிநிகழ்திரள்களைமீன், மிளிர்சினைஎனமிடைவான்,
பளபள எனமினுமா பலசிறைவிரிதருநீள்,
குளிர்மணி விழிமயிலே, கொணர்தி உன் இறைவனையே
இலகுஅயில்மயில்முருகா, எனநினைஎனதுஎதிரே,
பலபல களமணியே, பலபல பதமணியே
கலகல கலஎனமா, கவினொடுவருமயிலே,
குலவிடு சிகைமயிலே, கொணர்தி உன் இறைவனையே.
இகல் அறுசிவகுமரா, எனநினை எனது எதிரே
சுகமுனிவரர் எழில்ஆர், சுரர் பலர்புகழ்செயவே,
தொகுதொகு தொகுஎனவே, சுரநடம் இடுமயிலே,
குகபதி அமர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.
கருணைபெய் கனமுகிலே, கடமுனிபணிமுதலே,
அருணையன்அரன்எனவே,அகம்நினைஎனதுஎதிரே
மருமலர் அணிபலவே,மருவிடு களமயிலே,
குருபல அவிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.
நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த பாடல் ஆகும். இது மொத்தம் 10 பாடல்களை உடையது. இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின் வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார். இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் கனவிலும், நனவிலும் முருகனின் அருள் உண்டாகும்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத் திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 9 முறை பாராயணம் செய்ய வும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 9 முறை பாராயணம் செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ அமர்ந்து 3 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 3 முறை பாராயணம் செய்து வரவும். முருகன் படத்திற்கு பதிலாக பித்தளையால் செய்யப்பட்ட வேல் ஒன்றினை வாங்கிக் கொள்ளலாம். வேலினையே முருகனாக பாவித்து வழிபாடு செய்து வரவும்.
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். வேலின் உயரம் 6 அங்குலம் இருப்பது மிக சிறப்பு. அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முருகனின் அருளினை வாரி வழங்கக் கூடிய ஆற்றல் கொண்ட துதி ஆகும். பாராயணம் செய்யும் காலத்தில் கனவில் முருகனின் வாகனமான மயில் தோன்றும். அதன் பின்பு கனவில் குமரக்கடவுள் தோன்றுவார் என்பது திண்ணம். நேரில் தோன்றுவது என்பது அவரவர் செய்த புண்ணியத்தினைப் பொறுத்தது.
பாராயணம் செய்யும் காலத்தில் பாராயணத்திற்கு தடைகள் உருவாகலாம். தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து தொடர்ந்து பாராயணம் செய்து வரவும். அவ்வாறு பாராயணம் செய்தால் நமது கர்ம வினைகள் படிப்படி யாக கரைய ஆரம்பிக்கும். அகத்திலும், புறத்திலும் உள்ள பகை நீங்கும் என்பது உண்மையாகும்.
தினமும் 3 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து முருகனின் தரிசனத் தையும் தந்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
ஓம் சரவணபவ
ஓம் குமர குருதாச குருப்யோ நம:
http://kaumarapayanam.blogspot.in/


Wednesday, May 27, 2015

மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன?

நாம் குழந்தையாக பிறந்தது முதல் 9 கிரகங்களின் கதிர்வீச்சு நம் மூளையை விண்வெளியிலிருந்து வந்தடைந்து கொண்டே இருக்கின்றன.
இத்தனாம் வயதில் இது நிகழும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.ஒரு எதிர்பாராத பிரச்னை அல்லது விபத்திலிருந்து தப்பிப்பதற்கு மந்திர ஜபம் அல்லது குறிப்பிட்ட சித்தர் வழிபாடு அல்லது மகான் வழிபாடு அவசியமாகிறது.
ஒரு மந்திரம் உள்ளது.
ஓம் சர்வ சர நமச்சிவய நம:
(சிவாய அல்ல) இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது வீண் செலவுகள் குறையும் என மகான்கள் கூறியுள்ளனர்.
நாம் தினமும் 30 நிமிடம் நமது வீடு/அலுவலகம்/மொட்டை மாடியில் காலையிலும் மாலையிலும் இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஜபித்துக்கொண்டே இருக்கிறோம்.என்னாகும்?
100 ஆம் நாளிலிருந்து நமது செலவுகள் குறையும்.வருமானம் மிச்சமாகும். எப்படி?
நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள் பதிவாகும்.அந்த பதிவுகள் நவக்கிரக அலைகளில் ஒரு பாதிப்பை உருவாக்கும்.நமது தலைக்குமேலே
சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் உயரத்தில் மந்திர அலைகளுக்கான அடுக்கு உள்ளது.அங்கு நமது தினசரி ஜபம் 100ஆம் நாளில் போய் வேலை செய்து நமது நம்பிக்கையை நிஜமாக்கும்.
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:
கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்:
" ஓம் ஆம் ஹ்வும் சவ்ம் "
இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.
http://rssarathkumar.blogspot.in


தைராய்டு நோய்க்கு பாட்டி வைத்தியம் !!!

பாட்டியின் வீடு எங்கும் வாசனை கமகமத்துக் கொண்டிருந்தது. விவரம் தெரிந்த நாளில் இருந்து பாட்டி ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதத்தை விடாமல் செய்து வருகிறாள்.
ஆவணி ஞாயிற்றுக் கிழமை என்றால் பாட்டி காலையிலேயே படு பிசியாகி விடுவாள்.
பொழுது புலரும் முன் எழுந்து குளித்து, சூரியனை வணங்கி நெற்றியில் மூன்று விரல்பட திருநீறணிந்து, அடுப்பை மெழுகி சமையலைத் தொடங்கி விடுவாள்.
மதியம் சாமி கும்பிட்டு, விரதம் விடும் வரைக்கும் பச்சைத் தண்ணீர் பல்லில் படாது. அவ்வளவு தீவிரம்.
அவரைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பச்செடி பயிற்றுக் குழியில் இருந்து பறித்த பச்சை புடலங்காயை அரைவேக்காடாக நெய்விட்டு வதக்கிய பொறியல், பாசிப்பருப்புடன் முந்திரி பருப்பு போட்டு பாயசம் என ஐம்புலன்களையும் கமகமக்க வைக்கும் திவ்வியமான சமையல்.
பின்னர் பேரன் பேத்திகளுடன் அமர்ந்து பூஜை முடிந்து, சாப்பிட்ட மயக்கம், பாட்டி சற்று ஓய்வாக அமர்ந்திருந்தாள்.
“என்ன பாட்டி, ஆவணி ஞாயிற்றுக் கிழமையும், அதுவுமா ஊரே மணக்குது. எங்களையும் கூப்பிட்டிருந்தா நாங்களும் வந்து சாப்பிட்டிருப் போமுல்ல....” என்று கேட்டபடியே வந்த அம்புஜம் பாட்டி அருகே வந்து அமர்ந்தாள்.
“ஏண்டியம்மா அம்புஜம்... வயசானவங்களுக்கு ஒன்ன மாதிரி பொண்ணுக ஒத்தாசையா இருப்பீங்களா... எங்கள சமைக்க சொல்லி நீங்க சாப்பிட ஆசைப்படுவீங்களா...” என்று அம்புஜம் எதிர்பார்த்தபடியே பாட்டி ஒரு பிடி பிடித்தாள்.
“ஒருவழியாக பாட்டியை சமாளித்த அம்புஜம், எங்க பாட்டி ... உடம்பு இருக்க இருக்க பெருத்துக்கிட்டே போகுது. கேட்டா தைராய்டுங்குறாங்க. ஒரு வேலையும் பார்க்க முடியல.. வீட்டுக்கு விலக்காகறதும் மாதா மாதம் தள்ளிக்கிட்டே போகுது. அதுதான் ஒங்ககிட்டே பார்த்து என்னன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்...” என்று சொன்ன அம்புஜத்தை பரிதாபமாக பார்த்தாள் பாட்டி.
“ஆம்பிளைங்கள விட பொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன அதிகமா வரக் காரணம், அவங்களுக்கு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்குறதுதாண்டி அம்மா. நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகும் போது, உடம்புல தேவையில்லாத இடங்கள்ல நிணநீர் அதிகமாக சேர்ந்து உடல் பருமனாகுது. இதுனால மாதவிடாய் தாமதமாகுறதுக்கும் கூட இது ஒரு முக்கிய காரணம். இதையெல்லாம் நம்ம கை வைத்தியத்துல சரிபண்ணிடலாண்டியம்மா.. பயப்படத் தேவையே இல்ல...”
இப்ப நாஞ் சொல்றத கவனமா கேட்டுக்க..
துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை இதுல 1 கைப்பிடி எடுத்து அதோட, அதிமதுரம், கருஞ்சீரகம், ஜடமாஞ்சி, வில்வவேர் தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-4, இதையெல்லாம் எடுத்து ஒண்ணா சேத்து கஷாயம் செஞ்சு சாப்பிட்டுக்கிட்டு வா.. எல்லாம் சரியாப்போகும்.. என்றாள் பாட்டி.
பாட்டிக்கு நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டு புறப்பாட்டால் அம்புஜம்.

Tuesday, May 26, 2015

படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்!

டீனியா (Tinea) என்ற பூஞ்சையினால் ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான் இதன் அறிகுறி. படர்தாமரை உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களில் விரைவாகத் தாக்கும். தலை, அக்குள், தொடை இடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையில் படர்தாமரை தாக்கும்போது ஆங்காங்கே வழுக்கையான திட்டுகள் காணப்படும். படர்தாமரை நகங்களைப் பாதிக்கும்போது நகங்கள் நிறம் மாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தொற்று நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சீப்பு, முகச்சவர உபகரணங்கள், ஆடைகள் மூலமாகவும், கழிவறைகள், குளியலறைகள், நீச்சல்குளம் மூலமாகவும் பரவும். செல்லப் பிராணிகள் மூலமாகவும் பரவும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
1. சீமை அகத்தி இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலந்து பூசலாம்.
2. கடுக்காய்த் தோல், இந்துப்பு, கிரந்திதகரம், அறுகம்புல், கஞ்சாங்கோரை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, மோர்விட்டு அரைத்துப் பூசலாம்.
3. புங்கம் விதையை அரைத்துப் பூசலாம்.
4. பூண்டை அரைத்து தேன் சேர்த்துப் பூசலாம்.
5. அருகம்புல்லுடன் மஞ்சளை அரைத்துப் பூசலாம்.
6. நிலாவாரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.
7. ஜாதிக்காயைத் தேன் விட்டு அரைத்துப் பூச, படர்தாமரை குணமாகும்.
8. சரக்கொன்றைத் துளிர், புளியந்துளிர், மிளகு சம அளவு எடுத்து, அரைத்துப் பூசலாம்.
9. பப்பாளி விதையைக் காடிநீர் விட்டு அரைத்துப் பூசலாம்.
10.சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச் சாறுவிட்டு அரைத்துப் பூசலாம்.
11. ஆகாயத் தாமரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.
12. குந்திரிக்கம் நல்லெண்ணெய் வெள்ளை மெழுகு வகைக்கு 32 கி எடுத்து சிறு தீயில் இட்டு, உருக்கி, வடிகட்டி, ஆறிய பின் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.
13. யூகலிப்டஸ் இலையில் உள்ள சினியோல், பிசைமின் ஆகிய வேதிப்பொருட்கள் படர்தாமரையை உருவாக்கும் பூஞ்சையை அழிக்கின்றன. யூகலிப்டஸ் தைலத்தைப் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.
14. துளசி இலையை உப்புடன் சேர்த்துப் பூசலாம்.
15. சிவனார் வேம்பு இலையையும் பூவையும் அரைக் கைப்பிடி அளவு எடுத்து, சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்த, படர்தாமரை குணமாகும்.
16. மாதுளம் பழத்தோல், வல்லாரை இலை சம அளவு எடுத்து காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.
கிராம்பை நீர்விட்டு அரைத்துப் பூச, படர் தாமரை குணமாகும்.
17. லவங்கப் பட்டையை நீர் விட்டு மையாக அரைத்துப் பூசலாம். பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, படர்தாமரையை அழிக்கும்.
கடைப்பிடிக்க வேண்டியவை
1. படர்தாமரை வராமல் தடுக்க தோல், நகங்கள், தலைமுடி ஆகியனவற்றைச் சுத்தமாகவும் உலர்வாகவும் பராமரிக்க வேண்டும்.
2. உலர்வான, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
3. பிறர் பயன்படுத்திய ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.
http://vembady.com/


Sunday, May 24, 2015

கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள் !!!

குழந்தைகளை விரும்பாதார் இவ்வுலகில் உண்டோ? திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தம்பதிகளின் பெற்றோர் விரும்புவர். இரண்டு ஆண்டுகள் சச்தோஷமாக இருந்துவிட்டு பின் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இப்போதுள்ள இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைப்பேறு என்பது நாம் எண்ணிய வண்ணம் நடக்காது. உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்கின்றனர். ஏனெனில் இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள், வலிமை குறைந்து, மன அழுத்தம் அதிகரித்து, நல்ல இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவாறு இருக்கின்றன. எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், கீழே குறித்துள்ள ஆலோசனைகளை பின்பற்றி வந்தால், அவை கருவுறும் திறனை மேம்படுத்தும்.
1.குளிர்ச்சியான சூழல்
ஆண்களின் விந்தணுக்கள், குளிர்ச்சியான சூழலில் நன்கு உற்பத்தியாகின்றன. மடியிலேயே கணிப்பொறியை வைத்துக் கொண்டு பணிபுரியும் ஆண்களுக்கு, விந்துக்களின் உற்பத்தி மற்றும் கருத்தரிக்கும் திறன் குறைவாக இருக்கும். மேலும் ஆண்கள் நீண்ட நேரம், வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்நீரில் குளித்தவர்கள், குளிர்ந்த நீரில் குளிக்கத் தொடங்கியதால், ஆண்களின் விந்தணு உற்பத்தி ஐந்து மடங்காகப் பெருகியதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உடலை இறுக்கிப் பிடிக்கும், கால் சட்டைகளைத் தவிர்த்து, தொளதொளவென்றிருக்கும், பாக்ஸர் கால் சட்டைகளை அணிய வேண்டும்.
2.சூரிய வெளிச்சத்தில் குளிக்கவும்
சூரிய வெளிச்சமானது, வைட்டமின் டி-யை உற்பத்தி செய்யவும், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆண், பெண் என இருபாலாருக்குமே தான். மேலும் பெண்களுக்கான பாலின ஹார்மோன்களான மாத விலக்கை நெறிப்படுத்தும், புரோஜெஸ்டிரோன் மற்றும் கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் ஈஸ்டிரோஜென் ஆகியவற்றின் அளவை அதிகரிக்க வைட்டமின் டி உதவுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக வைட்டமின் டி-யானது, ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
3.மன அழுத்தத்தைக் குறைக்கவும்
பதட்டமும், மன அழுத்தமும், பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிரணு உற்பத்தி வீதத்தையும் மட்டுப்படுத்துகின்றன. மேலும், பாலியல் இச்சையையும் குறைக்கின்றன.
4.பால் பொருட்களை சாப்பிடவும்
முழுக் கொழுப்புள்ள பாலை, பெண்கள் தினமும் பருகி வந்தால், மலட்டுத்தன்மையானது 25% க்கு மேல் குறைந்ததாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களின் கருமுட்டைப்பைகள் நன்கு வேலை செய்ய, இந்த பால் கொழுப்புக்கள் உதவுகின்றன.
5.மல்டி வைட்டமின் மாத்திரைகள்
கருவுறுதலுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 மற்றும் செலினியம் ஆகியவை அடங்கிய மல்டி வைட்டமின் மருந்து மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால், கருவுறும் திறன் இரண்டு மடங்கு அதிகமாகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
6.புகைப்பிடிப்பதை நிறுத்தவும்
புகைப்பிடிக்கும் ஆண்கள் மலட்டுத்தன்மை அடைய 50% வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களது உயிரணு எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே இருக்கும். புகைப்பிடிக்கும் பெண்கள் புகைப்பிடிக்காத பெண்களை விட 30% குறைவாகவே கருத்தரிக்கும் விகிதத்தைப் பெறுகின்றனர். ஏனெனில் புகைப்பது, கருப்பையில் சிசு தங்குவதைத் தடுக்கிறது.
7.மது அருந்தும் முன் யோசிக்கவும்
குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அருந்தும் மதுவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அதிக அளவு மது அருந்துவது கருமுட்டை உற்பத்தியையும், விந்தணு உற்பத்தியையும் வெகுவாகப் பாதிக்கின்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
8.மென்பொருட்கள்
தற்போது நிறைய மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், மாதவிலக்கு நாட்காட்டி, கருத்தரிக்க வழிகாட்டி, (Period Diary, Fertility Friend, Menstrual Calendar) போன்றவை உடல் வெப்பம், பருவ சுழற்சி ஆகியவற்றைக் கொண்டு கணக்கிட்டு, எந்தத் தேதியில், தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கும். ஆகவே இதுபோன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி, உறவில் ஈடுபடுவது நல்லது.
9.தாம்பத்திய உறவு
வாரத்தில் ஒரு முறை தாம்பத்திய உறவு கொள்ளும் தம்பதியருக்கு கருவுறும் வாய்ப்பு 15% அதிகரிப்பதாகவும், அதுவே வாரத்திற்கு மூன்றிலிருந்து நான்கு முறை தாம்பத்திய உறவு கொள்ளும் தம்பதியர்க்கு கருவுறும் வாய்ப்பு 50 % அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. தாம்பத்திய உறவானது ஆண் உயிரணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ஆண்களின் உயிரணுக்களானது மூன்று நாட்களுக்கு மேல் உடலிலேயே தங்கியிருந்தால், அதன் தரம் குறைகிறதாம்.
10.ஓவுலேசன் கால்குலேட்டர்
பெண்களது மாதவிலக்கு சுழற்சியின் அடிப்படையில், குழந்தை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ள நாள்களைக் கணக்கிட்டு அறிந்து கொள்ளுங்கள். சராசரியாக 28 நாள்கள் மாதவிலக்கு சுழற்சி உள்ள பெண்களுக்கு, 10 ஆம் நாள் முதல் 17 ஆம் நாள் வரையான காலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நாள்களாகும். இத்தகைய நாட்களின் கணக்கீட்டை ஓவுலேசன் கால்குலேட்டர் மூலம் தெரிந்து கொண்டு, பின் அதற்கேற்றாற் போல் உறவில் ஈடுபட்டால், விரைவில் கருத்தரிக்கலாம்
11.எடையைக் குறைக்கவும்
உடல் கொழுப்பானது ஈஸ்டிரோஜென் எனப்படும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது கருமுட்டை உற்பத்தி முறையை குழப்பிவிடும். குறைந்த எடை உடைய பெண்களை விட அதிக எடையுள்ள பெண்கள் சீரற்ற மாதவிலக்கு சுழற்சியைக் கொண்டிருப்பார்கள். எனவே எடையை 5% குறைத்தால், அது கருவுறும் திறனை 20% அதிகரிக்கும்.
12.மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டாம்
எடையைக் குறைக்க வேண்டும் என்று பட்டினி கிடந்து ஒல்லியாக ஆகி விடக்கூடாது. மேலும் ஒல்லியாக இருக்கும் பெண்கள் நன்கு சாப்பிட்டு கொஞ்சம் சதைப்பற்றுடன் இருக்க முயல வேண்டும். ஏனெனில், கருவுறுதலுக்கும் கருவுற்ற பின், சிசுவைப் பாதுகாக்கவும் கொழுப்பு தேவை. அத்தகைய கொழுப்பு தேவையை விடக் குறைவான அளவு இருக்குமேயானால், அது கருவுறும் வாய்ப்பை அடைத்துவிடும்.
13.கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்கவும்
அதிக அளவு கார்போஹைட்ரேட் கொண்டுள்ள உணவுப் பொருட்களான வெள்ளை ரொட்டி, பாஸ்தா, பிஸ்கட்டுகள் ஆகியவை கருத்தரித்தலைப் பாதிக்கின்றன என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர். இவ்வுணவுப் பொருட்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டி, அதன் காரணமாக இன்சுலின் தேவையை அதிகரிக்கச் செய்துவிடுகின்றன. அதிகமான இன்சுலின் கருவுறுதலைப் பாதிக்கலாம்.
14.மீன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்
எண்ணெய் நிறைந்த மீனான சால்மன் மற்றும் ஆளிவிதையில் காணப்படும், ஒமேகா 3s கொழுப்பானது, கருச்சிதைவிற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும், ஆண்களுக்கான உயிரணுவின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான ஹார்மோன் செயல்பாட்டிற்கு, இக்கொழுப்பு மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம்மில் பலர் இதைப் போதிய அளவு எடுத்துக் கொள்வதில்லை.
15.காபியைக் குறைக்கவும்
ஒருநாளைக்கு ஒரே ஒரு காபி அருந்துவது கருவுறும் திறனைப் பாதியாகக் குறைத்துவிடுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுகின்றன. காபியிலுள்ள காஃப்பைன், சினைப்பைகளிலிருந்து கருப்பைக்கு கருமுட்டைகளை எடுத்துச் செல்லும் வழியான ஃபெலோப்பியன் குழாய்த் தசைகளின் செயல்பாட்டைக் குறைப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
16.வலி நிவாரணி மருந்துகளைக் குறைக்கவும்
கருமுட்டை உற்பத்தியாகும் தருணங்களில், மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும் பாராசிட்டமல், ஆஸ்பிரின் போன்றவற்றினை வாங்கி உட்கொள்ளுதல், கருவுறுதலைப் பாதிக்கும். ஏனெனில் அது ஃபெலோப்பியன் குழாய்களிலிருந்து கருமுட்டைகளை விடுவிக்க உதவும் ஹார்மோனான, ப்ரோஸ்டாகிளாண்டினை மட்டுப்படுத்திவிடும்.
17.அதிகம் தண்ணீர் குடிக்கவும்
உடலின் முக்கிய பாகங்களுக்குத் தேவையான தண்ணீர் செல்கிறதா என்று உடல் கவனிக்கும். எனவே பெண்கள் தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், இனப்பெருக்க மண்டலம் தனது பணியை சரிவர செய்யாமல் இருந்துவிடும். மேலும் கருமுட்டைக்கும், கருப்பையைச் சுற்றிலும், அதிக அளவு இரத்த ஓட்டத்தை தண்ணீர் தான் உருவாக்கும். ஆனால் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லையெனில், ஆண் உயிரணுக்கள் மிதந்து சென்று கருமுட்டையை அடைய பயணிக்க உதவும், செர்விக் திரவம், செயலற்றதாகிவிடும்.
18.வீட்டு வேலைகளைச் செய்யவும்
வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் அல்லது சிறு சிறு உடற்பயிற்சிகள் ஆகியவற்றைச் செய்து கொண்டேயிருக்கும் பெண்கள், ஒரு உடல் உழைப்பும் இல்லாத பெண்களை விட, IVF மூலம் கருத்தரிப்பதற்கு, மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளவர்கள் என்று புதிய ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன. ஏனெனில், உடற்பயிற்சியின் விளைவாக அதிகமான இன்சுலின் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. அதிகமான இன்சுலின் சுரப்பது ஆரோக்கியமான கருமுட்டைகள் உருவாவதற்குக் கேடுவிளைவிக்கும் என்று நம்பப்படுகிறது.
http://helthyourhand.blogspot.in/

குழந்தைப் பேறுக்கு இயற்கை வழிகள் !!!

திருமணமாகி ஒரு வருடம் இல்வாழ்க்கையில் ஈடுபட்ட பிறகும் குழந்தைப் பேறு இல்லை என்றால், அதை மகப்பேறுயின்மை என்பார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் சாதாரணமாக இல்வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். சில நேரங்களில் ஒரு குழந்தை பிறக்கும், அடுத்த குழந்தை பிறப்பதில் சிரமம் இருக்கும். இந்த நேரத்தில் உடல் ரீதியான, மன ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும். பெண் என்று எடுத்துக்கொண்டால் கர்ப்பாசயத்தை வந்து சேர்ந்தடைந்த ஆர்த்தவ பீஜம் நீடித்து வாழாமல் போவது, இந்த பீஜமானது கர்ப்பாசயத்தில் சரியாகப் படியாது, சினை முட்டை கர்ப்பப் பையை வந்து அடையாதது போன்ற காரணங்களும், மேலும் antiphospholipid syndrome, கட்டிகள், ரத்தம் உறையும் நோய்கள், சர்க்கரை நோய், ஊட்டச்சத்து இன்மை, கர்ப்பப் பைக் கட்டிகள், அதிக உடல் எடை, முக்கியமாக PCOD என்ற நோய், சினைமுட்டையில் நீர்க்கட்டு, பெண்ணுறுப்பு அழற்சி என்ற Pelvic inflammatory disease, endometriosis என்று சொல்லக்கூடிய யோனியின் திசு பிற பகுதிகளுக்குப் பரவுதல், தைராய்டு நோய் போன்றவை காரணமாகின்றன.
பெண்களுக்கு progesterone, FSH பார்க்க வேண்டும். தினமும் காலையில் உடல் சூட்டை நிர்ணயிக்க வேண்டும். Anti mullerian hormone போன்றவற்றைச் செய்ய வேண்டும். கர்ப்பப் பைக் குழாய் (fallopian tube) அடைப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
சிகிச்சை முறைகளில் பொதுவாகப் பெண்களுக்குச் சினை முட்டை உருவாகாமல் போனால் அங்கே சினை முட்டையை உருவாக்குவதற்கு சதகுப்பை, எள், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவற்றைக் கொடுப்போம். சிறுதேக்கு, திருதாளி, குமாரியாஸவம், ஜீரகாரிஷ்டம், சீரகக் குழம்பு, குறிஞ்சிக் குழம்பு போன்றவை சிறந்த மருந்துகளாகும். மலை வேம்பாதி எண்ணெயால் குடலைச் சுத்தி செய்ய வேண்டும். Endometrial thickness அதாவது கர்ப்பப் பையின் கனம் 5 மி.மீக்குக் குறைவாக இருந்தால் அதுவும் பிரச்சினை. IVF போன்றவை செய்ய இயலாது. அந்த இடத்தில் க்ஷேத்ர துஷ்டி என்று எடுத்து ஆலமொட்டு பால் கஷாயம், பலசர்ப்பீஸ், தாதுகல்ப லேகியம், பூர்ண சந்திரோதயம் போன்றவற்றைக் கொடுப்போம். மூக்கில் நஸ்யம் - மூலிகை சிகிச்சை இடுவோம். பலா அஸ்வகந்தாலாக்ஷாதி தைலம் வைத்து அப்யங்க ஸ்நானம் செய்யச் சொல்லுவோம்.
பெண்களுக்கு...
l மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.
l ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும்.
l ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
l கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும்.
l வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.
l அரச மரத்து இலையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட அல்லது அத்தி விதையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட endometrial thickness அதிகரிக்கிறது
l உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.
l இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.
l சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது.
l அதிக ரத்தப்போக்கு உள்ள நிலைகளில் சதாவரி லேகியம் கொடுக்கலாம்.
ஆண்களின் குறைபாடு என்று எடுத்துக்கொண்டால் விந்துக்களின் எண்ணிக்கை குறைதல். இது 20 million sperm per milliliter இருக்க வேண்டும். ஆனால் 80, 90 என்றெல்லாம் பார்த்திருக்கிறோம். இப்போது அது மேலும் குறைந்துகொண்டே இருக்கிறது. விந்து வெளியேறாமல் இருத்தல், விந்தின் உருவ அமைப்பில் மாறுபாடு இருத்தல், பிறவிக் குறைபாடுகள், புற்றுநோய்க்கு எடுக்கும் மருந்துகள், அதிகமான உஷ்ண நிலையில் வாழ்தல், மதுபானம் அருந்துதல், ஆண்மைக் குறைபாடு, சில ஆங்கில மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுதல், அதிக உடல் எடையுடன் இருத்தல், விந்து வெளியேறும் நேரத்தில் வெளியேறாமல் மேல்நோக்கி நகருதல், வயது இவையெல்லாம் காரணங்கள். 30 வயதுக்குக் கீழுள்ள தம்பதிகள் தினமும் இல்வாழ்க்கையில் ஈடுபட்டால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. 20 வயதில் கர்ப்பம் அடையும் வாய்ப்பு அதிகம். 35 வயதுக்கு மேல் குழந்தை பிறக்கும் வாய்ப்புக் குறைவு. அதனால்தான் ஆயுர்வேதத்தில் இளவயதில் திருமணம் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனை என்று எடுத்துக்கொண்டால் ஆண்களுக்கு ஐந்து நாட்கள் உடலுறவு கொள்ளாமல் இருந்துவிட்டு விந்துப் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆண்களுக்குக் குறைபாடு என்று வந்தால் விந்துகளின் அணுக்களைக் கூட்டுவதற்கு அஸ்வகந்தா, பூனைக் காலி, பால்முதப்பன், ஜாதிக்காய், முருங்கை வித்து, பாதாம் பருப்பு, பிஸ்தா, சிறுநாகப்பூ போன்றவை பயன்படுகின்றன. விந்துகளின் முன்னோக்கிச் செல்லும் தன்மையை அதிகரிக்க சேராங்கொட்டையின் மேல் தோடு, வெற்றிலைச் சாறு, பூர்ண சந்திரோதயம், கஸ்தூரி, கோரோசனை போன்றவை பயன்படுகின்றன. உருவ அமைப்பைச் சரியாக்க யாபன வஸ்தி எனப்படும் ஆசனவாய் வழியாகச் செலுத்தக்கூடிய பாலால் காய்ச்சப்பட்ட ஆமணக்கு வேர் கஷாயம் பயன்படுகிறது. இது அல்லாமல் கைமருந்தாகப் பல மருந்துகள் உள்ளன அவற்றை நாம் பார்ப்போம்.
ஆண்களுக்கு...
l வெற்றிலை போடும்போது கூடவே துளசி விதையைப் பொடி செய்து சேர்த்துச் சாப்பிட்டால் தாது கட்டும்.
l நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இவை மூன்றையும் நசுக்கிப் போட்டு கஷாயம் செய்து குடித்தாலும், அமுக்கரா கிழங்குப் பொடி அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து கொடுத்தாலும் தாது பலப்படும்.
l வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளைப் பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 48 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும்
l ஓரிதழ் தாமரை, ஜாதிக்காய், துளசி, ஆலம் கொழுந்து, முள் இலவம் பிசின், அம்மான் பச்சரிசி, கொத்தமல்லி இந்தச் சேர்க்கையானது asthenospermia என்று சொல்லக்கூடிய விந்து முன்னோக்கிச் செல்லக்கூடிய குறைபாட்டைப் போக்கும்.
l முருங்கைப் பிசினைப் பாலில் காய்ச்சி கற்கண்டு சேர்த்து அல்லது சின்ன வெங்காயம் ஆகியவற்றை நெய்யில் வதக்கிக் கொடுத்து வர ஆண்மை பலம் அதிகரிக்கும்.
l பூசணி விதை, வெள்ளரி விதை, சாரைப் பருப்பு, நீர்முள்ளி விதை, அக்ரோட் பருப்பு, பருத்திக் கொட்டை, மதனகாமப்பூ, பிஸ்தா பருப்பு, பூனைகாலி விதை, மகிழம் விதை, கல் தாமரை விதை இவற்றை விந்து குறைப்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.
l பிருங்கராஜ ஆஸவம் விந்து துஷ்டிகளுக்குப் பலனைத் தருகிறது.
l விந்துவில் பழுப்பணுக்கள் இருந்தால் வெட்டிவேர், சந்தனம், சிறுநாகப்பூ, மருதம்பட்டை கஷாயம் வைத்துக் கொடுக்க பலன் கிடைக்கும்.
= டாக்டர் எல். மகாதேவன்
http://tamil.thehindu.com/

சினைப்பை (சூலக) நீர்க்கட்டி (PCOD - PCOS) !

Poly (பாலி) என்பது பல
Cyst (சிஸ்ட்டிக்) எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டி.
OVARY (ஓவேரியன்) எனப்படுவது பெண்களின் சூலகம்.
Disease (டிஸீஸ்)என்பது நோய்.
ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இது கரு முட்டைகளை (அண்ட அனுக்கள்) உருவாக்கி கருவாக்கம் நடைபெற்று குழந்தை உருவாகிறது.
ஒரு பெண்ணின் சூலகத்திலே நீர் கட்டிகள் பல உருவாவதே Poly Cystic Ovarian Disease (PCOD) எனப்படுகிறது.
Poly Cystic Ovarian Disease ஆனது பல அறிகுறிகளை (Syndrome) உருவாக்குகிறது. அந்த அறிகுறிகள் Poly Cystic Ovarian Syndrome (PCOS) என்று அழைக்கப்படுகிறது.
அறிகுறிகள்
- குழந்தையின்மை - சூலகத்தில் சிறு சிறு நீர் கட்டிகள் பரவலாக காணப்படுவதால் சினை முட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது. இதனால் பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.
- ஹார்மோன் குறைபாடு - சூலக நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் தன்மை ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.
- ஒழுங்கற்ற மாதவிடாய் - சூலக நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக வராது. 2 - 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி வரும். சிலருக்கு இரத்தப்போக்கு குறைவாக இருக்கும். சிலருக்கு மிகுதியாக இருக்கும்.
- முகத்தில் முடி வளர்தல் - ஆண்மைத் தன்மை பெண்களுக்கு ஏற்படுவதால் ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் (மேலுதடு, கீழ்தாடை) முடி வளர ஆரம்பிக்கிறது. உடலிலும் (மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, கைகளில்) முடி வளரலாம்.
- எடை அதிகரித்தல் - மாதவிடாய் தள்ளிப்போவதால் உடல் எடை அதிகரிக்கிறது..
- முகப்பரு வரலாம்.
- நிற மாற்றம் - உடலில் சில இடங்களில் (கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதி) கருமை நிறம் அதிகரித்து காணும்.
இந்த அறிகுறிகள் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இருக்கும் என்றில்லை. சூலக நீர்க்கட்டிகள் இருக்கும் போதே குழந்தைகள் பல பெற்ற பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தை பெற்ற பின்பு கூட சூலக நீர்க்கட்டிகள் வரலாம்
காரணம்
சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்
- நோய்க்கான காரணத்தை இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
- பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.
- வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
- கருத்தரிக்க இயலாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.
ஆய்வக பரிசோதனைகள்
ஸ்கேன் செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.
ஹார்மோன்கள் சோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.
ஆலோசனைகள்
- உடல் எடையை குறைத்தல் - உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
- உணவு கட்டுப்பாட்டு - அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும், தவிர்த்தல் நல்லது. காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
- புகை - புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும்.
மருத்துவம்
மாதவிடாய் சீராக வெளிப்படுதலைத் தூண்ட நவீன மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.
ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ப ஹோமியோபதி மருந்துகள் உட்கொள்வதின் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் ஹோமியோபதி சிறப்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.
எப்போது மருத்துவரை சந்திக்கவேண்டும்
- 14 வயதாகியும் மாதவிலக்கு ஆரம்பிக்காவிட்டால்.
- ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய் ஏற்படுகிறது என்றால்.
- மார்பு , முகம் போன்ற இடங்களிலே முடி வளர்ந்தால்.
- உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்
- அளவுக்கு அதிகமாக முகப் பரு ஏற்பட்டால்.
- கழுத்து மற்றும் அக்குள் தொடை பகுதிகளிலே கருமை நிறமாற்றம் காணப்பட்டால். உடனே மருத்துவரை சந்திக்கவும்.
சித்த வைத்தியம் என்ன சொல்கிறது ?
சினைப்பை நீர்க்கட்டி : சித்த மருத்துவம் மாயமாக்கும்
பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். பெரும்பாலும் இன்று. சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டி தான் முதல் காரணமாக இன்று கற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சினைப்பை நீர்க்கட்டிகள் (poly cystic ovary) குறித்த தேவையற்ற அலாதி பயமும் உள்ளது. மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. ”பாலி சிஸ்டிக் ஓவரி”, என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.
இது தவிர பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும். சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவை எடுத்துக் கொள்வதும் நல்லது.
மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும். சிறிய வெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிட உதவும்.
Opinion 2
சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லது பயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
பிரச்னைக்குக் காரணம் என்ன? சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்க வேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின் அடையாளம். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம் காரணமாக சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
நவீன மருத்துவமும் இதற்கு "ஹைப்பர் இன்ஸýலினிமியா'வைத்தான் காரணம் எனக் கருதி சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.
எடை குறைய...: தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு வேகமான நடை, பிராணாயாமப் பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சி ஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும். மூலிகைத் தைல பிழிச்சல், மூலிகைப் பொடிகள் மூலம் மசாஜ், பஞ்சகர்மா சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
உணவு முறை என்ன?
பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல் எடையை அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்க வேண்டும். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவே உயர்த்தும் உணவை ("லோ கிளைசமிக் ஃபுட்ஸ்') சாப்பிட வேண்டும். கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். வெந்தயம், பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம் ஆகியவை சினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும் உதவும்.
சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகு ஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.
மீசை வளர்வது ஏன்?
சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண் ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரோன் அதிக அளவில் சுரக்கும்; இதனால்தான் தேவையற்ற இடங்களில் மீசை வளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது.
சினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே, கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது. பிரச்னையைத் தீர்க்க தாற்காலிகமாக உதவும் அலோபதி மருந்துகளைக் காட்டிலும், சரியான உணவு - உடற்பயிற்சி - யோகா - சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மூலம் சினைப்பை நீர்க்கட்டி துன்பம் முற்றிலுமாக நீங்கும்.
http://helthyourhand.blogspot.in/