Thursday, October 2, 2014

பஞ்சகவ்யம்

ய பூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.
தயாரிப்பு முறை
தேவையான பொருட்கள்
1. பசுஞ்சாணம்-5 கிலோ,
2. பசுவின் கோமியம்-3 லிட்டர்,
3. பசும்பால்-2 லிட்டர்,
4. பசு தயிர்-2 லிட்டர்,
5. பசு நெய்-1 லிட்டர்,
6. கரும்புச்சாறு-1 லிட்டர்,
7. தென்னை இளநீர்-1 லிட்டர்,
8. வாழைப்பழம்-1 கிலோ.
பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.
• 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.
• ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.
வேளாண்மையில் பயன்பாடு
1. பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.
2. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்
பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
பயன்படுத்தும் முறை
ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களுக்கு தெளிக்கலாம்
நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/

சித்த மருத்துவக் குறிப்புகள்

1.நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.2.தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3.தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4.தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5.வாய் நாற்றம்:
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
6.உதட்டு வெடிப்பு:
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
7.அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
8.குடல்புண்:
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
9.வாயு தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
10.வயிற்று வலி:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
11.மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
12.சீதபேதி:
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
13.பித்த வெடிப்பு:
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
14.மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
15.சரும நோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
16.தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
17.மூலம்:
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
18.தீப்புண்:
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
19.மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
20.வரட்டு இருமல்:
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/

மாதவிலக்கு பிரச்னை தீர…மருத்துவ டிப்ஸ்!


* கொய்யா இலை, மாதுளம் இலை, மாந்தளிர் இலை மூன்றையும், சம அளவு எடுத்து, ஒன்றாக சாப்பிட்டால் மாத விலக்கு பிரச்னை தீரும்.
* மாதவிலக்கு சிக்கல் தீர, காட்டு கருணைக் கிழங்கை பசும்பால் சேர்த்து அரைத்து, ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், மாதவிலக்கு உண்டாகும்.
* முருங்கை கீரையுடன், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து, சூப் செய்து ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் மாதவிலக்கு உண்டாகும்.
நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/

முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி:உணவே மருந்து

செய்முறை விளக்கம் – Siddha medicine
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில்
கோலை ஊன்றி குறுகி நடப்பவனும்
கோலை வீசி குலாவி நடப்பானே …
சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.
சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.
நிலம், நீர் ,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்து கின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.
வாதம் – காற்று – 1,மாத்திரை அளவு -
பித்தம் – நெருப்பு – 1/2,மாத்திரை அளவு-
கபம் – நீர் – 1/4-மாத்திரை அளவு -
இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறையவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.
வாதம் – காற்று – 1, மாத்திரை அளவு ——— சுக்கு
பித்தம் – நெருப்பு – 1/2, மாத்திரை அளவு——— இஞ்சி
கபம் – நீர் – 1/4, மாத்திரை அளவு ——– கடுக்காய்
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.
சுக்குக்கு புற நஞ்சு – கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் , கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.
சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.
கடுக்காய் சுத்தி ; கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.
இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .
இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.
உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்) எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.
இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.
நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/

ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம்

வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.
மரக்கன்றுகளைப் பரிசாகத் தருவது பரவலாகிவரும் சூழ்நிலையில், தனக்குத் தெரிந்தவர்களுக்குப் பயன்மிக்க மூலிகைச் செடிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.
சுற்றுச்சூழல், சுகாதாரச் சீர்கேடுகள், உணவுப் பழக்கம் போன்றவற்றால் சளி, இருமல், காய்ச்சல், பூச்சிக்கடி, அஜீரணம் என நமக்கு அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு தொந்தரவுகளுக்குக்கூட மருத்துவரைத் தேடி ஓடுவது சாதாரணமாகிவிட்டது.
சின்ன இடம் போதும்
“வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம்.
வெற்றிலைச் செடி
அடுக்குமாடிக் குடியிருப்போ, தனி வீடோ-வரண்டா, மொட்டை மாடி, வாசல் படிக்கட்டு எனச் சூரியஒளி படும் இடம் கொஞ்சமாவது இருக்கும். மூலிகைச் செடிகளை வளர்க்க அந்த இடம் போதும். அதுவும் இல்லாவிட்டால் பரவாயில்லை, 5 அடிக்கு 5 அடி இடமிருந்தால்கூட போதுமானதே. துளசி, ஓமவல்லி, கற்றாழை, திருநீற்றுப் பச்சிலை, இன்சுலின் செடி, லெமன் கிராஸ், சிறிய நங்கை, தூதுவளை, வெற்றிலை, கீழாநெல்லி என அடிக்கடி பயன்படும் மூலிகைச் செடிகளைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்” என்கிறார் அல்லிராணி.
மூலிகை பயன்கள்
துளசி: சளி, இருமல், காய்ச்சலுக்கு எளிய மருந்து. தினமும் இரண்டு இலைகளைப் பறித்துச் சாப்பிட்டு வரலாம்.
ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி: இலைச் சாறு எடுத்து அருந்தினால் சளி, இருமல் நிற்கும். சக்கையை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும். மருத்துவக் குணத்துக்காக இலைகளைத் துவையலாக அரைத்துச் சாப்பிடுபவர்களும் உண்டு.
சோற்றுக் கற்றாழை: தோலை நீக்கிவிட்டு நடுப்பகுதியில் இருக்கும் வழவழப்பான சோறை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் சூடு தணியும். முகத்தில் தேய்த்துக் கொண்டால் பொலிவான தோற்றம் கிடைக்கும். சாறை அருந்தினால் உடல் குளிர்ச்சி பெறும்.
திருநீற்றுப் பச்சிலை: முகப்பரு தொல்லையில் இருந்து தப்பிக்கவும், பூச்சி கடிக்கும் பயன்படும். பூச்சி கடித்த இடத்தில் இரண்டு சொட்டு சாறு விட்டால் போதும்.
இன்சுலின் செடி: இலை ஒருவித புளிப்புச் சுவையுடன் இருக்கும். இது நீரிழிவு பாதிப்பைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
தான் வளர்க்கும் செடிகளுடன் அல்லிராணி
“இதெல்லாம் நாம மறந்து போன பாட்டி வைத்தியம்தான். இந்த மூலிகைச் செடிகளை பக்கத்துத் தோட்டங்களில் இருக்கலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் நர்சரிகளில் கேட்டுப் பார்க்கலாம். ஒரு கன்றின் விலை அதிகபட்சம் ரூ. 20 இருக்கும். அத்தியாவசியமான 10 செடிகளைத் தேர்வு செய்தால், ரூ.300 மட்டுமே செலவாகும்” என்றார் அல்லிராணி.
ஆரோக்கியம் காக்கும் மூலிகைச் செடிகளை வளர்த்து உடல்நலம் காப்போம். தி ஹிந்து.
நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/

பித்தப்பை கல் நோய் நீங்க

இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஓன்று. இதை ஆங்கிலத்தில் (Gallstones )என்பார்கள். இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது என்றால், உணவு முறை தான் முதல் காரணம். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல்,உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.
அது போல் இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அரை.நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது.
அவையாவது கொழுப்பு,பித்தச்செம்பசை,பித்த உப்பு. இது சுரந்து அதை குடல் வழியாக நம் உணவோடு சேர்த்துவிடும்.மேலும் இது உருவாவதற்கு பல வகையான கரங்கள் உண்டு.
அவற்றை கீழே பாப்போம்.
1) இந்த நோயானது நம் குடுமபத்தில் யாருக்காவது இருந்தது என்றல். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்பு உள்ளது.
2) உடல் பருமன் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. உடல் பருமனானவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உண்டாகிறது.அந்த கொழுப்பானது பித்தபையை காலியாக இருக்கவிடாது.
3) எசுத்தோசென்(Estrogen): இது கொழுப்பை அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தபையை அசைய விடாமல் அதன் செயல் பாடுகளை குறைக்கும். மாசமாக உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை எடுத்து கொண்டவர்கள், ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்புகள் அதிகம்.
4) இனம் சம்பந்தமாக பூர்வீகம் உள்ளவர்களுக்கு இந்த நோய் வர வாய்புகள் அதிகம்.பூர்வீக அமெரிக்கர்களுக்கு மற்றும் மெகசிகோ அமெரிக்கர்களுக்கும் இந்த நோய் பரவலாக வரும் வாய்ப்பு உள்ளது.
5)பாலினம் மற்றும் வயதும் ஒரு முக்கிய காரணம். இந்த நோய் வயதான பெண்களை அதிகமாக தாக்கும்.
6)போதையான கொழுப்பு பொருள் பித்தத்தில் கொழுப்பை அதிக படுத்தும்.இது போன்று நிகழும் போது கொழுப்பு கற்கள் உருவாகும்.
6) நீரிழிவு: நீரழிவை த்டுபதற்காக கையலபடுகிற முறைகளினால் இரத்தத்தில் கொழுப்பு உண்டாகும். இந்த வகை பித்தப்பை கல் மிக மோசமானது.
இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டும்.
நோன்பு நோர்பதினால் பித்தப்பை சுருங்கும்.
இந்த நோயின் அறிகுறிகள்:
1) மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின் மேற்புறத்தில் வலி உண்டாகும்.
2) குமட்டுதல்: இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும்.
3) வாந்தி உண்டாகும்.
4) உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயு தொல்லை உண்டாகும், அசீரணம் பிரச்சனைகள் உண்டாகும்.
மருத்துவம்:
இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.
முடிந்த வரை இந்த மருந்தை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் உடன் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் தெரியபடுத்துங்கள். மேலும் இந்த மருந்தை உபயோக படுத்தியவர்கள் தங்களின் அனுபவத்தை என்னிடம் தெரிய படுத்து மாறு கேட்டு கொள்கிறேன்.
இறைவன் உங்களுக்கு பூரண குணம் அளிப்பானாக.
தகவல்,நன்றி :-http://mohamedushama.wordpress.com/
---------------------------------------------------------------------------------------
கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

From Baskar Jayaraman:
என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.
இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.
ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.
அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.
என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…….கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.
பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.
பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.
திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.
விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.
அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.
செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.
கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.
அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.
செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்…..
ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்…..கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.
பயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த “மதர் மிரா” வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது……………
தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
http://www.sriaurobindoashram.org/visitors/guesthouse/ghlist.php
மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx?ContentURL=_StaticContent%2FSriAurobindoAshram%2F-03+The+Ashram%2FDepartments%2FSchool+For+Perfect+Eyesight%2F-00+Contents.htm
*
நன்றி: சகோ. ஹுஸைனம்மா
பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY
PHONE: 0413-2233659
EMAIL: auroeyesight@yahoo.com
auroeyesight@vsnl.net
Posted by ஆரூரன் விசுவநாதன் http://arurs.blogspot.in/2010/02/blog-post.html